Thursday, June 8, 2023 1:11 am

விஜய் அஜித்தின் வீட்டிற்கு ஆறுதல் தெரிவிக்க போனதற்கு முக்கிய காரணமே இதுவா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

போர் தொழில் படத்தை பற்றிய லேட்டஸ்ட் ஹாட் அப்டேட் இதோ !

அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் நடித்துள்ள போர் தோழில் ஜூன் 9...

தோனி தயாரித்த முதல் படமான எல்ஜிஎம் படத்தின் டீசர் இதோ !

ஹரிஷ் கல்யாண் தனது வரவிருக்கும் எல்ஜிஎம் படத்தின் படப்பிடிப்பை முடித்திருந்தார். படத்தின்...

ஜெயம் ரவியின் இறைவன் படத்தின் ரிலீஸ் தேதி இதோ !

இத்திரைப்படம் ஆகஸ்ட் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என இறைவன்...

போர் தோழில் படத்தின் சென்சார் பற்றிய லேட்டஸ்ட் ஹாட் அப்டேட் இதோ !

போர் தோழில் ஜூன் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வரவுள்ளது. வெளியீட்டிற்கு...
- Advertisement -

அஜித்குமாரின் தந்தை இன்று காலமானதையடுத்து, அவரது உடல் பெசன்ட் நகர் மயானத்தில் மதியம் 12 மணியளவில் தகனம் செய்யப்பட்டது. சோகத்தில் மூழ்கிய அஜித் தனது உறவினர்களுடன் சேர்ந்து தனது தந்தை பி.சுப்ரமணியத்தின் உடலை சுடுகாட்டிற்கு கொண்டு சென்றார். மறுபுறம் ஷாலினி அஜீத் குமார் மாமியார் மோகினியை கவனித்துக் கொண்டிருந்தார், தொடர்ந்து அவர் பக்கம் இருந்தார்.

நடிகர் அஜித்தின் தந்தை சுப்ரமணிய ம்நேற்று காலை இயற்கை எய்தினார். கடந்த 4 ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சையும் எடுத்து வந்த நிலையில், நேற்று அதிகாலை தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 85. அஜித் தந்தையின் மறைவுச் செய்தி அறிந்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்படம் ஏராளமான அரசியல் தலைவர்களும் சினிமா பிரபலங்களும் இரங்கல் தெரிவித்தனர்.

இதையடுத்து சென்னை பெசண்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் அஜித் தந்தையின் உடன் தகனம் செய்யப்பட்டது. தந்தையின் உடலை சுமந்து சென்ற நடிகர் அஜித், அங்கிருந்தவர்களிடம் வீடியோ எடுக்க வேண்டாம் என கைகூப்பி கேட்டுக் கொண்டார். அஜித் அங்கு வருகை தந்ததை அறிந்து ஏராளமானோர் அப்பகுதியில் குவிந்ததால் போலீஸ் பாதுகாப்பும் போடட்டப்பட்டது.

தந்தையின் உடலை தகனம் செய்துவிட்டு வீட்டுக்கு சென்ற நடிகர் அஜித்தை, நேரில் சந்தித்து நடிகர் விஜய் ஆறுதல் தெரிவித்துள்ளார். தந்தையை இழந்து வாடும் அஜித்துக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நடிகர் விஜய் ஆறுதல் தெரிவித்துவிட்டு சென்றுள்ளார்.


இந்த நிலையில் அஜித்தின் வீட்டிற்கு விஜய் எதற்காக வந்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அஜித்தும் விஜய்யும் சினிமாவின் ஆரம்ப காலத்திலிருந்து இரண்டு பேரும் நண்பர்களாக இருக்கின்றனர். தற்பொழுதும் அப்படித் தான் இருக்கின்றார்கள். ஆனால் ரசிகர்கள் தான் தமக்கிடையில் மோதலில் ஈடுபடுகின்றார்களே தவிர அவர்கள் இருவரும் நண்பர்கள் தான். ஆனால் விஜய் வந்தது யாரும் எதிர்பார்க்காத ஒன்று தான் என தகவல் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பி.சுப்ரமணியத்திற்கு அவரது மனைவி மோகினி, மகன்கள் அனுப்குமார், அஜித்குமார், அனில் குமார் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உள்ளனர். அவர் தனது மகன்களுக்கு அவர்களின் கனவுகளைத் தொடர நிறைய சுதந்திரம் அளித்ததாகக் கூறப்படுகிறது, மேலும் ஒவ்வொருவரும் இப்போது முதலீடு, சினிமா மற்றும் வணிகம் ஆகிய அந்தந்தத் துறைகளில் முன்னணியில் உள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்