Thursday, June 8, 2023 4:33 am

யாருமே எதிர்பாக்காத 4 இளம் இயக்குனர்களை டிக் செய்த அஜித் !அடுத்தடுத்து 2 படம்!

spot_img

தொடர்புடைய கதைகள்

போர் தொழில் படத்தை பற்றிய லேட்டஸ்ட் ஹாட் அப்டேட் இதோ !

அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் நடித்துள்ள போர் தோழில் ஜூன் 9...

தோனி தயாரித்த முதல் படமான எல்ஜிஎம் படத்தின் டீசர் இதோ !

ஹரிஷ் கல்யாண் தனது வரவிருக்கும் எல்ஜிஎம் படத்தின் படப்பிடிப்பை முடித்திருந்தார். படத்தின்...

ஜெயம் ரவியின் இறைவன் படத்தின் ரிலீஸ் தேதி இதோ !

இத்திரைப்படம் ஆகஸ்ட் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என இறைவன்...

போர் தோழில் படத்தின் சென்சார் பற்றிய லேட்டஸ்ட் ஹாட் அப்டேட் இதோ !

போர் தோழில் ஜூன் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வரவுள்ளது. வெளியீட்டிற்கு...
- Advertisement -

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான அஜித்குமார், தனது தந்தை பி சுப்பிரமணியத்தின் மறைவுக்குப் பிறகு கடினமான காலகட்டத்தை சந்தித்து வருகிறார். அஜித்தின் தந்தை வயது முதிர்வு காரணமாக மார்ச் 24, வெள்ளிக்கிழமை அன்று காலமானார். வலிமை நடிகரின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் திரைத்துறையைச் சேர்ந்த சகாக்கள் இந்த கடினமான காலங்களில் அஜித் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆதரவாக நின்றனர். இந்த மிகப்பெரிய தனிப்பட்ட இழப்பிற்குப் பிறகு, அஜித் குமார் தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட முடிவு செய்துள்ளதாகவும், தனது அனைத்து பணிகளையும் ஒத்திவைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது

அஜித் குமாரின் ஏ.கே. 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார், அனிருத் இசையமைப்பார் என லைகா நிறுவனம் கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் விக்னேஷ் சிவனை நீக்கிவிட்டு மகிழ்திருமேனியை ஒப்பந்தம் செய்தார்கள். ஆனால் அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. ஏப்ரல் மாதம் நல்ல செய்தி வரும் என லைகா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.கே. 62 பட அறிவிப்பு எப்பொழுது வெளியாகும் என அஜித் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அறிவிப்பு வராத நிலையிலும் சமூக வலைதளங்களில் #Ak62 #Ajith ஆகிய ஹேஷ்டேகுகள் தினமும் டிரெண்டாகி வருகின்றன. அதுவும் தேசிய அளவில் டிரெண்டாகிறது. மேலும் எந்த பட அப்டேட் வந்தாலும் சரி ஏ.கே. 62 பற்றிய பேச்சு மட்டும் அடங்கியபாடில்லை.

யோவ் லைகா அப்டேட் கொடுப்பியா மாட்டியா என அஜித் ரசிகர்கள் மிரட்டியும், கெஞ்சியும் பார்த்துவிட்டார்கள். ஆனாலும் ஒன்றும் நடக்கவில்லை. அஜித் ரசிகர்களின் நிலையை பார்த்து விஜய் ரசிகர்கள் கூட பாவப்படுகிறார்கள். இயக்குநர், தயாரிப்பாளர் மாறினாலும் இந்த அஜித் ரசிகர்களின் பரிதாப நிலை மட்டும் மாறவில்லை. தயவு செய்து அப்டேட் கொடுங்கள் என விஜய் ரசிகர்கள் கூட லைகாவிடம் கோரிக்கை விடுத்துவிட்டார்கள்.

அப்டேட் வருதோ, வரவில்லையோ அது இரண்டாவது விஷயம். ஏ.கே. 62 மீதான எதிபார்ப்பு கண்டமேனிக்கு எகிறிக் கிடக்கிறது. அஜித் படம் குறித்த அறிவிப்பை அனைத்து தரப்பு ரசிகர்களும் எதிர்பார்க்கிறார்கள். அறிவிப்பு வரும் நாளில் படத்தின் தலைப்பை வெளியிடுவார்கள். அந்த தலைப்பு நிச்சயம் டிரெண்டாகும் என்பதில் சந்தேகமே இல்லை.

