Tuesday, April 16, 2024 8:17 am

அஜித் 62 லேட்டஸ்ட் அப்டேட் !அஜித் ரசிகர்களே கொண்டாட்டத்திற்கு ரெடியா மாஸ் அப்டேட்.!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான அஜித்தின் துணிவு திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் புதிதாக ஈர்க்கப்பட்ட அஜித், அதே வேகத்தில் தனது அடுத்த படத்தையும் தொடங்க முடிவு செய்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கிய AK62 ஜனவரியில் தயாரிப்பு தொடங்குவதற்கு சற்று முன்பு திடீரென கைவிடப்பட்டது. இது கோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் பிறகு மகிழ் திருமேனியை AK62 இயக்குநராக ஒப்பந்தம் செய்தனர்.

மகிழ் திருமேனியும் அஜித்திடம் ஒரு வரி கதையை சொன்னால் அஜித்துக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், முழுக்கதையையும் சொன்ன பிறகுதான் படத்தின் படப்பிடிப்பை தொடங்க முடியும் என்று கூறிய அஜித், தற்போது திரைக்கதை மற்றும் வசனம் எழுதும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் மகிழ் திருமேனி.

அஜித்தின் துணிவு படத்திற்கு பிறகு அவருடைய ஏகேஅஜித் 62 படத்திற்கான எந்த அப்டேட்டுகளும் இன்று வரை சரியாக வரவில்லை.முதலில் இப்படத்தை இயக்குவது யார் என்று பெரிய பிரச்சினை இருந்த பொழுது அதற்கு தீர்வாக மகிழ் திருமேனி இயக்கப் போகிறார் என்பது உறுதியாக வெளிவந்தது. அதன் பின் அந்த படத்திற்கான அப்டேட்டுகள் ஒவ்வொன்றாக வெளிவரும் என்று எதிர்பார்த்த நிலையில் இன்னும் அது குறித்து எந்த செய்தியும் இன்று வரை வெளிவராமல் தாமதமாகி இருக்கிறது.

இதற்கிடையில் ஏகே 62 படத்தின் கதையை ரெடி பண்ணுவதற்காக அஜித், இயக்குனருக்கு தனியாக ஒரு ஆபீஸை ஆரம்பித்து கொடுத்தார். இப்படி இருக்கையில் இதற்கான எந்த விஷயங்களும் சரியாக அமையாததால் அஜித் பொறுமையை இழந்ததால் வேர்ல்ட் டூரை தொடங்கிவிட்டார். இது அவர் ஏற்கனவே பிளான் பண்ணி வைத்திருந்தார் அதனால் மறுபடியும் போக ஆரம்பித்து விட்டார்.

ஆனால் இவர் போகும்போது படத்திற்கு செய்ய வேண்டிய வேலைகளை நீங்கள் தயார் பண்ணி வைத்துக் கொள்ளுங்கள் நான் இந்த மாத இறுதியில் வந்து விடுவேன் என்று சொல்லி கிளம்பி விட்டார். அதே மாதிரி இயக்குனர் சைடும் கதைகள் எல்லாம் ஓரளவுக்கு ரெடியாக நிலையில் இப்படத்தின் டைட்டில் காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஏனென்றால் இப்படத்தின் தயாரிப்பாளர் லைக்கா நிறுவனம், தயாரிப்பாளர் சங்கத்தின் பொறுப்பில் இருப்பதால் அங்கே எலக்சன் வேலைகள் நடைபெறுவதால் அதில் மும்பரமாக வேலை பார்த்து வருகிறார். இருந்தாலும் அஜித்தின் பிறந்தநாள் அன்று படத்திற்கான முக்கிய அப்டேட்டுகள் வெளியிடுவதற்காக படக்குழுவினர் அனைவரும் தயாராகி வருகிறார்கள்.

அத்துடன் இப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகளையும் தொடங்குவதற்கு முடிவெடுத்து இருக்கிறார்கள். அதனால் கூடிய விரைவில் இதற்கான அப்டேட்டுகளை எதிர்பார்க்கலாம். கண்டிப்பாக அஜித் பிறந்தநாள் அன்று அவருடைய ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக ஏகே62 படத்திற்கான டைட்டிலை வெளியிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் துணிவு படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு இவ்வளவு பெரிய இடைவேளை இல்லாமல் இருந்திருந்தால் சூட்டோட சூட்டாக ஏகே 62 படத்தை பற்றி நாலா பக்கமும் பேசிக் கொண்டிருப்பார்கள். அதே நேரத்தில் அஜித்தின் ரசிகர்களுக்கும் திருப்தியை கொடுத்திருக்கும். இப்பொழுது அஜித் ரசிகர்களுக்கு மே 1 அன்று டபுள் ட்ரீட்டாக இருக்கப்போகிறது.

அஜித் நடித்த படங்களிலேயே அதிக பொருட்செலவில் உருவான படம் ஏகே62. இது அஜித்தின் நட்சத்திர அந்தஸ்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் AK62 திரைப்படம் ஆக்‌ஷன் திரில்லர் படமாக உருவாகவிருப்பதாகவும், இப்படம் அஜித்தை மிகவும் ஸ்டைலாக காட்டும் என்றும் ரசிகர்கள் முதல் கோலிவுட் வட்டாரங்கள் வரை அனைவரும் எதிர்ப்பார்த்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்