Tuesday, June 6, 2023 10:32 pm

விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பரிமாற சென்னை உயர்நீதிமன்றம் தடை விதிப்பு..!

spot_img

தொடர்புடைய கதைகள்

மெட்ரோ பயணிகளுக்கு அதிரடி கட்டண தள்ளுபடி வழங்கியது மெட்ரோ நிர்வாகம்

சென்னை மெட்ரோ இரயில் சேவைகளைப் பயன்படுத்தப் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், நாளை...

கோயிலில் புகைப்படம் எடுக்க தடை விதிக்க முடியாது : ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரையில் மீனாட்சி கோயில் நிர்வாகம் கடந்த சில நாட்களுக்கு முன் கோயில்...

தமிழக ஆளுநர் ரவிக்கு எதிராக அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி

கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் உதகையில்...

பாஜக, காங்கிரஸ் தமிழகத்தில் ஆட்சியமைக்க முடியாது : அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் ராஜன் செல்லப்பா பேச்சு

அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் ராஜன் செல்லப்பா அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டியில்,...
- Advertisement -

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 18ஆம் தேதியில் சட்டப்பேரவையில் தமிழக அரசு திருமண மண்டபங்கள் விளையாட்டு மைதானங்களிலும் மதுபானம் பரிமாறலாம் என சட்டத்தை கொண்டு வந்தது. இதற்கு பல கட்சிகள் மற்றும் தமிழக அரசின் கூட்டணி காட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதனையடுத்து இனி திருமண மண்டபங்களின் மதுபான பரிமாற கூடாது என சட்டத்தை திரும்ப பெற்று கொண்டது தமிழக அரசு.

ஆனால் தமிழகத்தில் உள்ள வணிக வளாகங்கள், மாநாடு நடைபெறும் இடங்கள், அரங்குகள், விருந்து மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள் ஆகியவற்றில் மதுபானம் வைக்கவும், விற்கவும் இருந்து வந்த நிலையில், தற்போது இங்கும் மதுபான விற்க தடை விதிக்க வேண்டும் என சமூக நீதி பேரவை தலைவர் கே.பாலு அவர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.

இதுகுறித்து இன்று விசாரித்த நீதிபதி அவர்கள் இனி சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானம் பரிமாற இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என கூறி ஜூன் 14-ம் தேதிக்கு வழக்கை தள்ளிவைத்துள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்