‘துணிவு’ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் அஜித் தற்போது குடும்பத்துடன் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். நடிகர் தற்போது துபாய்க்கு விடுமுறையில் இருக்கிறார், அஜித் தனது மனைவி ஷாலினி மற்றும் மகன் மற்றும் மகளுடன் போதுமான நேரத்தை செலவிட்டு வருகிறார். சமீபத்தில், சமூக ஊடகங்களில் நடிகர் துபாயில் இருந்து தனது குடும்பத்தினருடன் தங்கள் ரசிகர்களுடன் இருக்கும் படங்கள் நிறைந்துள்ளன.
இயக்குனர் ஹெச் வினோத்தின் இயக்கத்தில் வெளியான துணிவு திரைப்படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு பிறகு அஜித்தின் அடுத்த திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. ஏகே 62 இயக்குனர் இவர் தான் என அறிமுகப்படுத்தப்பட்டு, பின் மாற்றப்பட்டு இவர் தான் என அறிவிக்கப்பட்ட பின்னரும் படப்பிடிப்பு இன்னும் ஆரம்பிக்காமல் இருக்கிறது. இயக்குனரை முடிவு செய்வதில் இருந்த குளறுபடி தான் காரணம் என சொல்லப்படுகிறது.
ஏகே 62 படத்திற்கு முதலில் இயக்குனராக அறிவிக்கப்பட்ட விக்னேஷ் சிவன் பின்னர், மாற்றப்பட்டு மகிழ்திருமேனி இயக்குனராக அறிவிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான பல்வேறு செய்திகள் வந்த வண்ணம் இருந்தாலும் இன்னும் தயாரிப்பு நிறுவனம் படம் சம்பந்தமான எந்தவொரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை. இதனால் அஜித் ரசிகர்களும் ஏகே62-ல் என்ன நடக்கிறது என தெரியாமல் குழப்பத்தில் இருக்கின்றனர்.
ஏகே 62 இவ்வளவு தாமதத்திற்கு ”அஜித்” தான் முக்கிய காரணமாக இருக்கிறாராம். ஏனென்றால் தற்போது அஜித் படத்தின் கதையில் ரொம்பவும் சீரியஸ் ஆர்வம் காட்டி வருகிறாரார். எந்த கதை சொன்னாலும் அதில் ஏதாவது ஒரு சிறு மாற்றம் செய்ய வேண்டும் என கூறுகிறாராம். இந்த குழப்பத்தில் தான் இயக்குனர் விக்னேஷ்சிவன் ஏகே62 படத்தில் இருந்து விலகியதாகவும் கூறப்படுகிறது.
விக்னேஷ்சிவனைத் தொடர்ந்து வந்த மகிழ்த்திருமேனி தற்போது அஜித் மற்றும் தயாரிப்பு நிறுவனமான லைக்காவிடம் மாட்டிக் கொண்டு மத்தளம் போல் ரெண்டு பக்கமும் அடி வாங்கிக்கொண்டு இருக்கிறாராம். ஒரு பக்கம் அஜித் கதையில் கூறும் சிறு மாற்றங்கள் மறுபக்கம் குறிப்பிட்ட தேதிக்குள் படத்தை முடிக்க வேண்டும் என்ற லைக்கா கொடுக்கும் அழுத்தம் என மகிழ்திருமேனி குழப்பத்தில் உள்ளார்.
துணிவு படத்திற்கு கிடைத்த வெற்றியை தக்க வைத்துக் கொள்ள நினைக்கும் அஜித், அதற்காக ஏகே62 இயக்குனரை உற்சாக படுத்தி வருகிறார். மேலும், மீண்டும் விஜய்யுடன் நேருக்குநேர் போட்டி போட வேண்டும் என்ற எண்ணமும் அஜித்திற்கு உள்ளது. இப்படி பல குழப்பங்களுடன் இருக்கும் ஏகே 62 எப்படியும் இந்த மாத இறுதிக்குள் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு விடும் கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.
High chances #AK62 is going to be a REMAKE film.🤞
— Christopher Kanagaraj (@Chrissuccess) March 15, 2023
இந்நிலையில் அஜித்திடம் கூறிய ஒரு கதையில், ஓஷன் லெவன், டாக்ஸி போன்ற ஹாலிவுட் திரைப்படங்களை போன்ற தரத்தில் உருவாக இருக்கிறதாம். அஜித் நீண்ட நாட்களுக்கு பிறகு டானாகவும், ஒரு மாபெரும் வங்கி கொள்ளை நடக்கும் விதமாக இருக்கும்படி கதை கூறி இருக்கிறார் மகிழ்திருமேனி .மங்காத்தா படத்திற்கு பிறகு இந்த படம் பெரிதும் பேசப்படும் என நம்புகிறாராம் தல அஜித்.படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கவுள்ளதாகவும், ‘ஏகே 62’ குறித்த அறிவிப்பை படக்குழுவினர் விரைவில் வெளியிடுவார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.