Thursday, April 18, 2024 9:03 am

அஜித்துக்கு எதிராக நம்பர் நடிகை எடுத்த அதிரடி முடிவு !! ரசிகர்கள் அதிர்ச்சி

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சிம்பு-வரலக்ஷ்மி நடித்த ‘போடா போடி’ படத்தின் மூலம் அறிமுகமான விக்னேஷ் சிவன் பின்னர் தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடித்த ‘நானும் ரவுடி தான்’ என்ற பிளாக்பஸ்டர் ஹிட் கல்ட் கிளாசிக் மூலம் புகழ் பெற்றார். அவரும் நயன்தாராவும் டேட்டிங் செய்ய ஆரம்பித்து எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு 2022 இல் திருமணம் செய்துகொண்டதால் இந்தப் படம் அவருக்கு தனிப்பட்ட முறையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான துணிவு படத்தை முடித்துவிட்டு அடுத்து அஜித்தின் புதிய படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குவதாக சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பே கமிட் செய்யப்பட்டு, அந்த படம் தொடங்குவதற்கான அனைத்து வேலைகளையும் விக்னேஷ் சிவன் முடித்திருந்த நிலையில், படம் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு எனக்கு கதை பிடிக்கவில்லை என்று, அந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் வெளியேறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தார் நடிகர் அஜித்.

ஏற்கனவே படத்தில் கமிட் ஆகும்போதே விக்னேஷ் சிவனிடம் முழு கதையும் கேட்டுவிட்டு கமிட்டான நடிகர் அஜித், ஒரு ஏதோ ஒரு காரணத்திற்காக திட்டமிட்டு விக்னேஷ் சிவனை அந்த படத்திலிருந்து நடிகர் அஜித் வெளியேற்றியதாக கூறப்படுகிறது.இருந்தும் மீண்டும் அஜித் படத்தில் விக்னேஷ் சிவன் இடம்பெறுவதற்காக அஜித் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தை நயன்தாரா தொடர்பு கொண்டு பேசியும் யாரும் செவி சாய்க்கவில்லை.

இதற்கு முக்கிய காரணம் தன்னுடைய படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் உறுதியாக வெளியேற்றப்பட வேண்டும் என்பதில் அஜித் உறுதியாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நயன்தாரா திருமணத்திற்கு பின்பு பெரிதாக எந்த ஒரு படத்திலும் கமிட்டாகாமல் இருந்து வருகிறார். மேலும் ஏற்கனவே கமிட் ஆன படங்களிலும் கூட வெளியேறி வந்து கொண்டிருந்தார். அந்த வகையில் தற்பொழுது மீண்டும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சப்ஜெக்ட்டில் புதிதாக கமிட் ஆகியுள்ளார் நயன்தாரா.

இந்த படத்தை ரத்தினகுமார் இயக்குகிறார், ராகவ லாரன்ஸும் நயன்தாராவுடன் இணைந்து நடிக்கிறார், இந்த படம் லாரன்ஸ் மற்றும் நயன்தாரா இருவருக்குமே சமமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது, ஆனாலும் ராகவா லாரன்ஸ் கதாபாத்திரத்தை விட நயன்தாரா கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ததாக உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட இருக்கிறது.

நயன்தாரா – ராகவ லாரன்ஸ் நடிக்கும் படத்தை நடிகர் விஜய் மேனேஜர் ஜெகதீஸ் தயாரிக்கிறார், என்னுடைய கணவரை நம்ப வைத்து ஏமாற்றிய அஜித்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்க இருக்கும் படம் வெளியாகும் அதே தேதியில் தான் நடிக்கும் படத்தை வெளியிட வேண்டும் என நயன்தாரா தயாரிப்பு தரப்பில் தெரிவித்துள்ளார்.

எண்னுடைய கணவர் விக்னேஷ் சிவனை கமிட் செய்து விட்டு, திட்டமிட்டு கடைசி நேரத்தில் கழட்டிவிட்டதால், தங்களுக்கு ஏற்பட்ட அவமானத்திற்கு சரியான பதிலடியை அஜித்துக்கு கொடுத்தே தீருவேன் என சபதம் ஏற்றுள்ள நயன்தாரா,அஜித் படம் வெளியாகும் அதே தேதியில் தன்னுடைய படத்தை வெளியிட்டு, வெற்றி பெற்று அஜித் முகத்தில் கரியை பூசுவேன் என நயன்தாரா தன்னுடைய நிலைப்பாட்டை தயாரிப்பு நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வாரிசு வெளியாகும் என முன்கூட்டியே முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று இருந்த நிலையில், வேண்டுமென்றே விஜய் படத்துடன் நேரடியாக மோதிய தீருவேன் என்று பிடிவாதம் பிடித்து நடிகர் அஜித் தன்னுடைய துணிவு படத்தை வெளியிட்டார்,
மேலும் விஜய் மற்றும் ரெட் ஜீன்ஸ் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் இருவருக்கும் இடையில் இருந்த பிரச்சனையை நடிகர் அஜித் தன்னுடைய துணிவு பட விவகாரத்தில் ஜாதகமாக மாற்றிக்கொண்டார்.

அந்த வகையில் வாரிசு – துணிவு பட விவகாரத்தை மனதில் வைத்து, இது தான் சரியான தாரணம் என உணர்த்த விஜய் மேனேஜர் ஜெகதீஸ், அவர் தயாரிக்கும் நயன்தாரா -ராகவா லாரன்ஸ் நடிக்கும் படத்தை நயன்தாரா விருப்பம் போல் அஜித் படத்துடன் மோத விடுவதற்கு ஓகே செய்துள்ளதால், நினைத்ததை சாதித்து விட போகிறோம் என்கிற பெரும் மகிழ்ச்சியில் நயன்தாரா இருப்பதாக கூறப்படுகிறது.

இன்ஸ்டாகிராமில் தனது சமீபத்திய ரகசிய செய்தியுடன் மிகவும் மதிப்பிடப்பட்ட இயக்குனர், ‘AK 62’ எபிசோடிற்கு நன்றி தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார், ஏனெனில் இது அவரது தனிப்பட்ட வாழ்க்கையை குறிப்பாக அவரது இரண்டு இரட்டை மகன்களை அனுபவிக்க நேரம் கொடுத்தது. “கடவுளுக்கும், இந்த கடினமான காலங்களில் நான் சந்தித்த அன்பான மனிதர்களுக்கும் நன்றி, உங்கள் அரவணைப்பும் என் மீதான நம்பிக்கையும் என்னைக் கண்டறிய உதவியது மட்டுமல்லாமல், இந்த கணிக்க முடியாத, நிச்சயமற்ற சூழ்நிலையில் உயிர்வாழ்வதற்கான நம்பிக்கையையும் எனக்கு அளித்தது! இன்று நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். உங்கள் நல்வாழ்வின் எதிர்காலச் செலவை எதிர்நோக்குகிறோம்! எனது குடும்பத்தினர், நண்பர்கள், நலம் விரும்பிகள் மற்றும் சில இனிமையான ரசிகர்கள் நன்றி”

- Advertisement -

சமீபத்திய கதைகள்