Thursday, April 25, 2024 11:03 am

அஜித்துக்கு போன் செய்தாரா ரஜினி ! வைரலாகும் தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அஜித்குமாரின் தந்தை பி.எஸ்.மணி கடந்த மார்ச் 24ஆம் தேதி சென்னையில் காலமானார். அவருக்கு வயது 85. மாஸ் ஹீரோவின் தந்தை பக்கவாதம் மற்றும் வயது தொடர்பான நோய்களுடன் போராடி வருவதாக கூறப்படுகிறது. இந்திய சினிமாவின் மிகப் பெரிய பெயர்களில் பரவலாகக் கருதப்படும் கமல்ஹாசன், தற்போது வால்மை நட்சத்திரத்தின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது மறைவு வருத்தமளிப்பதாக அவர் கூறினார்.

சியான் விக்ரமும் அஜித்தின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலை ட்வீட் செய்துள்ளார்.இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா அஜித்தின் தந்தை குறித்து உருக்கத்துடன் நினைவுகூர்ந்திருக்கிறார்.அஜித்தின் கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் வாலி. அந்தப் படத்தை இயக்கியவர் எஸ்.ஜே.சூர்யா. வாலி படம்தான் சூர்யா இயக்குநராக அறிமுகமான முதல் படம் என்பதுகுறிப்பிடத்தக்கது.

ஆசை, காதல் கோட்டை, காதல் மன்னன் என வரிசையாக ஹிட் கொடுத்த அஜித்திற்கு சாக்லேட் பாய் என்ற முத்திரை விழ ஆரம்பித்திருந்த நேரம் அது. அந்த முத்திரை ஒருவகையில் நல்லதுதான் என்றாலும் சினிமாவில் நீண்டகாலம் தாக்குப்பிடிக்க அது உதவாது என்பதை உணர்ந்த அஜித் வேறு வேறு ஜானரில் படம் செய்ய ஆசைப்பட்டார். அப்படிப்பட்ட நேரத்தில்தான் எஸ்.ஜே.சூர்யா வாலி கதையுடன் அஜித்தை அணுகினார்.

வளர்ந்துவரும் காலகட்டத்தில் வில்லனாக நடிக்க இளம் ஹீரோக்கள் யோசித்துக்கொண்டிருந்த சூழலில் எந்தவித தயக்கமும் இல்லாமல் ஹீரோவாகவும், வில்லனாகவும் வாலி படத்தில் தோன்றினார் அஜித். குறிப்பாக வில்லன் கதாபாத்திரத்தில் வாய் பேச முடியாத, காது கேட்க முடியாத மாற்றுத்திறனாளியாக தோன்றி தனது பார்வையாலும், உடல்மொழியாலும் நடித்து அசத்தியிருப்பார் அஜித். அந்தப் படம் அஜித்தின் கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

வாலி படத்துக்கு பிறகு அஜித்தால் எந்தக் கதாபாத்திரத்திலும் நடிக்க முடியும் என்ற பிம்பம் எழுந்தது. அதனையடுத்து அவர் நடித்த பல படங்கள் ஹிட்டாகி தமிழின் தவிர்க்க முடியாது ஹீரோவாக உருவெடுத்துவிட்டார். இப்போது அவர் கோலிவுட்டில் டாப் 5 ஹீரோக்களில் ஒருவர். சமீபத்தில் ஹெச்.வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்த அஜித் அடுத்ததாக மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.

இப்படிப்பட்ட சூழலில் அஜித்தின் தந்தை சுப்ரமணியம் நேற்று காலை உயிரிழந்தார். அவரது உடல் பெசன்ட் நகரில் இருக்கும் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அவரது இறுதிச்சடங்கில் குடும்பத்தினர் மட்டுமே கலந்துகொண்டனர். இருப்பினும் திரையுலக பிரபலங்கள் நேரில் சென்றும், ட்விட்டர் வழியாகவும் அஜித்திற்கு தங்களை ஆறுதலை தெரிவித்தனர்.

அந்தவகையில் இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆழ்ந்த இரங்கல் ஐயா. வாலி திரைப்படத்தின் கதையை அஜித்திற்கு சொல்லியபோது ஐயாவும் அமர்ந்திருந்தார். நான் கதை சொல்லும் பாணியை அவர் வெகுவாக் அரசித்தார். எப்போதும் ஐயா மீது எனக்கு நேசம் உண்டு. அம்மா, அஜித், ஷாலினி மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் அஜித் குமாரின் தந்தை மரணமடைந்த செய்தியை கேட்டு நடிகர் விஜய் ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கும் அஜித்தின் வீட்டிற்கு நேரில் சென்று தனது ஆறுதலை தெரிவித்தார். அதேபோல் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரும் குரல் தழுதழுத்தபடி அஜித்திற்கு தனது ஆறுதலை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அஜித்தின் அறிக்கை அறிந்த ரஜினி தற்போது தொலைபேசியில் அஜித்தை தொடர்பு கொண்டு அஜித்திடம் ரஜினி ஆறுதலை தெரிவித்தார் என்ற செய்தி தற்போது வைரலாகி வருகிறது .ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில வாரங்களில் முடிவடையும் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விரைவில் தொடங்கும். இன்னும் 15 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு எஞ்சியிருப்பதாகவும், அதில் ரஜினிகாந்த் 10 நாட்கள் பங்கேற்பார் என்றும் கூறப்படுகிறது. ஏப்ரல் 15, 2023க்குள் முழு திரைப்படத்தின் படப்பிடிப்பையும் முடிக்க தயாரிப்புக் குழு உத்தேசித்துள்ளது. சன் பிக்சர்ஸ் ஆக்‌ஷன் கலந்த திரில்லரைத் தயாரிக்கிறது, இது 2023 கோடையில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்