Friday, April 19, 2024 4:29 am

அஜித்திற்கு பின்னால் லியோ! இதுக்கு மேல ஒரு வெயிட்டான பிக் இருக்க முடியுமா வைரலாகும் தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அஜித் குமார், அவரது நடிகை-மனைவி ஷாலினி மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகளான அனோஷ்கா மற்றும் ஆத்விக் ஆகியோர் விடுமுறைக்கு செல்லும்போது தரமான நேரத்தை செலவிட்டுள்ளனர். தற்போது அஜித் மற்றும் அவரது குடும்பத்தினர் துபாயில் உள்ளனர். துபாயில் அவர்களைப் பார்த்த ரசிகர்கள் அவர்களுடன் புகைப்படங்களைக் கோரினர், மேலும் அஜித்தும் கடமைப்பட்டுள்ளார். ஒரு வைரலான படம் அஜித் தனது மனைவி ஷாலினி, மகன் ஆத்விக் மற்றும் ரசிகருடன் போஸ் கொடுப்பதைக் காட்டுகிறது. இந்தப் பயணத்தை முடித்துக் கொண்டு, மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் அஜீத் தனது வரவிருக்கும் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்குவார்.

நடிகர் அஜித் குமார் வெளிநாட்டு டூர் முடித்து விட்டு சென்னைக்கு திரும்பிய நிலையில், மகனின் கால்பந்தாட்ட ஆர்வத்தை கண்டு ரசிக்கும் புகைப்படம் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.முன்னதாக மகனுடன் கால்பந்தாட்ட நிகழ்ச்சிக்கு ஷாலினி சென்ற போட்டோவை ஷேர் செய்திருந்தார்.

இந்நிலையில், அப்பா அஜித், அம்மா ஷாலினி உடன் க்யூட்டான குட்டி தல ஆத்விக் இருக்கும் அழகான குடும்ப புகைப்படமும் அதற்கு பின்னாடி இருக்கும் சூப்பரான விஷயமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் கால்பந்தாட்ட வீரராக விஜய் நடித்திருப்பார். இந்நிலையில், நடிகர் அஜித்தின் மகன் கால்பந்தாட்டத்தில் தனது அதிகமான ஆர்வத்தை சமீப காலமாக காட்டி வரும் நிலையில், அம்மா ஷாலினி அடிக்கடி மகனுடன் கால்பந்தாட்ட மைதானங்களுக்கு சென்று வரும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களை குஷியில் ஆழ்த்தி வருகிறார்.

ஷூட்டிங் ஆரம்பிக்கவில்லை என்றாலோ ஷூட்டிங் சற்று தாமதம் ஆனாலோ தனது ஃபேஷனான பைக் ரைடிங்கிற்கு வெளிநாடுகளுக்கு தனது டீம் உடன் பறந்து விடுகிறார் நடிகர் அஜித். இந்நிலையில், ஏகே 62 படத்தை விரைவில் ஆரம்பிப்பதற்காக சென்னை வந்துள்ள நடிகர் அஜித் தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

அம்மா மட்டுமே ஆத்விக்கின் கால்பந்தாட்ட போட்டிகளுக்கு சென்று வரும் நிலையில், தற்போது சென்னை திரும்பியுள்ள நடிகர் அஜித் தனது மகன் ஆத்விக் உடன் கால்பந்தாட்ட பயிற்சி மைதானத்தில் எடுத்துக் கொண்ட சூப்பரான புகைப்படத்தை நடிகை ஷாலினி தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார்.

அஜித்துக்கு பின்னாடி லியோ நடிகர் அஜித்துக்கு பின்னாடி அப்படியே பேக்கிரவுண்டில் லியோ எனும் வார்த்தை இடம்பெற்றிருப்பதை பார்த்த விஜய் ரசிகர்கள் வாவ் ஒரே போட்டில் அஜித்தும் லியோவும் இருக்காங்களே என கமெண்ட் போட்டு கொண்டாடி வருகின்றனர். அதே நேரத்தில் அஜித்துக்கு பின்னாடி தான் எப்பவும் உங்க லியோ என அஜித் ரசிகர்கள் விஜய் ரசிகர்களை வம்பிழுத்து வருகின்றனர்.

ஏகே 62 படத்தின் அறிவிப்பு வருதோ இல்லையோ தொடர்ந்து அஜித்தின் போட்டோக்கள் வெளியாகி அஜித் ரசிகர்களை கொஞ்சமாவது சந்தோஷப்படுத்த ஷாலினி அஜித் தொடர்ந்து போராடி வருகிறார் என விஜய் ரசிகர்கள் பதிலுக்கு ட்ரோல் செய்து வருகின்றனர். ஏப்ரல் மாதம் ஆரம்பத்தில் ஏகே 62 அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

அஜீத் குமார் கடைசியாக எச் வினோத்தின் துணிவு படத்தில் நடித்தார், அது மிகப்பெரிய பிளாக்பஸ்டராக முடிந்தது. இப்படம் தற்போது Netflixல் ஒளிபரப்பாகி வருகிறது. முன்னதாக, AK 62 படத்திற்காக விக்னேஷ் சிவனுடன் அஜித் கைகோர்க்கவிருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், கிரியேட்டிவ் கருத்து வேறுபாடுகள் காரணமாக விக்னேஷ் தற்போது அந்த திட்டத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்