அஜித்தின் தந்தை சுப்ரமணியம் மார்ச் 24ம் தேதி இறந்துவிட்டார். இதையடுத்து ஏ.கே. 62 படத்தின் ஷூட்டிங் தள்ளிப் போகும் என்று கூறப்பட்டது. ஆனால் தனக்காக படக்குழு காத்திருப்பதை அஜித் விரும்பவில்லையாம். இதையடுத்து மே மாதம் முதல் வாரத்தில் படப்பிடிப்பை துவங்க முடிவு செய்திருக்கிறார்களாம். அப்படியே அஜித் பிறந்தநாள் அன்று படப்பிடிப்பை துவங்கி வீடியோ, புகைப்படத்தை வெளியிடவும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏ.கே. 62 பட வேலையை முடித்துவிட்டு தன் பைக்கில் உலக டூர் போக திட்டமிட்டார் அஜித். அந்த பயணத்துக்கு பரஸ்பர மரியாதை பயணம் என்று பெயர் வைத்தார். தந்தை இறந்த நிலையில் தன் பைக் டூர் திட்டத்தை தள்ளி வைத்துவிட்டாராம். அஜித்தின் தந்தை அறிந்த செய்தி அறிந்ததுமே அவரின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறினார் விஜய். தான் அஜித் வீட்டிற்கு செல்வது பப்ளிசிட்டியாக மட்டும் மாறிவிடக் கூடாது என தன் டீமிடம் உத்தரவிட்டாராம் விஜய். இதையடுத்து நண்பர் விஜய்க்கு அஜித் ரசிகர்கள் நன்றி தெரிவித்தனர்.

அதனால் நடிகர் அஜித் தொடர்ந்து இது போல வித்தியாசமான கதை கொண்ட இயக்குனர்கள் உடன் படம் பண்ண இருக்கிறார். அதன் ஒரு பகுதியாக தன்னுடைய அடுத்த இரண்டு படங்களுக்கு இயக்குனரை தேடி வருகிறார். இதற்காக அவர் நான்கு பேரிடம் கதை கேட்டு இருக்கிறார் என்கிறார்கள்.

அதன்படி விக்ரம் வேதா படம் எடுத்த புஷ்கர்-காய்த்ரியிடம் அஜித் கதை கேட்டு உள்ளார். இவர்கள் ஒரு டான் கதையை கூறி இருப்பதாக தகவல்கள் வருகிறது. மேலும் திரில்லர் ஜானரில் கார்த்திக் நரேன் ஒரு கதையை அஜித்திடம் கூறி இருக்கிறார்.

இது இல்லாமல் இயக்குனர் விஷ்ணுவர்தன் ஒரு ஆக்சன் திரில்லர் கதை ஒன்றை அஜித்திற்கு சொல்லி உள்ளாராம். இந்த கதை அவருக்கு மிகவும் பிடித்துள்ளது என்று கூறுகிறார்கள். இன்னும் மாயா இயக்குனர் அஷ்வினிடம் அஜித் கதை கேட்க இருக்கிறார்.

இதனால் இந்த 4 இயக்குநர்களில் இரண்டு பேரை அஜித் தேர்வு செய்ய போகிறார் என்கிறார்கள். வரிசையாக அடுத்தடுத்து 2 படங்களில் நடிக்க உள்ளார். இரண்டு படத்தின் ஷூட்டிங் ஒரே நேரத்தில் துவங்க வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள்.

AK62 மே மாதம் முதல் அதன் வழக்கமான படப்பிடிப்பைத் தொடங்கும். இந்த கிரேஸி ப்ராஜெக்ட் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியாகும். கோலிவுட் ஹிட் மெஷின் அனிருத் ரவிச்சந்தர் இந்த அதிக பட்ஜெட் பொழுதுபோக்கிற்காக ஒலிப்பதிவு செய்யவுள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்