32.2 C
Chennai
Saturday, March 25, 2023

அஜித் 62 படத்தில் வேற லெவல் மாஸ் காட்டும் அஜித்.. இந்த வாட்டி 4 ஹீரோயின்கள் !

Date:

தொடர்புடைய கதைகள்

பொன்னியின் செல்வன் II டிரெய்லர் பற்றிய லேட்டஸ்ட் தகவல்...

பொன்னியின் செல்வன் II அனைத்தும் ஏப்ரல் 28 அன்று திரையரங்குகளில் வந்தன....

தளபதி விஜய்யை தொடர்ந்து அஜித் வீட்டிற்கு சென்ற சிம்பு...

நடிகர் அஜீத் குமாரின் தந்தை பி.எஸ்.மணி கடந்த மார்ச் 24-ம் தேதி...

மகன் மனோஜ் இயக்கத்தில் நடிக்கும் பாரதிராஜா !

நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகமாகவுள்ளார், வரவிருக்கும் தமிழ்த் திரைப்படத்தில் அவரது...

விஜய் அஜித்தின் வீட்டிற்கு ஆறுதல் தெரிவிக்க போனதற்கு முக்கிய...

அஜித்குமாரின் தந்தை இன்று காலமானதையடுத்து, அவரது உடல் பெசன்ட் நகர் மயானத்தில்...

அஜித்துக்கு போன் செய்தாரா ரஜினி ! வைரலாகும் தகவல்

அஜித்குமாரின் தந்தை பி.எஸ்.மணி கடந்த மார்ச் 24ஆம் தேதி சென்னையில் காலமானார்....

‘துணிவு’ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் அஜித் தற்போது குடும்பத்துடன் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். நடிகர் தற்போது துபாய்க்கு விடுமுறையில் இருக்கிறார், அஜித் தனது மனைவி ஷாலினி மற்றும் மகன் மற்றும் மகளுடன் போதுமான நேரத்தை செலவிட்டு வருகிறார். சமீபத்தில், சமூக ஊடகங்களில் நடிகர் துபாயில் இருந்து தனது குடும்பத்தினருடன் தங்கள் ரசிகர்களுடன் இருக்கும் படங்கள் நிறைந்துள்ளன.

அஜித் 62 படத்தை மகிழ் திருமேனி இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அஜித்தின் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டு மகிழ் திருமேனி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கான வேலைகளை மகிழ் திருமேனி இப்போது செய்து வருவதாக சொல்லப்படுகிறது.

ஆனால் இதுவரை ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதற்குக் காரணம் அஜித்தான் என சொல்லப்படுகிறது. இன்னும் திரைக்கதை பணிகளை மகிழ் திருமேனி, முழுமையாக முடிக்கவில்லை. பணிகள் முழுவதும் முடிந்ததும், அறிவிப்பை வெளியிட்டுக் கொள்ளலாம் என அஜித் கூறிவிட்டதாக சொல்லப்படுகிறது.

சமீபத்தில் வெளியாகியுள்ள தகவலின் படி, படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏப்ரல் மாதத்தில்தான் அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது.இந்நிலையில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றுக்காக அர்ஜுனிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், அந்த செய்தி உறுதியானவுடன் இந்த தகவலையும் சேர்த்து வெளியிடலாம் என படக்குழு வெயிட் செய்கிறது.

இன்டர்நேஷனல் தீவிரவாதியை தல அஜித் தலைமையில் மூன்று பெண்களை வைத்துக் கொண்டு எவ்வாறு அவனை பிடிக்கிறார்கள் என்பதே கதை என்றும் கூறுகின்றனர். மேலும் கார் ரேஸ், பைக் ரேஸ் என படம் முழுக்க விறுவிறுப்பான சண்டைக் காட்சிகள் நிறைந்திருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.தல டக்கரு டோய்.!

அஜீத் கடைசியாக எச் வினோத் இயக்கிய ‘துணிவு’ படத்தில் நடித்தார் மற்றும் பேங்க் ஹீஸ்ட் த்ரில்லர் படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்தார். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ 200 கோடி வசூல் செய்தது மற்றும் 2023ல் கோலிவுட்டின் பிளாக்பஸ்டர் படங்களில் ஒன்றாகும். அஜித்தின் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என்று முன்னர் தெரிவிக்கப்பட்டது, ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக அறிவிக்கப்பட்டது. நடிகரும் இயக்குனருமான ‘ஏகே 62’ என்று தற்காலிகமாகத் தலைப்பிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தை இப்போது மகிழ் திருமேனி இயக்குகிறார்.
படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கவுள்ளதாகவும், ‘ஏகே 62’ குறித்த அறிவிப்பை படக்குழுவினர் விரைவில் வெளியிடுவார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய கதைகள்