28.3 C
Chennai
Thursday, March 23, 2023

ரஜினிக்காக இணையும் அஜித் ! லோகேஷின் மாஸ்டர் ப்ளான் ! மிரளும் திரையுலகம்

Date:

தொடர்புடைய கதைகள்

அபர்ணா பாலமுரளி உடன் ரஜினி உள்ள புகைப்படம் இணையத்தில்...

ரஜினிகாந்த் இந்தியத் திரையுலகின் மிகப்பெரிய பெயர்களில் ஒருவர். மாஸ் ஹீரோ அவரது...

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் புதிய படத்தை...

எஸ்.எஸ்.ராஜமௌலியும் மகேஷ் பாபுவும் விரைவில் இணைந்து பணியாற்றவுள்ளனர். 2023-ம் ஆண்டின் இறுதியில்...

வெங்கட் பிரபுவுடன் இணையும் சிவகார்த்திகேயனின் புதிய படத்தை பற்றிய...

சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபுவுடன் ஒரு நேர்த்தியான ஆக்‌ஷன் என்டர்டெய்னரில் இணையவிருப்பதால், சிவகார்த்திகேயனின்...

சலார் படத்தை ஆங்கிலத்திலும் டப் செய்யப்பட படக்குழு முடிவு...

பிரபாஸ் நடித்த சாலார் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும்,...

கேப்டன் மில்லர் படத்தை பற்றிய லேட்டஸ்ட் ஹாட் அப்டேட்...

சமீபத்திய தகவல்களின்படி, கேப்டன் மில்லரின் கிளைமாக்ஸ் படப்பிடிப்பு குற்றாலத்தில் சுமார் 1000...

தளபதி விஜய்யின் ‘லியோ’ தமிழ் சினிமாவில் மெகா பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திட்டங்களில் ஒன்று. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் தி ரூட் இணைந்து தயாரிக்கும் பிக்கி படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படம் அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படக்குழு தொடர்ந்து ரசிகர்களுக்கு அப்டேட்களை வழங்கி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய் நடிக்கும் லியோ படத்தை இயக்கி வருகிறார்.இந்தப் படத்தின் ஷூட்டிங் சென்னையைத் தொடர்ந்து தற்போது காஷ்மீர் பகுதிகளில் நடைபெற்று வருகிறது.லியோவை அடுத்து கைதி 2, விக்ரம் 2 திரைப்படங்கள் லோகேஷின் லைன்-அப்பில் உள்ளன.இந்நிலையில், ரஜினிக்காக விஜய் – அஜித் இருவரையும் ஒரு படத்தில் நடிக்க வைக்க லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் ப்ளான் போட்டுள்ளாராம்.

மாநாகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர்ந்து ஹிட் மேல் ஹிட் கொடுத்துவரும் லோகேஷ் கனகராஜ், தற்போது விஜய்யின் லியோ படத்தை இயக்கி வருகிறார். சென்னையை தொடர்ந்து தற்போது காஷ்மீரில் லியோ பட ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் சஞ்சய் தத் தொடர்பான காட்சிகள் காஷ்மீரில் படமாக்கப்பட்டன. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் நடைபெறும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், ரஜினியின் கடைசி படத்தை லோகேஷ் இயக்கலாம் என செய்திகள் வெளியாகி வருகின்றன.

தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வரும் ரஜினி, அடுத்து தசெ ஞானவேல் இயக்கும் தலைவர் 170-ல் நடிக்கவுள்ளார். இறுதியாக ஒரு இண்டஸ்ட்ரி ஹிட் கொடுக்கும் படத்தில் நடிக்க வேண்டும் என்பது ரஜினியின் பல வருட கனவாக உள்ளது. இதற்கு தற்போது லோகேஷ் கனகராஜ் தான் சரியான ஆள் என்பதால், அவரிடமே ரஜினி நேரில் தொடர்புகொண்டு கேட்டுவிட்டாராம். இதுகுறித்து லோகேஷும் யோசித்து வருவதாக சொல்லப்படுகிறது.

இதனிடையே ரஜினிக்காக விஜய் – அஜித் இருவரையும் ஒன்றிணைக்க லோகேஷ் திட்டமிட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. மாநகரம் முடித்துவிட்டு அஜித்துக்காக ஒரு கதை ரெடியாக வைத்திருந்தாராம் லோகேஷ். ஆனால், அப்போது அஜித்தால் நடிக்க முடியாமல் போய்விட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், விஜய் – அஜித் இருவரையும் ஒரு படத்தில் நடிக்க வைக்கலாம் என லோகேஷ் பக்காவான ப்ளான் போட்டு வருகிறாராம்.

ராஜாவின் பார்வையிலே படத்திற்குப் பின்னர் விஜய்யும் அஜித்தும் இணைந்து நடிக்கவில்லை. பொது இடத்தில் அவர்கள் இருவரும் நண்பர்களாக சந்தித்துக்கொண்டாலும், ரசிகர்கள் அவர்களை எதிரெதிர் துருவங்களாக வைத்து சண்டையிட்டு வருகின்றனர். இப்படியொரு சூழலில் ரஜினியின் தளபதி பட ரீமேக்கில் விஜய் – அஜித்தை இணைந்து நடிக்க வைக்க லோகேஷ் ப்ளான் போட்டுள்ளாராம்.

மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி – மம்மூட்டி இணைந்து நடித்த தளபதி இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. ரஜினியும் மம்முட்டியும் இணைபிரியாத நண்பர்களாக நடித்து மிரட்டியிருப்பார்கள். இந்தப் படத்தின் ரீமேக்கில் ரஜினி கேரக்டரில் விஜய்யையும் மம்முட்டி பாத்திரத்தில் அஜித்தையும் நடிக்க வைக்கலாம் என லோகேஷ் ஒரு கணக்குப் போட்டு வைத்துள்ளாராம். சமீபத்தில் ஒரு பேட்டியில் ரீமேக் படங்கள் பேசியிருந்த லோகேஷ், விஜய், அஜித் நடிப்பில் தளபதி ரீமேக் இயக்க வேண்டும் என்பது தனது கனவு எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. லோகேஷின் விருப்பப்படி விஜய்யும் அஜித்தும் தளபதி ரீமேக்கில் நடித்துவிட்டால், ஒட்டு மொத்த சினிமா இண்டஸ்ட்ரியையும் இந்தப் படம் திரும்பிப் பார்க்க வைத்துவிடும் என்பது மட்டும் நிச்சயம்.

தயாரிப்பாளர்கள் லலித் குமார் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமியுடன் சஞ்சய் தத் போஸ் கொடுக்கும் படத்தையும் ஊடகங்கள் பகிர்ந்துள்ளன. படத்தைப் பகிர்ந்த அவர்கள், “நன்றி @duttsanjay சார், நீங்கள் மிகவும் இனிமையான மற்றும் பூமிக்குரிய நபராக இருந்தீர்கள். எங்கள் ஒட்டுமொத்த குழுவும் உங்கள் நடிப்பை மிகவும் அருகிலேயே பார்த்து மகிழ்ந்தீர்கள், நீங்கள் வழக்கம் போல் அதிர்ந்தீர்கள் சார். உங்களை மீண்டும் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறோம். சென்னை ஷெட்யூலில் படப்பிடிப்பில்.

சமீபத்திய கதைகள்