Tuesday, June 6, 2023 9:09 pm

தீடிரென எடப்பாடிக்கு வாழ்த்து கூறிய அஜித்! ஆடிப்போன எதிர்க்கட்சிகள் நடந்து என்ன ?

spot_img

தொடர்புடைய கதைகள்

ஆடுகளம் பட புகழ் கிஷோர் நடிக்கும் அடுத்த படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

ஆடுகளம் புகழ் கிஷோரின் அடுத்த படம். முகை எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு...

லைசென்ஸ் படத்தில் ராஜலட்சுமிக்கு மட்டும் வேறு சாய்ஸ் இல்லை ! இயக்குனர் வைத்த நம்பிக்கை

செந்தில் ராஜலட்சுமி கதாநாயகியாக நடிக்கும் ‘லைசென்ஸ்’ பட இசை மற்றும் டிரைலர்...

கால்பந்து வீரர் ரொனால்டோ ஸ்டைலில் அசத்தும் அஜித் மகன் ஆத்விக் : வைரல் புகைப்படம் இதோ !

அஜீத் குமார் கடந்த மூன்று தசாப்தங்களாக தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்....

மிகவும் எதிர்பார்த்த லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம்?

பரபரப்பான இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் numero uno இசையமைப்பாளர் அனிருத்...
- Advertisement -

அதிமுகவின் பொதுச் செயலாளராக பதவியேற்கும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் அஜித்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, சி.விஜயபாஸ்கர் ஆகியோர் புதன்கிழமை அஜீத்தை ஈஞ்சம்பாக்கம் இல்லத்தில் சந்தித்து ஆறுதல் கூறினர். இந்த நேரத்தில், அஜித்துடன் பேச அமைச்சர் இபிஎஸ்க்கு டயல் செய்தார்.

நடிகர் அஜித்குமாரை பொறுத்தவரைக்கும் அவர் சினிமாவில் வந்த காலத்தில் இருந்தே பொதுவாக பெரிய அளவுக்கு ஆடம்பரத்தையும் புகழையும் விரும்பாதவர்.

ரசிகர்களை வைத்து நடிகர்கள் கெத்து காட்டி கொண்டிருக்கும்போது, அந்த ரசிகர் மன்றத்தையே கலைத்தவர் இவர். மேலும் தன்னுடைய படங்களில் மாஸ் காட்டுவதற்காக அரசியல் பேசாத ஒரே நடிகர் என்று கூட இவரை சொல்லலாம்.

படத்தின் பிரமோஷன், பேட்டி, பொது நிகழ்ச்சிகள் மற்றும் எந்த ஒரு அரசியல் நிகழ்வுகளிலும் இவர் கலந்து கொள்ள மாட்டார். முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி முன்னிலையில் ஒரு விழாவின் போது நடிகர்களை இது போன்ற நிகழ்வுகளுக்கு அழைப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள் என்றும், நாங்கள் எங்கள் வேலையை மட்டும் செய்ய விரும்புகிறோம் என்றும் ரொம்பவும் தைரியமாக சொன்னவர் அஜித் குமார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ரொம்பவும் பிடித்த நடிகர் அஜித்குமார் தானாம். அஜித்தை எப்படியாவது தன்னுடைய வாரிசாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்று கூட ஜெயலலிதா விரும்பினாராம். ஆனால் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டதாக கூட செய்திகள் வெளியாகி இருக்கின்றன. அந்த அளவுக்கு தன்னை எந்த ஒரு அரசியலும் சாராத தனி மனிதனாக காட்டிக் கொள்ளவே அஜித் விரும்பினார்.

அப்படி இருக்கையில் சமீபத்தில் அஜித் குமார் ஒரு அரசியல் தலைவருக்கு வாழ்த்து சொல்லி இருக்கும் செய்தி ஒட்டுமொத்த சினிமா வட்டாரத்தை மட்டுமல்லாமல் அரசியல் வட்டாரத்தையும் அதிர்ச்சியில் உறைய செய்திருக்கிறது. தற்போது நடிகர் அஜித் அந்த அரசியல் தலைவரிடம் பேசியதுதான் சமூக வலைதளங்களில் பயங்கர வைரலாகி கொண்டு இருக்கிறது. தமிழகத்தின் பெரும்பான்மை கட்சிகளில் ஒன்றான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக கட்சியின் பொதுச் செயலாளராக உச்ச நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டிருக்கும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தான் நடிகர் அஜித் வாழ்த்து சொல்லி இருக்கிறார். அஜித்தின் அப்பா சமீபத்தில் தவறிவிட்டார் அதற்கு ஆறுதல் சொல்வதற்கு தான் இபிஎஸ் அவருக்கு போன் செய்திருக்கிறார்.

அந்த உரையாடலின் போது தான் அஜித் எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்துக்கள் சொல்லி இருக்கிறார். மேலும் இபிஎஸ் சார்பில் முக்கியமான அரசியல் தலைவர்கள் அஜித்தின் திருவான்மியூர் வீட்டுக்கு நேரில் சென்று அவருக்கு ஆறுதல் சொல்லி இருக்கின்றனர். தற்போது இந்த நிகழ்வு தான் தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அவர்களின் தொலைபேசி உரையாடலில், இபிஎஸ் தனது தந்தை சுப்ரமணியத்தின் மறைவு குறித்து நடிகருடன் தனது துயரத்தைப் பகிர்ந்து கொண்டார். “விஸ்வாசம்” நடிகர் ஈபிஎஸ் அதிமுகவின் முதல்வராக வர வேண்டும் என்று வாழ்த்தினார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்