தளபதி 68 கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது. இதற்கு காரணம் நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் விரைவில் முடிவடையவுள்ளது. படமும் அக்டோபரில் வெளியாக உள்ளது. இதனால் விஜய் அடுத்த படத்தை எந்த இயக்குனராக எடுக்கப் போகிறார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். தளபதி அடுத்ததாக யாருடன் இணைய வேண்டும் என அனைவரும் தங்கள் விருப்பத்திற்கு குரல் கொடுத்து வருகின்றனர். சமீபத்தில் கிராக், வீரசிம்ம ரெட்டி போன்ற படங்களை இயக்கிய தெலுங்கு இயக்குநர் விஜய்யிடம் கதை சொல்லியிருக்கிறார்.
கடந்த பத்து வருடத்தில் நான்கு படங்கள் மட்டுமே இயக்கியுள்ள அட்லீ. முதல் இரண்டு படம் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய லாபத்தைப் பெற்றுத் தந்தது. விஜய் நடிப்பில் அடுத்தடுத்து வெளியான மெர்சல் மற்றும் பிகில் ஆகிய இரண்டு படங்களுமே வியாபார ரீதியில் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் இதன் பின்பு பெரிய பட்ஜெட் படம் எடுப்பதையே கைவிட்டு விட்டனர்.
அந்த அளவுக்கு தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய சேதாரத்தை ஏற்படுத்தும் வகையில், மெர்சல், பிகில் போன்ற படங்களில் நிர்ணயிக்கப்பட்ட பட்ஜெட்டை மீறி, பணத்தை வீண் விரையும் செய்தது தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியவர் அட்லீ. தற்பொழுது சாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தை இயக்கி வருகிறார் அட்லீ. இந்த படத்தை சொந்தமாக தயாரிக்கிறார் ஷாருக்கான், படப்பிடிப்பில் பணத்தை வீண் விரயம் செய்கிறார் அட்லீ என்கிற தகவல் ஷாருக்கான் கவனத்துக்கு சென்றுள்ளது.இதனை தொடர்ந்து தயாரிப்பு நிறுவன பொறுப்பாளர்களை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிட்டுள்ளார் ஷாருக்கான். படப்பிடிப்பிற்காக வாடகைக்கு எடுக்கப்படும் ஜெனெரேட்டர், லைட், மற்றும் இதர பொருட்கள் பயன்படுத்தாமல் சும்மாவே இருக்கிறது, மேலும் செட் போட்டு ஒரு காட்சி கூட எடுக்காமல் செட் பிடிக்கவில்லை என்று பிரிக்க சொல்லியுள்ளார் அட்லீ, இது போன்று பணத்தை வீண் விரயம் செய்து வந்துள்ளார்.
மேலும் வாடகைக்கு எடுக்கும் பொருட்கள், மற்றும் செட் அமைக்கும் கம்பெனி அகியோரிடம் இருந்து அட்லீ கமிஷன் வாங்குவதாக ஷாருகானுக்கு தகவல் சென்றுள்ளது. உடனே அட்லீயை அழைத்து, இந்த படத்திற்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்ய தயார், ஆனால் பயனுள்ளதாக இருக்க வேண்டும், வீண் விரயம் செய்ய கூடாது, பல பொருட்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டு பயன்படுத்தமலே உள்ளது என அட்லீயிடம் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார் ஷாருகான்.
இந்நிலையில் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது, கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜயை நேரில் சந்தித்த அட்லீ புதிய படத்திற்கான கதை ஒன்றை விஜய்யிடம் தெரிவித்து அந்த கதையை விஜய் ஓகே செய்துள்ளார். இதனை தொடர்ந்து லியோ படத்தை முடித்துவிட்டு அடுத்து விஜய் நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பு அட்லீக்கு உறுதி செய்யப்பட்டது,
விரைவில் ஜவான் படத்தை முடித்துவிட்டு அடுத்து விஜய் நடிக்க இருக்கும் புதிய படத்தின் முழு ஸ்கிரிப்ட் தயார் செய்துவைக்கவும விஜய் அட்லீயிடம் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் விஜய் நடிக்கும் அடுத்த படத்தை தயாரிப்பதற்கு பல தயாரிப்பாளர்கள் முட்டி மோதி வந்தாலும் கூட, விஜய் – அட்லீ இணையும் படத்தை தயாரிக்க பெரிய தயாரிப்பு நிறுவனம் யாரும் ஆர்வம் காட்டவில்லை, ஆனால் அட்லீ அல்லாத வேறு ஒரு இயக்குனர் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தை எங்களுக்கு கொடுக்க வேண்டும் என விஜய்யிடம் நேரடியாக பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் கேட்டு வளர்கிறார்கள்.
