27.8 C
Chennai
Saturday, March 25, 2023

லியோ படத்துக்காக இதுவரை விஜய் எந்தப் படத்துக்கும் எடுக்காத விக் ரிஸ்க் ! கசிந்த உண்மை

Date:

தொடர்புடைய கதைகள்

‘விடுதலை’ ரிலீஸுக்கு முன்னதாக வெற்றி மாறன் சர்ச்சையில் சிக்கியுள்ளார்...

வெற்றி மாறன் தனது அடுத்த வெளியீடான 'விடுதலை' படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில்...

தனது அப்பாவை இழந்து தவிக்கும் நிலையில் அஜித்திற்கு லைகா...

அஜித்குமாரின் தந்தை பி.எஸ்.மணி கடந்த மார்ச் 24ஆம் தேதி சென்னையில் காலமானார்....

விஜய் சத்யா நடித்த ரஜினி படத்தின் ட்ரைலர் இதோ...

விஜய் சத்யாவின் ரஜினி படத்தின் டிரைலரை தயாரிப்பாளர்கள் வியாழக்கிழமை வெளியிட்டனர். வெங்கடேஷ்...

பொன்னியின் செல்வனுக்கான விக்ரமின் புதிய லூக் வைரல் !

பொன்னியின் செல்வன் II ஏப்ரல் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வரும்...

பீட்சா 3 தி மம்மி’ படத்தை பற்றிய லேட்டஸ்ட்...

சிவி குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் மோகன் கோவிந்தின் 'பீட்சா 3...

முன்னதாக, காஷ்மீரில் விஜய்-ஸ்டார்ட்டர் லியோவின் செட்டில் சஞ்சய் தத் சேர்ந்தார் என்று நாங்கள் தெரிவித்திருந்தோம். சமீபத்திய அப்டேட் என்னவென்றால், நடிகர் காஷ்மீரில் தனது ஷெட்யூலை முடித்துள்ளார். தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ, சென்னையில் அடுத்த ஷெட்யூலில் சேரும் வரை நடிகருக்கு செட்டில் இருந்து விடைபெறும் குறிப்பை எழுதியுள்ளது.

விஜய் நடித்து வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் வேகமாக நடைபெற்று வருகிறது.லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

லியோ படப்பிடிப்பில் கலந்துகொண்ட பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தை விஜய், லோகேஷ் உள்ளிட்ட லியோ படக்குழுவினர் வரவேற்றனர்.அப்போது விஜய்யின் வித்தியாசமான சால்ட் அண்ட் பெப்பர் ஹேர்ஸ்டைல் ரசிகர்களிடம் கவனம் பெற்ற நிலையில், தற்போது அதன் பின்னணி குறித்து தகவல் கிடைத்துள்ளது.

வாரிசு படத்தைத் தொடர்ந்து விஜய் தற்போது லியோ ஷூட்டிங்கில் கவனம் செலுத்தி வருகிறார். மாஸ்டர் படத்திற்கு பின்னர் விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால், லியோவுக்கு எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் ஷூட்டிங் சென்னையைத் தொடர்ந்து தற்போது காஷ்மீரில் வேகமாக நடைபெற்று வருகிறது. இதில், விஜய், த்ரிஷா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

சில தினங்களுக்கு முன்னர் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் லியோ படப்பிடிப்புக்காக காஷ்மீர் சென்றார். அவரை விஜய், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட லியோ படக்குழுவினர் வரவேற்றனர். அப்போது விஜய்யின் ஹேர்ஸ்டைல் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் ஈர்த்தது. சால்ட் அன்ட் பெப்பர் ஹேர்ஸ்டைலில் வித்தியாசமான லுக்கில் மாஸ் காட்டினார் தளபதி விஜய்.

விஜய் பெரும்பாலும் ஹேர்ஸ்டைல் உட்பட தோற்றங்களில் வித்தியாசம் காட்டமாட்டார். முக்கியமாக விஜய்யின் ஹேர்ஸ்டைலில் பெரிதாக மாற்றங்கள் இருக்கவே இருக்காது. ஆனால், லியோ படத்திற்காக லோகேஷ் கேட்டுக்கொண்டதால் தனது விக்களை மாற்றியுள்ளாராம் விஜய். அதுவும் மொத்தம் 30 விதமான விக் களை விஜய்க்கு செய்யப்பட்டு அதில் இறுதியாக ஒன்று தேர்வு செய்யப்பட்டுள்ளதாம்.

லோகேஷுக்காக மட்டுமே விஜய் இந்த ஹேர்ஸ்டைலுக்கு ஓக்கே சொன்னதாக சொல்லப்படுகிறது. 7 ஸ்க்ரீன்ஸ் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் லியோ, லோகேஷின் சினிமாட்டிக் கான்செப்ட்டில் உருவாகிறதா என இதுவரை அப்டேட் எதுவும் வெளியாகவில்லை. காஷ்மீரில் நடைபெற்று வரும் லியோ ஷூட்டிங்கில், த்ரிஷா, மிஷ்கின், கெளதம் மேனன், ப்ரியா ஆனந்த், மேத்யூ தாமஸ், சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், மாஸ்டருக்குப் பிறகு விஜய்யுடன் லோகேஷ் இரண்டாவது ஒத்துழைப்பை லியோ குறிக்கிறது. லியோவில் த்ரிஷா, அர்ஜுன், பிரியா ஆனந்த், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி கான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு இசை அனிருத் ரவிச்சந்தர், ஒளிப்பதிவு மனோஜ் பரமஹம்சா, ஸ்டண்ட் நடனம் அன்பரிவ், படத்தொகுப்பு பிலோமின் ராஜ். லியோ அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.லியோ படம் அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது

சமீபத்திய கதைகள்