Thursday, June 8, 2023 4:49 am

யார் இந்த பெசன்ட் ரவி ? இறுதி வரை அஜித்துக்கு துணையாக நின்று நெகிழ வைத்த பெசன்ட் ரவி !அசந்து போன ரசிகர்கள்

spot_img

தொடர்புடைய கதைகள்

போர் தொழில் படத்தை பற்றிய லேட்டஸ்ட் ஹாட் அப்டேட் இதோ !

அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் நடித்துள்ள போர் தோழில் ஜூன் 9...

தோனி தயாரித்த முதல் படமான எல்ஜிஎம் படத்தின் டீசர் இதோ !

ஹரிஷ் கல்யாண் தனது வரவிருக்கும் எல்ஜிஎம் படத்தின் படப்பிடிப்பை முடித்திருந்தார். படத்தின்...

ஜெயம் ரவியின் இறைவன் படத்தின் ரிலீஸ் தேதி இதோ !

இத்திரைப்படம் ஆகஸ்ட் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என இறைவன்...

போர் தோழில் படத்தின் சென்சார் பற்றிய லேட்டஸ்ட் ஹாட் அப்டேட் இதோ !

போர் தோழில் ஜூன் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வரவுள்ளது. வெளியீட்டிற்கு...
- Advertisement -

சூப்பர் ஸ்டார் அஜித் குமாரின் தந்தை பி சுப்பிரமணியம் சென்னையில் வெள்ளிக்கிழமை காலை காலமானார். அவருக்கு வயது 85. கண்டிப்பான குடும்ப விஷயமாக இருந்த இறுதிச் சடங்கு சென்னையில் நடந்தது. இந்த துயரச் சம்பவத்தின் வெளிச்சத்தில், அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அனைத்துத் தரப்பிலிருந்தும் இரங்கல் செய்திகள் குவிந்து வருகின்றன.

நடிகர் அஜீத்தின் தந்தை சுப்பிரமணி இன்று காலமான நிலையில், அஜித் குடும்பத்தினருக்கு பக்கபலமாக நின்று உடல் தகனம் செய்யப்படும் வரை பல்வேறு உதவிகளைச் செய்தார் நடிகர் பெசண்ட் ரவி.அஜீத்துடன் பல படங்களில் நடித்துள்ள பெசன்ட் ரவி, இன்று அஜித்தின் வீடு தொடங்கி, அஜித்தின் தந்தை தகனம் செய்யப்பட்ட பெசண்ட் நகர் மின் மயானம் வரை ஓடி ஓடி வேலை பார்த்தார்.

முக்கிய பிரமுகர்கள் வந்தபோதும், அஜித்தின் தாயார் உள்ளிட்ட குடும்பத்தினர் வந்தபோதும் முன்னே நின்று உதவினார் நடிகர் பெசன்ட் ரவி. இதனைக் குறிப்பிட்டு அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் நெகிழ்ந்துள்ளனர்.

தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நாயகனாக வலம் வரும் நடிகர் அஜித் குமார், தனது குடும்பத்தினருடன் சென்னை திருவான்மியூர் அருகே ஈஞ்சம்பாக்கத்தில் வசித்து வருகிறார். அஜித்தின் தந்தை பி.சுப்பிரமணி, கடந்த நான்கு வருடங்களுக்கும் மேலாக பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில், இன்று காலை அவர் திடீரென மரணமடைந்தார். இது அஜித் குடும்பத்தினர், திரையுலகினர், அவரது ரசிகர்கள் என அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அஜீத்தின் தந்தை சுப்பிரமணியத்தின் மறைவையடுத்து தமிழ் திரையுலக பிரபலங்கள் ஏராளமானோர் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மேலும் பல அரசியல் பிரபலங்களும், சினிமா பிரமுகர்களும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்தனர். அஜித்குமார் தந்தையின் இறுதிச் சடங்குகள் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் நடைபெற்றது. இறுதிச் சடங்குகள் நடைபெறும் முன் தனது தந்தையின் உடலை சுமந்து சென்ற அஜித் குமார் கண் கலங்கியவாறு சென்றது அனைவரையும் கலங்கச் செய்தது.

