உதயநிதி ஸ்டாலினின் ‘கண்ணை நம்பாதே’ திரைப்படம் இன்று மார்ச் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.நடிகர், தயாரிப்பாளராக இருந்து முற்றிலும் ஓய்வு பெற்று அரசியலுக்கு வந்துள்ளார். தமிழகத்தில் ஆளும் கட்சியின் எம்.எல்.ஏ.வாக இருந்த உதயநிதி ஸ்டாலின், ஓரிரு மாதங்களுக்கு முன்பு முதல் 11 ஆண்டுகள் வரை தமிழக விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்து, 11 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையைத் தவிர்த்துவிட்டார்.
மிஸ்கின் இயக்கத்தில் வெளியான சைகோ திரைப்படத்தில் பார்வையற்றவராக நடித்து பாராட்டை பெற்ற உதயநிதி, அதே போன்ற க்ரைம் திரில்லர் கதையில் மீண்டும் நடித்துள்ளார். இந்த படத்தில் உதயநிதி அருண் என்ற கதாபாத்திரத்தில், எதார்த்தமான இளைஞனாக வந்த பாராட்டை பெற்றார்.
உதயநிதிக்கு ஜோடியாக ஆத்மிகா அவருடைய பங்கை உணர்ந்து நடித்தள்ளார். ஹிப்பாப் ஆதி நடித்த மீசை முறுக்கு படத்தில் அறிமுகமான ஆத்மிகா தனக்கான நடிப்பு திறனை நரூபிக்கு திரைப்படத்திற்காக காத்திருந்த நிலையில், கண்ணை நம்பாதே திரைப்படம், ஆத்மிகா சினிமா வாழ்க்கையில் திருப்பு முனையாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
பிரசன்னா,ஸ்ரீகாந்த், சதீஷ் என அனைவரும் அவர் அவர் கேரக்டரில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். ரோஜா கூட்டம் படத்தில் பார்த்த ஸ்ரீகாந்த் , பூமிகா இந்த படத்தில் மீண்டும் இணைந்து நடித்துள்ளனர். படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை அடுத்து என்ன, அடுத்து என்ன, படம் சுவாரசியமாக கதையுடன் நகர்கிறது. ஒரு திரில்லர் கதைக்கு ஏற்ற தரமான இசையை இசையமைப்பாளர் சித்திகுமார் கொடுத்து இருக்கிறார்.
கண்ணை நம்பாதே திரைப்படம் நேற்று வெளியான நிலையில், முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதில் தமிழ்நாட்டில் மட்டும் 2.15 கோடியும், உலகம் முழுவதும், 35லட்சத்தையும் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்றும் நாளையும் வார விடுமுறை என்பதால், இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிப்பு ஒரு பக்கம், அரசியல் மறுபக்கம் என தனது பயணத்தை தொடங்கிய உதயநிதி ஸ்டாலின்,சட்டமன்றத் தேர்தலில், சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக பதவியேற்றபின், நடிப்பை விட, அரசியலில் கவனம் செலுத்தி மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை செய்தார். அதன் பின் அவருக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டதை அடுத்து,மாமன்னன் படம் தான் தனது கடைசி படம் கூறி நடிப்பில் இருந்து விலகிவிட்டார். உதயநிதியின் கடைசி படத்திற்கு முந்ததைய படம் என்பதால், இப்படத்தை அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில் அந்த எதிர்பார்ப்பை உதயநிதி பூர்த்திசெய்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலினின் கடைசி படமான ‘மாமணன்’ இந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் அரசியல் கதைக்களம் என்றும், படம் மிகவும் தீவிரமானது என்றும் உத்யநிதி ஸ்டாலின் கூறியிருப்பதாவது, ‘மாமணன்’ கண்டிப்பாக பார்க்க வேண்டிய படமாக இருக்கும் என்றும் கூறினார்.