Tuesday, June 6, 2023 10:13 pm

போடுறா வெடிய தல ரசிகர்களே ரெடியா! AK62 படத்தின் அடுத்த அப்டேட் எப்போ வருது தெரியுமா?

spot_img

தொடர்புடைய கதைகள்

ஆடுகளம் பட புகழ் கிஷோர் நடிக்கும் அடுத்த படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

ஆடுகளம் புகழ் கிஷோரின் அடுத்த படம். முகை எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு...

லைசென்ஸ் படத்தில் ராஜலட்சுமிக்கு மட்டும் வேறு சாய்ஸ் இல்லை ! இயக்குனர் வைத்த நம்பிக்கை

செந்தில் ராஜலட்சுமி கதாநாயகியாக நடிக்கும் ‘லைசென்ஸ்’ பட இசை மற்றும் டிரைலர்...

கால்பந்து வீரர் ரொனால்டோ ஸ்டைலில் அசத்தும் அஜித் மகன் ஆத்விக் : வைரல் புகைப்படம் இதோ !

அஜீத் குமார் கடந்த மூன்று தசாப்தங்களாக தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்....

மிகவும் எதிர்பார்த்த லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம்?

பரபரப்பான இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் numero uno இசையமைப்பாளர் அனிருத்...
- Advertisement -

அஜித்தின் புதிய படம் குறித்து பெரும் பரபரப்பு நிலவி வருகிறது, மேலும் இந்த செய்திக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். மகிழ் திருமேனி படத்திலும் அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பாளராகவும், துனிவு ஒளிப்பதிவாளர் நிரவ் ஷாவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பதை உறுதிப்படுத்துகிறது.

ஏகே 62 அப்டேட் எப்போது வரும் என்பது குறித்த தகவலை லைகா தமிழ்க்குமரன் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பிறகு ஹெச்.வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் அஜித் நடித்தார். வங்கிக் கொள்ளையையும், வங்கி மக்களிடம் அடிக்கும் கொள்ளையையும் வைத்து படம் உருவாகியிருந்தது. ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்று வசூலையும் வாரி குவித்தது.

துணிவு படத்தின் ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தபோதே அஜித் தனது 62ஆவது படத்தில் கமிட்டானார். அந்தப் படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால் அவர் படத்திலிருந்து கழற்றிவிடப்பட்டார். இதனையடுத்து படத்தை இயக்குவதற்கு மகிழ் திருமேனி கமிட்டாகியிருக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகாமல் இருந்துவருகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் பொறுமையின் எல்லைக்கு சென்றிருக்கின்றனர்.

ஏகே 62 படத்தின் அறிவிப்பை பிரமாண்டமாக அறிவிக்க் லைகா திட்டமிட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி டைட்டிலை ஒரு ப்ரோமோவுடன் அறிவித்தால் நன்றாக இருக்கும் என யோசித்த தயாரிப்பு நிறுவனம் அதற்கான வேலைகளில் இறங்குமாறு மகிழ் திருமேனி டீமை அறிவுறுத்தியிருக்கிறதாம். எனவே அதற்கான வேலைகளில் மகிழ் டீம் முழு மூச்சாக இருக்கிறது எனவும் அதனால்தான் இவ்வளவு தாமதம் எனவும் கூறப்படுகிறது.

சென்ற வாரத்திலேயே படத்தின் அறிவிப்பை வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் எதிர்பார்க்காத விதமாக அஜித்தின் தந்தை சுப்ரமணியம் இறந்துவிட்டதால் படம் குறித்த அறிவிப்பை வெளியிட முடியவில்லை என கூறப்படுகிறது. மேலும் அஜித்தின் தந்தை மறைவுக்கு லைகா நிறுவனத்தின் தமிழ்க்குமரனும், இயக்குநர் மகிழ் திருமேனியும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் லைகா நிறுவனத்தின் ஹெட் தமிழ்க்குமரன் செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம், “அஜித்தின் தந்தை மறைவுக்கு நீங்களும், மகிழ் திருமேனியும் சேர்ந்து சென்றிருந்தீர்கள். ஏகே 62 படத்தின் அப்டேட் எப்போது வரும்” என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “நல்ல செய்தி அடுத்த மாதம் வரும்” என குறிப்பிட்டுள்ளார். ஏகே 62 குறித்த அறிவிப்பு அடுத்த மாதம் வரும் என லைகா தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டதால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

முன்னதாக, சில வாரங்களுக்கு முன்பு அஜித்தின் பிஆர்ஓ சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில், “அஜித்தின் இரண்டாவது கட்ட உலக பைக் சுற்றுப்பயணத்துக்கு பரஸ்பர மரியாதை பயணம் என பெயர் வைக்கப்பட்டிருக்கிறது” என்று குறிப்பிட்டிருந்தார். அதேசமயம் இந்தப் பயணத்தை அவர் படம் தொடங்குவதற்கு முன்னதாக தொடங்குவார் என முதலில் கூறப்பட்டது. ஆனால் இப்போது ஏகே 62 படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டுத்தான் அஜித் இந்த பைக் சுற்றுப்பயணத்தை ஆரம்பிப்பார் என தெரிகிறது.

இதுவரை இல்லாத வகையில் ‘ஏகே 62’ படத்தின் தலைப்பை வெளியிட திட்டமிட்டுள்ளனர். விஜய்யின் ‘லியோ’ படத்தின் தலைப்பு அறிவிப்பு வீடியோவான ‘ப்ளடி ஸ்வீட்’ பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதால், அதேபோன்ற வீடியோவும் வேலையில் இருப்பதாக கூறப்படுகிறது. மகிழ் திருமேனி மற்றும் அவரது உதவி இயக்குனர்கள் இதற்காக கடுமையாக உழைத்து வருவதாகவும், அடுத்த மாதம் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

சமீபத்திய கதைகள்