Sunday, June 4, 2023 3:41 am

சத்தீஸ்கரில் நடந்த குண்டுவெடிப்பில் 11 பேர் பலியான சோகம்..!

spot_img

தொடர்புடைய கதைகள்

ஒடிசா ரயில் விபத்து: பிரதமர் மோடி நேரில் ஆய்வு

ஒடிசாவில் நேற்று (ஜூன் 2) இரவு 3 ரயில்கள் மோதிய விபத்தில்...

ஒடிசா ரயில் விபத்து : காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இரங்கல்

காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவர்கள், ''நேற்றிரவு ஒடிசாவில் ஏற்பட்ட கோர ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அரசியல்...

ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் : வெளியான பரபரப்பு தகவல்

நேற்று 3 ரயில்கள் அடுத்தடுத்து கவிழ்ந்து விபத்தானதைக் குறித்து விசாரணை நடைபெற்று...

இந்த நூற்றாண்டின் மிக மோசமான ரயில் விபத்து இது : மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேட்டி

நேற்று இரவு ஒடிசாவின் பாலசோர் பகுதிக்கு வந்த கோரமண்டல் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்நிலையில்,...
- Advertisement -

சத்தீஸ்கர் மாநிலத்தில் தன்டேவாடா என்ற இடத்தில் மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல்கள் வந்துள்ளது. இதன் காரணமாக , அப்பகுதியில் காவலர்கள் தங்களது ரோந்து பணியை மேற்கொண்டு வந்தனர். அப்போது திடீரென காவல் வாகனத்தில் வெடிகுண்டை குறி வைத்து வீசியுள்ளனர். அந்த குண்டுவெடிப்பு சம்பவம் பாஸ்டர் என்ற இடத்தில் நேர்ந்துள்ளது.

இந்த காவல் வாகனத்தில் பயணித்த 10 போலீசார், ஒரு ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். இதுகுறித்து விசாரணையில் இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டது மாவோயிஸ்ட் தான் முதற்கட்டமாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும், இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் வாழும் மக்கள் மனதில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அங்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருவதால் அம்மாநில அரசு பாதுகாப்பை பலப்படுத்தி வருகிறது.

மேலும், இந்த குண்டுவெடிப்பில் இறந்த 11 பேரின் குடும்பங்களுக்கு அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகல் அவர்கள் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். பின்னர் அவர் இந்த தாக்குதலுக்கு கட்டாயம் பதிலடி கொடுக்கப்படும் என கூறியுள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்