Friday, December 1, 2023 6:10 pm

கமலால் கௌதமி மகளுக்கு ஏற்பட்ட சோகம்! கமலை விட்டு பிரிய முக்கிய காரணமே இது தான் கெளதமி !

spot_img

தொடர்புடைய கதைகள்

பிரபு ராம் வியாஸுடன் மணிகண்டன் நடிக்கும் அடுத்த படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

முன்னதாக, நடிகர் மணிகண்டன், அறிமுக திரைப்பட தயாரிப்பாளர் பிரபு ராம் வியாஸுடன்...

விஜய் சேதுபதி மற்றும் மிஷ்கின் படத்தின் பூஜை புகைப்படம் வைரல் !

வி கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் கலைப்புலி எஸ் தாணு தயாரித்த அடுத்த...

நடிகை ஆர் சுப்பலட்சுமி காலமானார்

வியாழன் அன்று திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகர் சுப்பலட்சுமி திருவனந்தபுரத்தில் காலமானார்....

மிஷ்கின் – விஜய் சேதுபதி படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் இதோ !

நடிகர் விஜய் சேதுபதி, இயக்குனர் மிஷ்கினுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக நாம் முன்பே...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பழம்பெரும் நடிகரான கமல்ஹாசன் தனது கடைசியாக வெளியான ‘விக்ரம்’ மூலம் அனைவரின் தலைகளையும் திருப்பினார், மேலும் அதிரடி நாடகம் நடிகரின் பாக்ஸ் ஆபிஸ் சக்தியை நிரூபித்தது. மூத்த நடிகர் அடுத்ததாக ‘இந்தியன் 2’ ஐ வழங்க தயாராகி வருகிறார், மேலும் அவர் படத்தின் படப்பிடிப்பிற்காக தென்னாப்பிரிக்காவிற்கு செல்கிறார். தைவானில் சில நாட்கள் படப்பிடிப்பை முடித்துவிட்டு ‘இந்தியன் 2’ படக்குழு தென்னாப்பிரிக்கா சென்று தங்களது வெளிநாட்டு ஷெட்யூலைத் தொடரச் சென்றுள்ளது. தீவிர ரயில் ஆக்‌ஷன் காட்சி தென்னாப்பிரிக்காவில் படமாக்கப்படும் என்றும், குழு கிட்டத்தட்ட 20 நாட்களுக்கு ஆப்பிரிக்க நாட்டில் படப்பிடிப்பில் ஈடுபடும் என்றும் கூறப்படுகிறது.

உலகநாயகன் கமலஹாசன் இன்று சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய உச்சத்தை தொட்டியிருந்தாலும் அவருடைய சொந்த வாழ்க்கை என்பது எப்போதுமே பேசும் பொருளாக தான் இருக்கிறது. அவர் சினிமாவில் வந்த காலத்தில் இருந்தே பல நடிகைகளுடன் காதலில் கிசுகிசுக்கப்பட்டார். மேலும் இதில் ஒரு சில காதலை அவரே கூட பொதுவெளியில் ஒப்பு கொண்டிருக்கிறார். என்னுடன் நடித்த ஒரு சில நடிகைகளை நான் காதலித்து திருமணம் செய்ய ஆசைப்பட்டது உண்டு என்று அவரே கூறியிருக்கிறார்.

முதலில் வாணி கணபதி என்னும் பரதநாட்டிய கலைஞரை காதலித்து திருமணம் செய்த கமலஹாசன் ஒரு சில வருடங்களிலேயே அவரை விவாகரத்து செய்தார். பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருந்த சரிகாவை இவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். லிவிங்கில் இருந்த இவர்கள் ஸ்ருதிஹாசன் பிறந்த பின்பு தான் திருமணமே செய்து கொண்டார்கள்.சரிகா உடனான திருமணத்திற்கு பின்பும் அவ்வப்போது நடிகைகள் உடன் கிசுகிசுக்கப்பட்டு வந்தார் கமலஹாசன். இதனால் சரிகாவும் கமலை விவாகரத்து செய்தார். அதன் பின்னர் அவருடன் நம்மவர் மற்றும் தேவர் மகன் போன்ற படங்களில் நடித்த நடிகை கௌதமி விவாகரத்திற்கு பிறகு இந்தியா திரும்பி இருந்தார். அவருக்கு அப்போது புற்றுநோய் பாதிப்பு இருந்தது. அந்த நேரத்தில் கமல் அவருக்கு ஆதரவும், உதவியும் செய்தார். பின்னர் இருவரும் திருமணம் செய்யாமலேயே ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தனர்.

இதற்கிடையில் பாபநாசம் திரைப்படத்தில் இருவரும் இறுதியாக ஒன்றாக சேர்ந்து நடித்தனர். அதன் பின்னர் விஸ்வரூபம், தூங்காவனம் போன்ற படங்களின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்தார் கமலஹாசன். அந்த நேரத்தில்தான் கமலை விட்டு பிரிவதாக கௌதமி மீடியா முன் தெரிவித்தார். இது எல்லோருக்கும் சற்று அதிர்ச்சி தரும் விஷயமாகவே இருந்தது.கமல்ஹாசனுடன் தான் இறுதியாக வாழ்ந்த நாட்களில் சுயமரியாதையை இழந்து தான் வாழ்ந்தேன் என்று மனம் நொந்து சொல்லியிருக்கிறார். மேலும் கௌதமி அதற்கு முந்தைய கமல்ஹாசனின் படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணி புரிந்தது அனைவரும் அறிந்த விஷயம்.

அதில் தசாவதாரம், விஸ்வரூபம் போன்ற படங்களுக்கு கமலஹாசன் கொடுக்க வேண்டிய சம்பளத்தை கௌதமிக்கு கொடுக்கவில்லையாம். மேலும் கமலின் நடவடிக்கைகளும் மொத்தமாக மாறிப் போயிருந்ததாம். இதனால் தான் கமல்ஹாசனை விட்டு பிரிந்து விட்டதாக அவருடன் பல வருடங்கள் மனம் ஒத்து வாழ்ந்த கௌதமி சொல்லி இருக்கிறார். அப்போது மீடியாக்கள் இவர்கள் இருவரது பிரிவுக்கு நடிகை பூஜா குமார் தான் காரணம் என்று கூட சொல்லின.

ஷங்கர் இயக்கத்தில், 1996 ஆம் ஆண்டு வெளியான ‘இந்தியன்’ படத்திற்குப் பிறகு இயக்குனர் கமல்ஹாசனுடன் மீண்டும் இணையும் படம் ‘இந்தியன் 2’. காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், விவேக், பாபி சிம்ஹா மற்றும் காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார், மேலும் முதல் சிங்கிள் படத்தின் அடுத்த அதிகாரப்பூர்வ வெளியீட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்