32.2 C
Chennai
Saturday, March 25, 2023

போடா வெளியே படப்பிடிப்பில் வடிவேலுவை அவமானப்படுத்தி அனுப்பிய பி.வாசு!

Date:

தொடர்புடைய கதைகள்

மகன் மனோஜ் இயக்கத்தில் நடிக்கும் பாரதிராஜா !

நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகமாகவுள்ளார், வரவிருக்கும் தமிழ்த் திரைப்படத்தில் அவரது...

விஜய் அஜித்தின் வீட்டிற்கு ஆறுதல் தெரிவிக்க போனதற்கு முக்கிய...

அஜித்குமாரின் தந்தை இன்று காலமானதையடுத்து, அவரது உடல் பெசன்ட் நகர் மயானத்தில்...

அஜித்துக்கு போன் செய்தாரா ரஜினி ! வைரலாகும் தகவல்

அஜித்குமாரின் தந்தை பி.எஸ்.மணி கடந்த மார்ச் 24ஆம் தேதி சென்னையில் காலமானார்....

பொன்னியின் செல்வன் 2 ட்ரைலர் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்...

பொன்னியின் செல்வன் 2 இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும்,...

‘ரோஜா’ சீரியல் நடிகைக்கு மலேசிய முருகன் கோவிலில் ரகசிய...

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 'ரோஜா' சீரியலில் நடித்து வரும் பிரபல நடிகை...

பி.வாசுவின் சந்திரமுகி 2 திரைப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருக்கும் பார்வையாளர்களிடம் நல்ல எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது, அங்கு படத்திற்காக பெரிய செட்கள் போடப்பட்டுள்ளன.

நடிகர் வடிவேலு இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தில் நடித்து கொண்டிருக்கும் பொது திடீரென எனக்கு வேறு ஒரு கமிட்மென்ட் இருக்கு, அதனால் அந்த கமிட்மென்ட்டை முடித்து விட்டு பிறகு வந்து நடிக்கிறேன் என வடிவேலு தெரிவிக்க அதற்கு இயக்குனர் வாசு, இன்னும் ஒரு நாள் மட்டும் நீங்கள் நடித்தால் போதும், தற்பொழுது எடுக்கப்பட்டு வரும் காட்சி முழுவதும் எடுத்து முடிக்கப்பட்டு விடும்,

இல்லையென்றால் நீங்கள் வரும் வரை இந்த காட்சி பாதியிலே நிற்கும் என்று வாசு தெரிவித்துள்ளார். அதற்கு வடிவேலு என்னால் முடியாது என பிடிவாதமாக எனக்கு முக்கியமான கமிட்மென்ட் உள்ளது சில நாட்கள் அங்கே செல்ல வேண்டும் என வடிவேலு பிடிவாதம் பிடிக்க, இதனால் வடிவேலு மற்றும் இயக்குனர் வாசு இருவருக்கும் இடையில் வாக்குவாதம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.

வடிவேலு பிடிவாதமாக இருப்பதை அறிந்த பி வாசு, நீங்கள் பாதியிலேயே விட்டுவிட்டு சென்றால்,இந்த காட்சியவே நான் இந்த படத்தில் இருந்து எடுத்து விடுவேன் என்று தெரிவித்துள்ளார். அதற்கு வடிவேலு, பரவாயில்லை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் என்று தெரிவித்து விட்டு சந்திரமுகி படத்தின் பாதி படப்பிடிப்பிலே விட்டுவிட்டு சென்றுள்ளார்.இதனால் கடும் கோபமடைந்த பி வாசு , வடிவேல் நடித்த அந்த பாதி காட்சியையும் படத்தில் இருந்து எடுத்து விட்டார்.

இந்த நிலையில் முக்கியமான கமிட்மென்ட் முடித்துவிட்டு சில நாட்களுக்கு பிறகு மீண்டும் சந்திரமுகி படப்பிடிப்பு தளத்திற்கு வந்த வடிவேலுவிடம், சந்திரமுகி 2 படத்தில் அடுத்த நாள் படப்பிடிப்புக்கு காலை 9 மணிக்கு வடிவேலுவை வருவதற்கு தகவல் அனுப்பினால், அதற்கு 10 மணிக்கு வருகிறேன் என தெரிவித்துள்ளார் வடிவேலு, சரி சார் 10 மணிக்கு வாங்க என்றால் 11 மணிக்கு வருகிறேன் என்றுள்ளார்.

சார் கொஞ்சம் சீக்கிரம் வாங்க என்றது,சரி காலை 9 மணிக்கு வருகிறேன் என உறுதியளித்துவிட்டு அடுத்த நாள் படப்பிடிப்புக்கு வராமல் போன் சுவிட்ச் ஆப் செய்து விடுகிறாராம் வடிவேலு. இப்படி நாளுக்கு நாள் வடிவேலுவின் அட்டூழியம் அதிகரிக்க, படப்பிடிப்பை மிக சிரமத்துடன் நடத்தி வந்துள்ளார் பி வாசு. இதனை தொடர்ந்து சமீபத்தில் இயக்குனர் பி வாசுவை தொடர்பு கொண்ட தயாரிப்பு நிறுவனம்.

வடிவேலு செய்து வரும் அட்டூழியம் பற்றி எங்களுக்கும் தெரியும், வடிவேலு நடிக்கும் காட்சிகளை பெரும் அளவு குறைத்து விடுங்கள் என்றும். முடிந்தளவு அவருக்கு இந்த படத்தில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என பி.வாசுவிடம் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.. இந்நிலையில் தொடர்ந்து வடிவேலுவின் அட்டூழியம் நாளுக்கு நாள் படபிடிப்பில் அதிகரிக்க ஒரு கட்டத்தில் டென்ஷனான பி.வாசு அவரை முதலில் இங்கு இருந்து கிளம்பச் சொல்லுங்கள் என்று அருகில் இருந்த வடிவேலுவிடம் நேரடியாக சொல்லாமல் பக்கத்திலிருந்தவர்களிடம் தெரிவித்து வடிவேலு காதில் விழும்படி பேசி உள்ளார் இயக்குனர் பி வாசு.

உடனே வடிவேலு வந்து என்ன சார் என கேட்க, வடிவேல் முகத்தைக் கூட பார்க்காமல் தன்னுடைய இடது கையை அசைத்துக் கொண்டு இங்கிருந்து கிளம்பு போ… போ… இங்கிருந்து கிளம்பு போ… போ.. என்று அங்கே இருந்த பலர் மத்தியில் வடிவேலுவை அவமானப்படுத்தி உள்ளார் பி வாசு. இருந்தும் வடிவேலு பி வாசுவை சமாதானம் செய்ய முயற்சித்தும்.

வடிவேலு முகத்தை கூட பார்க்க பார்க்காமல் தன்னுடைய இடது கையை ஆட்டி கிளம்பு கிளம்பு, இங்கிருந்து கிளம்பு கிளம்பு என்று தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார் பி வாசு. இதனால் அந்த படப்பிடிப்பில் இருந்து உச்சகட்ட அவமானத்துடன் வடிவேலு வெளியேறியதாக தகவல் வெளியேறியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தன்னை பி. வாசு அவமானப்படுத்தி விட்டார் என்று சக சினிமா துறையினரிடம் தெரிவித்து வடிவேலு வருத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு இன்னும் நான்கு வாரங்கள் மட்டுமே எஞ்சியுள்ளது, அங்கு குழு இப்போது ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத் மற்றும் மற்ற குழுவினர் சம்பந்தப்பட்ட காட்சிகளை பதிவு செய்து வருகிறது. இப்படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது.

சமீபத்திய கதைகள்