28.9 C
Chennai
Monday, March 20, 2023
Homeசினிமாஅஜித் ரசிகர்கள் மறக்க முடியாத நாள் ! விக்கி போட்ட இன்ஸ்டா பதிவு பார்த்து ...

அஜித் ரசிகர்கள் மறக்க முடியாத நாள் ! விக்கி போட்ட இன்ஸ்டா பதிவு பார்த்து கண்கலங்கிய ரசிகர்கள் !

Date:

தொடர்புடைய கதைகள்

இறுதி கட்டத்தை நெருங்கும் மாவீரன் படத்தை பற்றிய முக்கிய...

சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும்பாலான பகுதிகளை முடித்த பிறகு,...

சூர்யா ரூ.70 கோடிக்கு புதிய சொகுசு வீட்டை வாங்கிய...

சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி சூப்பர்ஸ்டார்களில் ஒருவர், அவர் தனது நடிப்புத்...

அந்த அளவுக்கு சொல்லியும் பிரம்மாண்ட இயக்குனருக்கு நோ சொல்லி...

அஜித்தின் புதிய படம் குறித்து பெரும் பரபரப்பு நிலவி வருகிறது, மேலும்...

‘சொர்கவாசல்’ படத்தில் ஆர்.ஜே.பாலாஜி படத்தில் இணைந்த செல்வராகவன்!

ஆர்ஜே பாலாஜி கடைசியாக 'ரன் பேபி ரன்' திரைப்படத்தில் நடித்தார், இது...

ரஜினி மகள் வீட்டில் கொள்ளை பெரும் பரபரப்பு !...

பழம்பெரும் நடிகர் ரஜினிகாந்தின் மகளும், திரைப்பட தயாரிப்பாளருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனது...

அஜித்தின் புதிய படம் குறித்த பெரும் பரபரப்பு நிலவுகிறது மேலும் இந்த செய்திக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். மகிழ் திருமேனி படத்திற்காக அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பாளராகவும், துனிவு ஒளிப்பதிவாளர் நிரவ் ஷாவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பதை உறுதிப்படுத்துகிறது.

கடந்த மார்ச் மாதம் 18ம் தேதி இதே நாளில் தான் இயக்குநர் விக்னேஷ் சிவன் தான் அடுத்ததாக அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்கப் போகிறார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிட்டது.அஜித் பேங்காக்கில் பைக் டூர் செல்லும் போட்டோவை போட்டு அமைதிக்கு முன் புயல் என்றெல்லாம் பதிவிட்டார்.

ஆனால், அதிரடியாக ஏகே 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் வெளியேற்றப்பட்ட நிலையில், இன்று அதை குறிக்கும் வகையில் அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டா போஸ்ட் ரசிகர்களை ரொம்பவே ஃபீல் பண்ண வைத்துள்ளது.

சிம்புவின் போடா போடி, விஜய்சேதுபதியின் நானும் ரவுடி தான் படங்களை இப்பவும் ரசிகர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர். சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்துக்கும் அந்த படத்தில் இடம்பெற்ற சொடக்கு மேல சொடக்கு பாடலுக்கும் தனி ரசிகர் பட்டாளமே இருக்கு, கடந்த ஆண்டு வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் படமும் வித்தியாசமனா திரைக்கதையுடன் ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்தியது. இப்படி ஜாலியான படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொடுத்த இயக்குநர் விக்னேஷ் சிவன் இப்படி அப்செட்டாக உள்ளாரே என ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

கடந்த ஆண்டு மார்ச் 18ம் தேதி லைகா நிறுவனம் அஜித்தின் எகே 62 படத்தை இயக்கப் போவது விக்னேஷ் சிவன் தான் என அதிகாரப்பூர்வமாகவே அறிவித்தது. இந்நிலையில், ஒரு வருஷம் ஆகியும் இன்னமும் படத்தின் இயக்குநர் யார் என்பது உறுதியாகவில்லை. விக்னேஷ் சிவன் இனி ஏகே 62 படத்தை இயக்கப் போவதில்லை என்கிற தகவல்கள் வெளியான நிலையில், அஜித் ரசிகர்கள் ரொம்பவே அப்செட் ஆனது குறிப்பிடத்தக்கது.

ஏகே 62 படத்தை தான் இனி இயக்கப் போவதில்லை என்பதை தெரிவிக்கும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து அஜித் புகைப்படத்தை நீக்கிய விக்னேஷ் சிவன் பயோவில் இருந்தும் ஏகே 62வை நீக்கி அந்த தகவலை உறுதிப்படுத்தினார். இந்நிலையில், ஒரு வருடம் ஆன நிலையில், கெடச்சத இழக்குறதும்.. இழந்தது கெடைக்கிறதும் என்கிற நானும் ரவுடி தான் பாடல் வரிகளை இன்ஸ்டா பக்கத்தில் போட்டு சில வரிகளுக்கு பல அர்த்தங்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

விக்னேஷ் சிவனின் போஸ்ட் ரசிகர்களை ஒரு பக்கம் ஃபீல் செய்ய வைத்தாலும், அஜித் ரசிகர்கள் நாங்க அவரை விட பாவம்ங்க எங்களுக்கு இன்னும் அஜித் படத்தை மகிழ் திருமேனி தான் இயக்கப் போறாரா என்பதே உறுதியாக தெரியவில்லை என அந்த அப்டேட்டையாவது சொல்லுங்க என லைகாவிடம் அப்டேட் கேட்டு வருகின்றனர்.

ஏகே 62 படத்தின் பணிகள் ஒரு பக்கம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினி மற்றும் மகன் ஆத்விக் உடன் கால்பந்தாட்ட பயிற்சிகளுக்கு சென்று வரும் புகைப்படங்களை வெளியிட்டு தனது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி வருகிறார். விரைவில் ஏகே 62 படத்தின் அறிவிப்பு வெளியானால் அஜித் ரசிகர்கள் வேறலெவலில் சோஷியல் மீடியாவையே தெறிக்கவிட காத்திருக்கின்றனர்.

அஜித் மற்றும் தயாரிப்பாளர்கள் ‘AK 62’ என்ற தலைப்பில் ஒரு அறிவிப்பை வெளியிட விரும்பவில்லை, ஆனால் அதிகாரப்பூர்வ தலைப்புடன் வெளியிட காத்திருக்கிறார்கள். AK 62, நாம் அனைவரும் அறிந்தபடி, விக்னேஷ் சிவனுடன் தொடர்புடையது, இப்போது அவர் திட்டத்தின் ஒரு பகுதியாக இல்லை என்பதால், படத்தின் சரியான தலைப்புடன் வெளியீட்டு விழா இருக்க வேண்டும் என்று குழு கருதியது.

சமீபத்திய கதைகள்