அந்த வகையில் ஏற்கனவே விஜய் – அட்லீ இயக்கத்தில் வெளியான பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் மீண்டும் விஜயின் கால் சீட்காக நீண்ட காலமாக காத்திருக்கிறார்கள். இந்நிலையில் அட்லீ இயக்கும் விஜய் நடிக்க இருக்கும் படத்தை தயாரிப்பதற்கு ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு கொடுக்க முன்வந்த விஜய், அதற்கான பேச்சவார்த்தையில் ஏஜிஎஸ் நிறுவனத்திடம் நடத்தியுள்ளார் விஜய்.
ஆனால் ஏஜிஎஸ் நிறுவனம், சார் உங்க கால் சீட் எங்களுக்கு வேண்டும் ஆனால் அட்லீ இயக்கும் படம் வேண்டாம் என ஓப்பனாக தெரிவித்துள்ளார்கள். என்னுடைய கால் சீட் வேண்டும் ஆனால் அட்லீ இயக்கும் படம் என்றால் வேண்டாம், என்ன இது என ஷாக்கான விஜய், அதற்கான காரணத்தையும் ஏஜிஎஸ் நிறுவனத்திடம் கேட்டுள்ளார். இதன் பின்பு அட்லீயின் பல போர்ஜரி வேலைகளை விஜய்யிடம் புட்டு புட்டு வைத்துள்ளது ஏஜிஎஸ் நிறுவனம்.
பிகில் படத்தின் போது, கமிஷன் கிடைக்கிறது என்பதற்காக பணத்தை எப்படியேல்லாம் வீண் விரயம் செய்தார் அட்லீ, குறிப்பிட்ட தேதிக்குள் படத்தை எடுத்து முடிக்காததால் நிர்ணயம் செய்யப்பட்ட பட்ஜெட்டை விட மேலும் பட்ஜெட் அதிகரித்தது, பிகில் படம் நல்ல வசூலை பெற்று தந்தாலும் கூட, நிர்ணயம் செய்யப்பட்ட பட்ஜெட்டை விட அதிகம் செலவு ஆனதால் தங்களுக்கு நஷ்டம் தான் ஏற்பட்டது என்றும், இதற்கு முழு காரணம் அட்லீ தான் பல விஷயங்களை விஜய்யிடம் ஏஜிஎஸ் நிறுவனம் விளக்காமாக தெரிவித்துள்ளது.
இதன் பின்பே தான் அடுத்து நடிக்க இருக்கும் படத்தில் இருந்து அட்லீயை வெளியேற்ற முடிவு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அட்லீயை நம்பி நாம் அவருக்கு வாய்ப்பு தருகிறோம், தன்னை நம்பி பட தயாரிப்பாளர்கள் பல கோடி முதலீட்டில் படம் எடுக்கிறார்கள், ஆனால் தன்னை நம்பிய தயாரிப்பளருக்கு அட்லீ கமிஷனுக்கு ஆசை பட்டு அதிக செலவை இழுத்துவிடுவது, அட்லீயை நம்பி வாய்ப்பு கொடுத்த எனக்கு செய்யும் துரோகம் என மிகவும் விஜய் வருத்த பட்டதாக கூறப்படுகிறது.
விஜய் தனது 67வது படமான லியோ இன் காஷ்மீரில் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஆக்ஷன் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். சென்னையில் அடுத்த ஷெட்யூலை மீண்டும் தொடங்கும் முன் படம் தற்போது இடைவேளைக்கு இடையில் உள்ளது. இருப்பினும், அவரது அடுத்த படத்தைப் பற்றி ஏற்கனவே சமூக ஊடகங்களில் சில சலசலப்புகள் உள்ளன, விஜய் படத்திற்கு ஒரு அரிய நிகழ்வு, அவர் தற்போதைய திட்டத்தை முடிக்காமல் புதிய படங்களில் நடிக்கவில்லை. புதிய சலசலப்பு என்னவென்றால், தளபதி 88 புதுப்பிப்புகள் வரவுள்ளன, மேலும் சமீபத்திய முன்னேற்றங்கள் விஜய் தனது வெற்றிகரமான ஒத்துழைப்பாளர்களில் ஒருவருடன் மீண்டும் கைகோர்ப்பதைக் கூறுவதால் ரசிகர்கள் உற்சாகமாக இருக்கலாம்.