Wednesday, April 17, 2024 2:03 am

ஒரு வழியாக முடிவுக்கு வந்த தல அஜித்தின் ஏ கே 62 ! ரசிகர்கள் எதிர்பார்த்த அப்டேட் இதோ!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழ் திரையுலகின் பிரபல நட்சத்திரமான அஜித் குமாருக்கு அவரது தந்தை பி சுப்பிரமணியத்தின் மறைவு கடினமாக இருந்தது. அறியாதவர்களுக்கு, அஜித்தின் தந்தை மார்ச் 24, வெள்ளிக்கிழமை, முதுமை தொடர்பான நோயின் விளைவாக காலமானார். இந்த கடினமான காலங்களில் அஜித்துக்கும் அவரது குடும்பத்தினருக்கும் திரையுலகில் உள்ள நெருங்கிய நண்பர்கள் மற்றும் சக நடிகர்கள் ஆதரவாக இருந்தனர். இந்த ஆழ்ந்த இழப்பைத் தொடர்ந்து, அஜீத் குமார் தனது குடும்பத்துடன் அதிக நேரத்தை செலவிடுவதற்காக தனது வேலைக் கடமைகள் அனைத்தையும் தள்ளிப்போடத் தேர்ந்தெடுத்ததாக கூறப்படுகிறது.

துணிவு படத்தை அடுத்து அஜித் குமார் நடிக்கவிருக்கும் ஏ.கே. 62 பற்றி தான் சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்படுகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டு ஓராண்டாகிவிட்டது. ஆனால் இன்னும் பட வேலை துவங்கவில்லை.

இதற்கிடையே விக்னேஷ் சிவனை மாற்றிவிட்டு மகிழ்திருமேனியை ஒப்பந்தம் செய்தார்கள். அஜித் படத்தை மகிழ்திருமேனி தான் இயக்கவிருக்கிறார் என்று இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை. இந்நிலையில் தான் அடுத்த மாதம் நல்ல செய்தி வரும் என ஏ.கே. 62 படத்தை தயாரிக்கும் லைகா நிறுவன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்தின் அப்பா சுப்ரமணியம் மார்ச் 24ம் தேதி காலை மரணம் அடைந்தார். அப்பா இறந்த சோகத்தில் இருக்கும் அஜித்தை தொந்தரவு செய்யக் கூடாது. அதனால் அவராக சொல்லும்வரை படப்பிடிப்பை துவங்கக் கூடாது என லைகா முடிவு செய்ததாக கூறப்பட்டது.

அப்பா இறந்துவிட்டாலும் தன்னால் யாருக்கும் எந்த தொந்தரவும் ஏற்படக் கூடாது என நினைப்பவர் அஜித். அதனால் அவர் நிச்சயம் விரைவில் படப்பிடிப்பை துவங்கச் சொல்வார் பாருங்களேன் என்றார்கள் ரசிகர்கள்.

இந்நிலையில் தான் ரசிகர்கள் சொன்னது போன்று நடந்துவிட்டது. மே மாதம் முதல் வாரத்தில் ஏ.கே. 62 படப்பிடிப்பை துவங்கப் போகிறார்களாம். அந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.விக்னேஷ் சிவனின் நண்பர் என்பதால் அவரை நீக்கியதும் அனிருத்தும் விலகிவிட்டார் என்று கூறப்பட்டது. ஆனால் அனிருத் அப்படி எதுவும் செய்யவில்லையாம்.

ஏ.கே. 62 படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். துணிவு படத்தை விட இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகள் தூக்கலாக இருக்க வேண்டும் என மகிழ்திருமேனியிடம் கூறியிருக்கிறாராம் அஜித். அதனால் ஒவ்வொரு காட்சியையும் செதுக்கிக் கொண்டிருக்கிறாராம் மகிழ்திருமேனி.

சிறு பட்ஜெட் படங்களை இயக்கி வந்த மகிழ்திருமேனிக்கு ஏ.கே. 62 படத்திற்காக ரூ. 10 கோடி சம்பளம் கொடுக்க லைகா நிறுவனம் முடிவு செய்துள்ளதாம். அவரின் கெரியரிலேயே முதல் முறையாக கோடிகளில் சம்பளம் வாங்குகிறார்.

இது தான்யா லைஃப்டைம் செட்டில்மென்ட் என்கிறார்கள் ரசிகர்கள். முன்னதாக ஏ.கே. 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவனை நீக்கியதும் விஷ்ணுவர்தனை ஒப்பந்தம் செய்ய விரும்பினாராம் அஜித் குமார். ஆனால் அவர் 2 பாலிவுட் படங்கள், ஆகாஷ் முரளியின் படத்தில் கமிட்டாகிவிட்டதால் இப்போதைக்கு முடியாது தல என்று கூறிவிட்டாராம்.

ஏ.கே. 62 பட வாய்ப்பு போனாலும் ஏ.கே. 63 படத்தை விஷ்ணுவர்தன் இயக்கும் வாய்ப்பு அதிகம் என கோடம்பாக்கத்தில் கூறுகிறார்கள்.கடந்த சில ஆண்டுகளாக அஜித் ஒரு இயக்குநரின் படத்தில் கமிட்டானால் அவருக்கு தொடர்ந்து தன் படங்களை இயக்கும் வாய்ப்பு கொடுத்து வருகிறார். அதனால் அஜித் படத்தை மீண்டும் இயக்கும் வாய்ப்பு மகிழ்திருமேனிக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித் படத்தை இயக்க வேண்டும் என்பது விக்னேஷ் சிவனின் கனவாகும். அந்த கனவு நிச்சயம் ஒரு நாள் நிறைவேறும். அஜித்தே கூப்பிட்டு வாய்ப்பு கொடுப்பார். பிரபஞ்சத்தை நம்புங்கள் அன்பான இயக்குநரே என விக்னேஷ் சிவனுக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகிறார்கள்.

அஜித் 62 படத்தை மகிழ் திருமேனி இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அஜித்தின் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டு மகிழ் திருமேனி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கான வேலைகளை மகிழ் திருமேனி இப்போது செய்து வருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அஜித் 62 பட அப்டேட் எப்போது வரும் என அஜித் ரசிகர்கள் ஆர்வமாகக் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இதுபற்றி லைகா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜி கே எம் தமிழ்க்குமரன் சமீபத்தில் அப்டேட் ஒன்றை பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பேசும்போது வெளியிட்டுள்ளார். அதில் “நல்ல செய்தி அடுத்த மாதம் வரும்” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் ட்விட்டர் பக்கத்தில் மகிழ்திருமேனி போட்ட ட்வீட் தற்போது செம்ம வைரலாகி வருகிறது இதோ உங்கள் பார்வைக்கு

AK 62 இன் தயாரிப்பாளர்கள் நடிகரின் தந்தையின் மரணத்திற்குப் பிறகு படத்தை கொஞ்சம் தள்ளி வைக்கத் தேர்ந்தெடுத்ததாக கூறப்படுகிறது. மே 2023 வரை அஜித் குமார் வேலைக்குத் திரும்பத் தயாராக இல்லை.

- Advertisement -

சமீபத்திய கதைகள்