அஜீத் குமாரின் விசுவாசமான ரசிகர்கள், மாஸ் ஹீரோவின் அடுத்த படமான ‘ஏகே 62’ குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்டுக்காக காத்திருக்கின்றனர். இயக்குனர் விக்னேஷ் சிவனிடம் இருந்து மகிழ் திருமேனிக்கு மாறிய இந்த திட்டம் கடந்த இரண்டு மாதங்களாக பரபரப்பான முன் தயாரிப்பில் உள்ளது.
தமிழ் திரை உலகில் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் ‘தல’ என்ற கௌரவத்துடன் கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் அஜித் குமார். இவர் சிரிப்புக்கென்றே தமிழகத்தில் தனி ரசிகர் கூட்டம் உண்டு.
அந்த வகையில் தற்போது தல அஜீத் விழுந்து விழுந்து சிரித்திருக்கும் வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி ரசிகர்களிடையே அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
அதாவது தல அஜித்திற்கு நடிப்பு மட்டுமன்றி சமையல், போட்டோகிராபி, ஓவியம், பைக் ரேஸ், கார் ரேஸ், துப்பாக்கி சுடுதல் போன்ற பல விஷயங்களில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
மேலும் தனது பர்சனல் லைப்பையும், தனக்கு பிடித்த விஷயங்களையும், தனது சினிமா வேலைகளையும் கெத்தாக பேலன்ஸ் செய்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது அஜித் ஒரு நிகழ்ச்சியில் சூர்யாவுடன் இணைந்து விழுந்து விழுந்து சிரித்திருக்கும் வீடியோ இணையதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.
இவ்வாறு தல சிரிப்பதைப் பார்த்த ரசிகர்கள், இந்த வீடியோவை அதிகமாக ஷேர் செய்து அவரது சிரிப்பை கொண்டாடி வருகின்றனர்.
Good Morning Ajithians 🙏🏻 That Smile 😊, Such A Cute Person #Thala .#Valimai #ThalaAjith #MCTAFC pic.twitter.com/wnD2YXLdjq
— MALAYSIAN CITIZEN AJITH FANS COMMUNITY (@citizen_ajithfc) October 24, 2020
‘ஏகே 62’ படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கவுள்ளதாகவும், காஜல் அகர்வால், அருள்நிதி உள்ளிட்ட நட்சத்திரங்களுடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் நமக்குத் தெரியும். அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் நடிகர்கள் மற்றும் குழுவினர் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
‘AK62’ படத்தின் ஷூட்டிங் முடிந்தவுடன், ‘ரைடு ஃபார் மியூச்சுவல் ரெஸ்பெக்ட்’ என்ற தனது உலக பைக் சுற்றுப்பயணத்தின் இரண்டாம் கட்டத்தை தொடங்குவதாக அஜித் ஏற்கனவே அறிவித்துள்ளார்.