Tuesday, June 6, 2023 9:05 am

தரமான வில்லனை இழுத்து போட்ட AK 62 ! மகிழ்திருமேனியின் ஆட்டம் ஆரம்பம் !

spot_img

தொடர்புடைய கதைகள்

நிறங்கள் மூன்று படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் நிரங்கள் மூன்று படத்தின் ரீ-ரெக்கார்டிங்...

விடாமுயற்சி படத்தை பற்றிய அசத்தலான அப்டேட் இதோ !

அஜித் குமார் தனது வரவிருக்கும் விடமுயற்சி படத்திற்காக நடிக்க தயாராகிவிட்டார். அவரது...

மோகனின் ஹரா படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

இதற்கு முன்பு 4554, யோகன் மற்றும் அடடே போன்ற படங்களில் பணியாற்றிய...
- Advertisement -

இந்த ஆண்டின் தொடக்கத்தில் துனிவு படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற பிறகு, கோலிவுட் சூப்பர் ஸ்டார் அஜித் தனது 62 வது திட்டத்திற்காக இளம் தமிழ் இயக்குனர் மகிழ் திருமேனியுடன் கைகோர்க்கிறார், இந்த மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் பிப்ரவரி கடைசி வாரத்தில் ஒரு சிறிய பூஜையுடன் தொடங்கப்பட்டது.

ஏகே 62′ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகும் என்பது தான் அஜித் ரசிகர்களின் மிக முக்கியமான கேள்வியாக இருக்கிறது. இந்த வாரம் வெளியாகும் அடுத்த வார வெளியாகும் என எதிர்பாப்புடன் காத்திருக்கின்றனர் ரசிகர்கள். இந்நிலையில் ‘ஏகே 62’ படத்தின் அப்டேட் குறித்து லைகாவின் தமிழ் குமரன் அளித்துள்ள பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த பொங்கல் வெளியீடாக அஜித் நடிப்பில் ‘துணிவு’ படம் ரிலீஸ் ஆனது. எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் இந்தப்படம் உருவானது. மூன்றாவது முறையாக இந்த கூட்டணி ‘துணிவு’ படத்தில் இணைந்தது. முழுக்க முழுக்க ஆக்ஷன் ஜானரில் வங்கி கொள்ளையை மையமாக வைத்து இந்தப்படம் வெளியானது.

‘துணிவு’ படத்திற்கு முன்பாக அஜித் நடிப்பில் வெளியான ‘வலிமை’ படம் ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்களை குவித்தது. குறிப்பாக அந்தப்படத்தில் அஜித்தின் லுக் மிக மோசமாக விமர்சிக்கப்பட்டது. இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக ‘துணிவு’ படத்தில் சால்ட் அன்ட் பெப்பர் ஹேர்ஸ்டைல், காதில் கடுக்கன் என வேறலெவலில் லுக்கில் மாஸ் காட்டியிருந்தார் அஜித்.

இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. ‘துணிவு’ படத்தினை தொடர்ந்து அஜித் நடிக்கும் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும், விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாகவும், அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் ‘துணிவு’ பட ரிலீசுக்கு முன்பாகவே அறிவிப்பு வெளியானது. ஆனால் திடீரென விக்னேஷ் சிவன் உருவாக்கிய கதை அஜித் தரப்புக்கு பிடிக்காததால் ‘ஏகே 62’ படத்திலிருந்து அவர் விலகியதாக தகவல்கள் வெளியானது.

இதனையடுத்து ‘ஏகே 62’ படத்தினை இயக்கும் வாய்ப்பை மகிழ் திருமேனி கைப்பற்றினார். தடையற தாக்கா, தடம், மீகாமன், கலகத்தலைவன் உள்ளிட்ட ஆக்ஷன் ஜானர் படங்களை இயக்கிய மகிழுடன் அஜித் கூட்டணி அமைத்துள்ளது ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்க எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது. ஆனால் இந்தப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் இன்னமும் வெளியிடாமல் உள்ளனர்.

கடந்த சின தினங்களுக்கு முன்பாக அஜித்தின் தந்தை காலமானதால் ‘ஏகே 62’ அறிவிப்பு மேலும் தாமதமாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய லைகா தமிழ்க்குமரன் ‘ஏகே 62’ படத்தின் அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என தெரிவித்துள்ளார். இதனால் அஜித் ரசிகர்கள் உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இந்த நிலையில் இந்தப் படத்திற்கான மற்ற நடிகர் நடிகைகளை மகிழ்திருமேனி தேர்வு செய்து வருகிறார் அப்படி சமீபத்திய பேட்டி ஒன்றில் கௌதம் மேனன் வெளிப்படையாக அஜித்தின் படத்தில் நான் நடிக்கிறேன். வில்லன் கதாபாத்திரத்தில் என வெளிப்படையாக பேசிவிட்டார். இதனால் ரசிகர்கள் செம்ம சந்தோஷத்தில் இருக்கின்றனர் ஏனென்றால் கௌதம் மேனன் .

அண்மைக்காலமாக இயக்குனர் என்ற அந்தஸ்தையும் தாண்டி ஹீரோவாக சூப்பராக நடித்து அசத்துகிறார் குறிப்பாக கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் இவரது நடிப்பு பெரிய அளவில் இருந்தது அதனை தொடர்ந்து அஜித்தின் அடுத்த படத்தில் கௌதம மேனன் நடிக்க இருக்கிறேன் என கூறி உள்ளார் ஆனால் எந்த மாதிரியான கதாபாத்திரம் என்று தெரியவில்லை வில்லன் ரோல் கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் என சொல்லியுள்ளார்.

இச்செய்தி தற்போது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதை அறிந்த ரசிகர்கள் செம்ம சந்தோஷம் அடைந்துள்ளனர். இவரைத் தொடர்ந்து கதைக்கு ஏற்ப முக்கியமான நடிகர் நடிகைகளை மகிழ்திருமேனி தட்டி தூக்குவார் என கூறப்படுகிறது. அஜித் 62 படத்தில் நடிகர் அஜித் குமார், கௌதம் மேனன், அவர்கள் இணைவது உறுதி.

AK62 மே மாதம் முதல் அதன் வழக்கமான படப்பிடிப்பைத் தொடங்கும். இந்த கிரேஸி ப்ராஜெக்ட் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியாகும். கோலிவுட் ஹிட் மெஷின் அனிருத் ரவிச்சந்தர் இந்த அதிக பட்ஜெட் பொழுதுபோக்கிற்காக ஒலிப்பதிவு செய்யவுள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்