Friday, March 31, 2023

அட்ரா சக்க பிரம்மாண்டத்தின் உச்சம் அஜித்தை வைத்து லைக்கா போடும் 1000 கோடி வியாபாரம் கணக்கு !!

தொடர்புடைய கதைகள்

ஆர்யாவின் ‘காதர்பாஷா எந்திர முத்துராமலிங்கம்’ படத்தின் டீசர்

'கொம்பன்' மற்றும் 'விருமண்' போன்ற கிராமிய ஆக்‌ஷன் என்டர்டெயின்னர்களுக்கு பெயர் பெற்ற...

ருத்ரன் படத்தின் சிங்கிள் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

ராகவா லாரன்ஸின் ருத்ரன் படத்தின் அடுத்த சிங்கிள் பாடலான உன்னோடு வாழ்த்துக்காக...

ரேசர் படத்தின் ட்ரைலர் இதோ !

வரவிருக்கும் தமிழ் திரைப்படமான ரேசரின் தயாரிப்பாளர்கள் திங்களன்று படத்தின் டிரெய்லரை வெளியிட்டனர்....

தீரா காதல் படத்திலிருந்து வெளியான முதல் சாங் இதோ !

செவ்வாயன்று தீரா காதல் படத்தின் தயாரிப்பாளர்கள் உசுரன்கூடில் என்ற முதல் தனிப்பாடலை...

மார்க் ஆண்டனி படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

விஷால்-ஆதிக் ரவிச்சந்திரன் நடிப்பில் உருவாகி வரும் மார்க் ஆண்டனி படத்தின் இறுதிக்கட்ட...

அஜித் குமார், அவரது நடிகை-மனைவி ஷாலினி மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகளான அனோஷ்கா மற்றும் ஆத்விக் ஆகியோர் விடுமுறைக்கு செல்லும்போது தரமான நேரத்தை செலவிட்டுள்ளனர். தற்போது அஜித் மற்றும் அவரது குடும்பத்தினர் துபாயில் உள்ளனர். துபாயில் அவர்களைப் பார்த்த ரசிகர்கள் அவர்களுடன் புகைப்படங்களைக் கோரினர், மேலும் அஜித்தும் கடமைப்பட்டுள்ளார். ஒரு வைரலான படம் அஜித் தனது மனைவி ஷாலினி, மகன் ஆத்விக் மற்றும் ரசிகருடன் போஸ் கொடுப்பதைக் காட்டுகிறது. இந்தப் பயணத்தை முடித்துக் கொண்டு, மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் அஜீத் தனது வரவிருக்கும் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்குவார்.

தற்போது எங்கு பார்த்தாலும் AK62 படத்தை பற்றிய பேச்சு தான் போய்க்கொண்டிருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதமே துவங்கவேண்டிய நிலையில் திடீரென அஜித் மற்றும் லைக்கா இருவரும் விக்னேஷ் சிவனை படத்தை விட்டு நீக்கினர். இது ஒட்டுமொத்த கோலிவுட் வட்டாரத்தையும் அதிர்ச்சியாக்கியது.

கதை பிடிக்கவில்லை என்றால் கதையை தானே மாற்றுவார்கள். இங்கே என்ன இயக்குனரையே மாற்றிவிட்டார்கள் என ரசிகர்கள் ஒரு பக்கம் குழம்பி தவிக்கின்றனர். இதையடுத்து AK62 திரைப்படத்தை மகிழ் திருமேனி தான் இயக்கவுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. ஆனாலும் இதை பற்றி எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை படக்குழுவிடமிருந்து வெளியாகவில்லை.

அந்த பக்கம் விஜய்யின் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு பரபரவென போய்க்கொண்டிருக்க இந்த பக்கம் அஜித் தன் அடுத்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பையே இன்னும் வெளியிடவில்லையே என அஜித் ரசிகர்கள் புலம்பி தவிக்கின்றனர்.

இந்நிலையில் அஜித் விக்னேஷ் ஷிவனின் விஷயத்தில் ஏற்பட்ட தவறு இம்முறை ஏற்படக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்து வருகிறாராம். மகிழ் திருமேனியை வசனத்துடன் கூடிய திரைக்கதையை எழுதி தன்னிடம் காட்ட சொல்லியுள்ளாராம் அஜித். மேலும் மகிழ் திருமேனிக்கு அஜித் பல கண்டிஷன்களை போட்டு வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகின்றது.

அதாவது ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால் இப்போது விக்னேஷ் சிவனை ஓரம் கட்டி வேறு ஒரு இயக்குனரை லைக்கா தேர்ந்தெடுத்து உள்ளதாக தகவல் வெளியானது. ஏ கே 63 படத்தையும் லைக்கா தான் தயாரிக்க உள்ளதாக உறுதி பட தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் அதுமட்டுமின்றி இந்திய சினிமாவில் நம்பர் ஒன் பட்ஜெட் படமாக ஏகே 63 உருவாக இருக்கிறது. அதாவது இதுவரை இந்திய சினிமாவில் வெளியான படங்களில் அதிக செலவில் எடுக்கப்படும் படமாக இந்தப் படம் அமைய உள்ளது. ஆகையால் இதற்கான இயக்குனர்களை தற்போது லைக்கா தேடி வருகிறதாம்.
பிரம்மாண்ட பட்ஜெட் என்றாலே நமக்கு சற்றென்று ஞாபகம் வருவது ராஜமௌலி, ஷங்கர் மற்றும் பிரசாந்த் நீல் தான். இவர்களால் தான் இந்த படத்தின் பட்ஜெட்டை நியாயப்படுத்த முடியும். ஏனென்றால் இதற்கு முன்பு வெளியான பெரிய பட்ஜெட் படங்கள் ஆன பாகுபலி, எந்திரன், கே ஜி எஃப் போன்ற படங்களை இயக்கியவர்கள் இவர்கள்தான்.

அந்தப் படங்களும் எதிர்பார்த்ததை விட மாபெரும் வெற்றியைத் தந்து வசூலை வாரி கொடுத்தது. ஆகையால் லைக்கா இவர்களுள் ஒருவரை தான் தேர்ந்தெடுக்க உள்ளதாம். ஆனால் இந்த மூன்று இயக்குனர்களுமே தற்போது படங்களில் பிசியாக உள்ளனர்.ஆகையால் அஜித் 62 படத்தை முடித்ததும் பைக் டூர் முடிந்தவுடன் இந்த மூன்று இயக்குனரில் ஒருவரை ஒகே சொல்லுவார் என தகவல் கிடைத்துள்ளது

அஜீத் குமார் கடைசியாக எச் வினோத்தின் துணிவு படத்தில் நடித்தார், அது மிகப்பெரிய பிளாக்பஸ்டராக முடிந்தது. இப்படம் தற்போது Netflixல் ஒளிபரப்பாகி வருகிறது. முன்னதாக, AK 62 படத்திற்காக விக்னேஷ் சிவனுடன் அஜித் கைகோர்க்கவிருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், கிரியேட்டிவ் கருத்து வேறுபாடுகள் காரணமாக விக்னேஷ் தற்போது அந்த திட்டத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

சமீபத்திய கதைகள்