Friday, June 2, 2023 4:10 am

இன்றுவரை மேடைக்கு வராத அஜித்.. அதிகமாக பரவிய இரண்டு காரணங்கள் இதோ !

spot_img

தொடர்புடைய கதைகள்

எறும்பு படத்தின் சிக்கு புக்கு சிக்கு பாடல் இதோ !

எறும்பு படத்தின் முதல் சிங்கிள் சிங்கிள் சிக்கு புக்கு சிக்குவை புதன்கிழமை...

கமலின் இந்தியன் முதல் பாகத்தை விட ’10 மடங்கு பெரியது’ இந்தியன் 2 சித்தார்த் கூறிய உண்மை !

சித்தார்த் தனது வரவிருக்கும் படமான இந்தியன் 2 பற்றி உற்சாகமாக இருக்கிறார்,...

தங்கலான் படத்தை பற்றி முக்கிய அப்டேட்டை கூறிய மாளவிகா மோகன் !

தங்களன் மிகவும் பாராட்டப்பட்ட பா ரஞ்சித் இயக்கத்தில் வரவிருக்கும் பிரம்மாண்டமான படம்....

கமலின் இந்தியன் 2 படத்தை பற்றிய முக்கிய அப்டேட் இதோ

கமல்ஹாசனின் இந்தியன் 2 சென்னையில் ஒரு முக்கியமான கால அட்டவணையை முடித்துள்ளதாக...
- Advertisement -

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான அஜித்குமார், தனது தந்தை பி சுப்பிரமணியத்தின் மறைவுக்குப் பிறகு கடினமான காலகட்டத்தை சந்தித்து வருகிறார். அஜித்தின் தந்தை வயது முதிர்வு காரணமாக மார்ச் 24, வெள்ளிக்கிழமை அன்று காலமானார். வலிமை நடிகரின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் திரைத்துறையைச் சேர்ந்த சகாக்கள் இந்த கடினமான காலங்களில் அஜித் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆதரவாக நின்றனர். இந்த மிகப்பெரிய தனிப்பட்ட இழப்பிற்குப் பிறகு, அஜித் குமார் தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட முடிவு செய்துள்ளதாகவும், தனது அனைத்து பணிகளையும் ஒத்திவைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கே பிடிக்கும் நடிகர் என்றால் அது தல அஜித் தான். அவரது குணத்திக்காகவே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தல அஜித் 1993-ம் ஆண்டு வெளிவந்த அமராவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதன்பிறகு ஆசை, பவித்ரா போன்ற படங்களில் நடித்தாலும் ஸ்டார் அந்தஸ்து பெற வில்லை.

தல அஜித் தற்போது முழுவதுமாக பேட்டி கொடுப்பது, ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு செல்வது போன்றவற்றில் நிறுத்திவிட்டார். அது குறித்து பல வதந்திகள் பரவின. இருந்தும் முக்கியமாக இரண்டு காரணங்கள் கூறப்பட்டது. அதில் முதலாவது, 1999-ம் ஆண்டு அஜித் மற்றும் மீனா நடிப்பில் வெளியான ஆனந்தபூங்காற்றே திரைப்படத்திற்காக அஜித்திற்கு சிறந்த புதுமுக நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.

அப்பொழுது தொகுப்பாளர்கள் அஜித் மற்றும் மீனாவை மேடையில் ஆட சொல்ல, நேரடியாக மேடையேறி வந்த மீனாவின் தாயார், ரஜினி மற்றும் கமல் உடன் ஜோடி போட்ட என் மகள் உன்னுடன் நடனமாடினால் சரியாக வராது என பொது மேடையிலேயே அசிங்கப்படுத்தி உள்ளார். இது ஒரு காரணமாகும்.

மற்றொரு காரணம் என்னவென்றால், அஜித் தமிழ் சினிமாவின் நடிக்க வந்த புதிதில் அவருக்கு தமிழ் தெரியாது. ஆகையால் ஆங்கிலத்திலேயே பேட்டி கொடுத்து வந்தார். ஆனால் பத்திரிகையாளர்கள் நடிப்பது தமிழில், பேசுவது மட்டும் ஏதோ பெரிய இதுமாதிரி இங்கிலீஷில் பேசுகிறார் என பத்திரிகைகளில் தவறாக பதிவிட்டனர்.

இதனால் மனமுடைந்த அஜித் அதன்பிறகு எந்த விழாக்களிலும் கலந்துகொள்ள விருப்பம் இல்லை என பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் விஜய் டிவி கோபிநாத் இடம் கூறியுள்ளதாக அவர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

ஏகே 62 இந்த ஆண்டு பிப்ரவரியில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது, சென்னையில் ஒரு தனியார் பூஜை விழா நடைபெற்றது. அவரது குடும்பத்துடன் பயணம் செய்த அஜித்குமார், மற்ற படக்குழுவினர் கலந்துகொண்டபோது நிகழ்வை தவறவிட்டார். முன்னதாக அஜித்தின் 62வது படத்தை இயக்க விக்னேஷ் சிவன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் தற்போது, விக்னேஷின் திட்டம் தொழில்நுட்ப காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது, மேலும் AK 62 படத்தின் இயக்குநராக மகிழ் திருமேனி களமிறங்கியுள்ளார். பெயரிடப்படாத இப்படத்திற்கு இசையமைக்க சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்