Thursday, June 8, 2023 4:28 am

ஒட்டுமொத்த இந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தில் அஜித்தா?

spot_img

தொடர்புடைய கதைகள்

போர் தொழில் படத்தை பற்றிய லேட்டஸ்ட் ஹாட் அப்டேட் இதோ !

அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் நடித்துள்ள போர் தோழில் ஜூன் 9...

தோனி தயாரித்த முதல் படமான எல்ஜிஎம் படத்தின் டீசர் இதோ !

ஹரிஷ் கல்யாண் தனது வரவிருக்கும் எல்ஜிஎம் படத்தின் படப்பிடிப்பை முடித்திருந்தார். படத்தின்...

ஜெயம் ரவியின் இறைவன் படத்தின் ரிலீஸ் தேதி இதோ !

இத்திரைப்படம் ஆகஸ்ட் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என இறைவன்...

போர் தோழில் படத்தின் சென்சார் பற்றிய லேட்டஸ்ட் ஹாட் அப்டேட் இதோ !

போர் தோழில் ஜூன் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வரவுள்ளது. வெளியீட்டிற்கு...
- Advertisement -

இந்த ஆண்டின் தொடக்கத்தில் துனிவு படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற பிறகு, கோலிவுட் சூப்பர் ஸ்டார் அஜித் தனது 62 வது திட்டத்திற்காக இளம் தமிழ் இயக்குனர் மகிழ் திருமேனியுடன் கைகோர்க்கிறார், இந்த மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் பிப்ரவரி கடைசி வாரத்தில் ஒரு சிறிய பூஜையுடன் தொடங்கப்பட்டது.

தமிழ் சினிமாவில் அதிக தோல்வியை கொடுத்த நடிகருக்கு எப்படி இவ்வளவு ரசிகர் பட்டாளம் உருவானது என மற்ற மொழி நடிகர்களும் யோசித்து மண்டையை பிய்த்துக் கொள்ளும் அளவுக்கு மாஸ் காட்டி வருபவர் தல அஜித்.

இவரது ஒவ்வொரு படங்களும் வெளியாகும் போதும் தமிழ்நாடு திருவிழா கோலம் பூண்டு விடும். அந்த அளவு அவரது ரசிகர்கள் மாஸ் கட்டிவிடுவார்கள். கடந்த வருடத்தில் மட்டும் விசுவாசம் மற்றும் நேர்கொண்டபார்வை ஆக இரண்டு பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்துள்ளார்.

தற்போது அஜித் 62 படத்தில் காமிட்டாகி அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்பதை போல கோலிவுட் வட்டாரங்களில் பேச்சுக்கள் அடிபடுகின்றன.

அதேசமயம் தல அஜித் தனது அடுத்த படத்திற்கான கதை தேர்வில் ஈடுபட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில்தான் அஜித்துக்கு ஒரு செம வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளது.

கமலஹாசன் சிவாஜி கணேசன் ஆகியோர் நடிப்பில் உருவாகி சக்கை போடு போட்ட படம் தேவர் மகன். சாதி படமாக உருவாக இருந்தாலும் தமிழ் சினிமாவில் சரித்திர சாதனை படைத்தது இந்த படம். இந்நிலையில் அஜித்தை வைத்து ரசிகர்கள் உருவாக்கிய தேவர் மகன் படத்தின் போஸ்டர் ஒன்று கமலஹாசனை வெகுவாக கவர்ந்து உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தேவர்மகன் படத்தின் இரண்டாம் பாகத்தை கமலஹாசன் தலைவன் இருக்கிறான் என்ற பெயரில் நடிக்க தயாராகி வருவதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. ஆனால் கமல்ஹாசனின் தற்போதைய சூழ்நிலை கருதி இனி அந்தப் படத்தைத் தொடர முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

அதனால் அந்தக் கதையை தல அஜித்தை வைத்து ராஜ்கமல் பிலிம்ஸ் மூலம் இயக்கலாம் என கமலஹாசன் யோசித்து வருவதாகத் தெரிகிறது. அப்பா மகன் கதாபாத்திரத்திற்கு தல அஜித் சரியான தேர்வாக இருப்பார் எனவும் அவரது வட்டாரங்களில் கூறியுள்ளனர்.

அப்படி ஒன்று மட்டும் நிகழ்ந்துவிட்டால் தமிழ் சினிமாவில் இதுவரை பார்த்திராத அளவுக்கு ஒரு பெரிய வெற்றியை தல அஜித் அறுவடை செய்வார் என்பது மட்டும் உறுதி. எப்படியாச்சும் தல அஜித் பண்ணிடனும்.

AK62 மே மாதம் முதல் அதன் வழக்கமான படப்பிடிப்பைத் தொடங்கும். இந்த கிரேஸி ப்ராஜெக்ட் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியாகும். கோலிவுட் ஹிட் மெஷின் அனிருத் ரவிச்சந்தர் இந்த அதிக பட்ஜெட் பொழுதுபோக்கிற்காக ஒலிப்பதிவு செய்யவுள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்