மார்ச் 24 அன்று பிரபல நடிகர் தனது தந்தையை இழந்ததால் அஜித் தனது வாழ்க்கையின் கடினமான இடங்களில் ஒன்றை கடந்து வருகிறார். பல சினிமா நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் தங்கள் இரங்கலைப் பகிர்ந்து கொண்டனர், அதே நேரத்தில் விஜய், உதயநிதி ஸ்டாலின், ஆர் பார்த்திபன் மற்றும் சிலம்பரசன் உள்ளிட்டோர் அஜித்தின் வீட்டிற்கு நேரில் சென்று நட்பாக நடிகருக்கு இரங்கல் தெரிவித்தனர். நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.எஸ்.மணி சில ஆண்டுகளுக்கு முன்பு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதாகவும், நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக உடல்நலக்குறைவுக்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் முன்னதாக ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்தனர்.
தமிழின் முன்னணி நடிகரான அஜித் குமாரின் அப்பா பி.சுப்பிரமணியம் கடந்த 24 ஆம் தேதி அதிகாலை 3.15 மணியளவில் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
இந்த நிலையில் ஈ.சி.ஆர் சாலையில் உள்ள நடிகர் அஜித்தின் இல்லத்திற்கு நடிகர் விஜய் நேரில் சென்று அஜித் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். இருவரும் சந்தித்துக்கொண்ட புகைப்படங்களை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தார்கள். ஆனால் புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை.
ஏற்கனவே இந்த நிகழ்வை குடும்ப நிகழ்வாக நடத்த திட்டமிட்டுள்ளதாக அஜித் மற்றும் அவரது சகோதரர்கள் தெரிவித்திருந்திருந்தார். இதன் காரணமாக துக்கம் விசாரிக்க வரும் பிரபலங்கள் சந்தித்துக்கொண்ட படங்கள் வெளியாக வேண்டாம் என பார்த்துக்கொண்டார்கள் என்று கூறப்படுகிறது.
மேலும் நடிகர் விஜய் தரப்பிலும் அஜித்தை சந்திக்கவிருப்பதை பப்ளிசிட்டியாக்க வேண்டாம் என முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அஜித், விஜய் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக பொது நிகழ்வுகளில் கலந்துகொள்வதில்லை. இதனால் இருவரும் இணைந்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களுக்கு கிடைக்காமலேயே இருந்தது. முன்னதாக மங்காத்தா – வேலாயுதம் படப்பிடிப்புகள் ஒரே இடத்தில் நடந்தபோது படக்குழுவினருடன் இருவரும் சந்தித்துக்கொண்டனர்.
அஜீத்குமாரின் தந்தை பி.எஸ்.மணியின் உடல் தகனம் பெசன்ட் சுடுகாட்டில் நடந்தது, இது குடும்பத்தினர் மற்றும் நெருங்கியவர்கள் மட்டுமே கலந்துகொண்ட தனிப்பட்ட நிகழ்வாகும். தகனத்தின் போது, பல ஆண்டுகளாக தனது தந்தைக்கு சிகிச்சை அளித்த டாக்டருக்கு, அவரது கால்களைத் தொட்டு நன்றி தெரிவித்தார் அஜித். நடிகரின் இந்த சைகை தகனத்தின் போது உடனிருந்த மக்களை வியப்பில் ஆழ்த்தியது, மேலும் அஜித் தனது பணிவுக்காக ரசிகர்களிடமிருந்து பாராட்டுகளைப் பெற்றார். மேலும், தனது தந்தையின் இறுதிச் சடங்கிற்கு பாதுகாப்பு வழங்கிய அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் அஜித்குமார் நன்றி தெரிவித்துள்ளார்.