Friday, March 1, 2024 9:59 pm

ஏகே 62 படத்தை பற்றி லைகாவிடம் அஜித் கூறிய அந்த ஒரு வார்த்தை என்ன தெரியுமா ? லேட்டஸ்ட் அப்டேட்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நடிகர் அஜீத் குமாரின் தந்தை பி.எஸ்.மணி கடந்த மார்ச் 24-ம் தேதி சென்னையில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவருக்கு 85 வயது. மணியின் மறைவு குறித்த முதல் அறிக்கையை குடும்பத்தினர் பகிர்ந்து கொண்டனர். அந்த அறிக்கையின்படி, அஜித்தின் தந்தை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இந்த சோதனை நேரங்களில் அவர்கள் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்களிடமிருந்து தனியுரிமை கோரினர். பி.எஸ்.மணியின் உடல் சென்னை பெசன்ட் நகர் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

முன்னணி நடிகர் அஜித்தின் தந்தை சுப்ரமணியன் இன்று அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார்.அவரது மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின், உதயநிதி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், துணிவு படத்தைத் தொடர்ந்து லைகா தயாரிக்கும் ஏகே 62வில் கமிட் ஆகியிருந்தார் அஜித்.ஆனால், தற்போது அஜித்தின் தந்தை உயிரிழந்துள்ளதால் ஏகே 62 திரைப்படம் சொன்னபடி உருவாகுமா என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.அஜித்தின் துணிவு திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகியிருந்தது. இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் 300 கோடி ரூபாய் வரை வசூலித்ததால், அஜித்தின் அடுத்த படம் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது. அதன்படி அஜித்தின் 62வது படத்தை லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரிப்பது உறுதியானது. ‘ஏகே 62’ என்ற இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது, ஆனால் அவர் அதிலிருந்து விலகிவிட்டார். இந்நிலையில், அஜித்தின் அப்பா சுப்ரமணியன் இன்று அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார்.

அஜித்தின் தந்தை கடந்த 4 ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருந்தபடியே சிகிச்சை எடுத்துள்ளார். இதுகுறித்து அஜித்தும் அவரது சகோதரர்களும் கூட்டாக அறிக்கையும் வெளியிட்டுள்ளனர். இதனையடுத்து முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சரும் நடிகருமான உதயநிதி ஆகியோர் அஞ்சலி செலுத்தினார். அதேபோல், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உட்பட பல்வேறு அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தந்தை சுப்பிரமணியத்தின் இறுதி சடங்கு ஒரு குடும்ப நிகழ்வாகவே இருக்க கருதுகிறோம் என அஜித்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன்மூலம் தனது தந்தையின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ரசிகர்கள் நேரில் வரவேண்டாம் என அவர் மறைமுகமாகக் கூறியுள்ளார். இதனால் அஜித்தின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் மூலமாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே அஜித்தின் ஏகே 62 திரைப்படம் சொன்னபடி டேக் ஆஃப் ஆகுமா எனவும் ரசிகர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே ஏகே 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகிவிட்டார். இதனால் இந்தப் படத்தின் இயக்குநர் யார் என்ற கேள்வி எழுந்தது. அதனையடுத்து மகிழ் திருமேனி இந்தப் படத்தை இயக்கவுள்ளதாகவும், விரைவில் இதுகுறித்து அப்டேட் வெளியாகும் எனவும் சொல்லப்பட்டது. விரைவில் ஏகே 62 அப்டேட்டை லைகா வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த ஒரு மாதமாகவே இதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

இப்படியான சூழலில் அஜித்தின் அப்பா சுப்ரமணியன் இன்று உயிரிழந்ததால், ஏகே 62 படப்பிடிப்பு உடனே தொடங்கப்படுமா என சந்தேகம் எழுந்துள்ளது. ஏப்ரல் முதல் வாரத்தில் ஏகே 62 அபிஸியல் அப்டேட் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், அஜித்தின் அப்பா உயிரிழந்துவிட்டதால் சில நாட்கள் தாமதமாகவே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது. ஆனால், கண்டிப்பாக ஏகே 62 டேக் ஆஃப் ஆகும் என்றே லைகா தரப்பில் உறுதியாக சொல்லப்படுகிறது. இதனால் அஜித் ரசிகர்களும் ஓரளவு நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

லைக்காவிடம் அஜித் பேசியது என்னவென்றால் அது வேறு இது வேறு குறித்த தேதியில் ஏகே 62 படத்தின் டேக் அப் ஆகும் என லைக்காவிடம் அஜித் திட்ட வட்டமாக கூறியுள்ளார் .இந்நிலையில் அஜித்தின் அடுத்த படமான அஜித் 62 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த மாதம் முதல் மூன்று வாரத்தில் வரும் என தகவல் கிடைத்துள்ளது


இயக்குனர் எச் வினோத்தின் துணிவு படத்தில் அஜித்குமார் கடைசியாக நடித்திருந்தார். நடிகர் தற்போது ஓய்வில் இருக்கிறார். விரைவில், அவர் ஏகே 62 என்று தற்காலிகமாகத் தலைப்பிடப்பட்டுள்ள தனது வரவிருக்கும் படத்தின் வேலைகளைத் தொடங்குவார். இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் காத்திருக்கிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்