நடிகர் அஜீத் குமாரின் தந்தை மரணத்தைத் தொடர்ந்து, நடிகரும், அஜித்தின் நண்பருமான பெசன்ட் ரவி, அஜீத்தின் வீட்டில் அனைத்து பணிகளையும் முன்னின்று செய்தது காண்போரை நெகிழச் செய்தது. அஜீத்தின் தாயார் நடக்க முடியாமல் நடந்து வந்தபோது, அவருக்கு உதவியாக நின்று அழைத்துச் சென்றார் பெசன்ட் ரவி. அப்போது மட்டுமல்லாமல், இன்று காலை முதல், அஜீத்தின் தந்தை உடல் தகனம் செய்யப்படும் வரை கடைசி வரை அஜீத்துக்கு துணையாக பக்க பலமாக நின்றார் பெசன்ட் ரவி.

தமிழ் சினிமாவில் 100க்கும் மேற்பட்ட படங்களில் எதிர்மறை வேடங்களில் நடித்துள்ள பெசன்ட் ரவி, நடிகர் அஜீத்துக்கு நெருக்கமானவர். அஜீத்தைப் போலவே, தனது ஆரம்பகால வாழ்க்கையை மெக்கானிக்காக தொடங்கியவர். சென்னை பெசன்ட் நகர் பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார், சினிமா ஆர்வத்தில், திரையுலகிற்குள் நுழைந்து சண்டைக் கலைஞராகவும், வில்லன் வேடத்திலும் பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் அஜித் உடனும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் பெசன்ட் ரவி. அந்த நட்பின் அடிப்படையில் இன்று அஜித்துக்கு துணையாக நின்று அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்துள்ளார் பெசண்ட் ரவி.


நடிகர் பெசன்ட் ரவி, நடிகர் அஜித் குறித்து பல இடங்களில் நெகிழ்ச்சியாகப் பேசி இருக்கிறார். முன்பு ஒரு பேட்டியின்போது பெசன்ட் ரவி, “நான் அஜித் சார்ன்னு கூப்பிட்டுட்டு இருந்தேன். என்னை அஜித்ன்னே கூப்பிடுங்க என்று சொல்லிக்கொண்டே இருப்பார்.. இவ்ளோ வளர்ந்தும் அஜித்ன்னு தான் கூப்பிட சொல்லுவாரு. அது எல்லாம் எங்களுக்கு கிடச்ச கிஃப்ட்ன்னு தான் சொல்லணும். ஒரு தடவை அஜித் சார் கேரவனும், என் கேரவனும் பக்கத்துல பக்கத்துல நின்னுட்டு இருந்துது. அப்போ என் கேரவன்ல கோளாறு ஏற்பட்டு கரென்ட் போய்டுச்சு.


அஜித் சார் கேரவன்ல கரென்ட் இருந்துச்சு. இந்த விஷயம் தெரிஞ்சதும் என்னை அவரு கேரவன்ல கூப்பிட்டு அவரு சேர்ல உக்கார வெச்சு ரவிக்கு இங்கேயே மேக்கப் போடுங்கன்னு சொன்னாரு. அந்த டைம்ல எனக்கு டீ போட்டு கொடுத்தாரு. மேக்கப் போட்டு நான் குடிக்குறதுக்குள்ள டீ ஆறிடுச்சு. அப்போ இன்னொரு டீ போட்டு கொடுத்தாரு. அந்த அளவுக்கு அஜித் சார் மனசு தங்கம்” என மனம் நெகிழ்ந்து பேசியிருக்கிறார் பெசன்ட் ரவி. அஜித் குடும்பத்தினருக்கு துணையாக நின்று பெசண்ட் ரவி இன்று பணியாற்றியது அஜித் ரசிகர்களை நெகிழச் செய்துள்ளது.

கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த பி சுப்பிரமணியம் ஒரு மலையாளி. அவர் மோகினி என்ற சிந்தியை மணந்தார். இவர்களுக்கு அஜித், அனுப், அனில் என மூன்று மகன்கள் இருந்தனர். அனுப் குமார் ஒரு முதலீட்டு வங்கியாளர், அனில் குமார், ஐஐடி மெட்ராஸ் முன்னாள் மாணவர், ஒரு தொழிலதிபர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்