Sunday, April 14, 2024 4:47 am

தனுஷை விட்டு நிரந்தரமாகப் பிரிய முடிவெடுத்த ஐஸ்வர்யா ! நீதிமன்றத்தில் விவாகரத்துப் பதிவு இதோ

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து செய்ததாக கூறப்படுகிறது, இப்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து கோரி சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக ட்விட்டர் பிரபலமும் சென்சார் போர்டு உறுப்பினருமான ஒமைர் சந்து தெரிவித்துள்ளார். ட்விட்டர் பிரபலமும், சென்சார் போர்டு உறுப்பினருமான ஒமைர் சந்து, அதிகாரப்பூர்வமாக விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

2002-ஆம் ஆண்டிலிருந்து ஒருவரையொருவர் காதலித்து வந்த தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா 2004 ஆம் ஆண்டு இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்வில் இணைந்தனர். குறிப்பாக 18 ஆண்டுகள் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்த இவர்கள் திடீரென பிரிவதாக கடந்தாண்டு அறிவித்தனர்.

இதனையடுத்து இவர்களின் பிரிவு திரையுலகில் மட்டுமன்றி ரசிகர்கள் மத்தியிலும் பேசுபொருளாக மாறியது. இதனால் பலரும் இவர்களின் பிரிவிற்கு பல காரணங்களை கூறி வந்தனர். இருப்பினும் தங்களுடைய பிரிவிற்கு பிறகு தனித்தனியாக வாழ்ந்து வரும் இருவரும் தங்கள் வேலைகளில் பிசியாக வருகின்றார்கள்.

நாட்கள் நகர்ந்தாலும் இவர்களின் பிரிவுக்கான உண்மைக் காரணம் என்னவாக இருக்கும் என்று யாராலும் இன்றுவரை கண்டு பிடிக்க முடியவில்லை. குறிப்பாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரிவிற்கான பல காரணங்களை பலரும் சொல்ல, அதில் முக்கிய காரணமாக கூறப்படுவது தனுஷ் மற்ற ஹீரோயின்களுடன் காட்டிய நெருக்கம் தான் என ஒரு சிலர் கூறுகின்றனர்.

அதாவது படத்தில் நெருக்கமான காட்சிகளில் தனுஷ் நடிப்பது ஐஸ்வர்யாவிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்பதாலும், அதன் காரணமாக பல பிரச்சனைகள் வந்ததாகவும் கூறுகின்றனர். இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யா சிவில் நீதிமன்றத்தில் முறையான விவாகரத்திற்கு விண்ணப்பித்துள்ளதாக ட்விட்டர் பிரபலமும், சினிமா விமர்சகரும், சென்சார் போர்டு உறுப்பினருமான உமர் சந்து ட்விட்டர் பக்கத்தின் மூலம் கூறியுள்ளார்.

மேலும் இப்பதிவில் தனுஷ் வேறொரு பெண்ணுக்காக ஐஸ்வர்யாவை ஏமாற்றியதன் காரணமாகத்தான் இந்த விவாகரத்து நடைபெறுகின்றது என்ற பரபரப்பான செய்தியையும் வெளியிட்டுள்ளார் உமர் சந்து. ஆனால் இந்த செய்தி எந்தளவிற்கு உண்மையாக இருக்கும் என்பது தெரியவில்லை.

அதாவது சில மாதங்களுக்கு முன்பு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் இணையப்போவதாக ஒரு சில தகவல்கள் வெளிவந்தன. ஆனால் தற்போது ஐஸ்வர்யா தனுஷிடமிருந்து நிரந்தரமாக பிரிவதற்காக விவாகரத்திற்கு விண்ணப்பித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. எனவே உண்மை நிலவரம் என்ன என்பது இருதரப்பில் இருந்து வெளிவரும் அறிவிப்பில் தான் தெரியும்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் கிரிக்கெட்டை மையமாக வைத்து ‘லால் சலாம்’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலை பகுதியில் மார்ச் 7ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல்கட்ட படப்பிடிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நடிகை ஜீவிதா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்