32 C
Chennai
Saturday, March 25, 2023

தல ரசிகர்களே ரெடியா! ” ஏ கே 62 ” படம் குறித்து உதயநிதி சொன்ன விஷயம்! அப்போ சம்பவம் கன்பார்ம்.!

Date:

தொடர்புடைய கதைகள்

யார் இந்த பெசன்ட் ரவி ? இறுதி வரை...

சூப்பர் ஸ்டார் அஜித் குமாரின் தந்தை பி சுப்பிரமணியம் சென்னையில் வெள்ளிக்கிழமை...

துல்கர் சல்மான் நடிக்கும் அடுத்த படத்தை பற்றிய லேட்டஸ்ட்...

துல்கர் சல்மான் தனது 28 வயதில் திரைப்படத்தில் அறிமுகமானார், பல நட்சத்திர...

‘விடுதலை’ ரிலீஸுக்கு முன்னதாக வெற்றி மாறன் சர்ச்சையில் சிக்கியுள்ளார்...

வெற்றி மாறன் தனது அடுத்த வெளியீடான 'விடுதலை' படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில்...

தனது அப்பாவை இழந்து தவிக்கும் நிலையில் அஜித்திற்கு லைகா...

அஜித்குமாரின் தந்தை பி.எஸ்.மணி கடந்த மார்ச் 24ஆம் தேதி சென்னையில் காலமானார்....

விஜய் சத்யா நடித்த ரஜினி படத்தின் ட்ரைலர் இதோ...

விஜய் சத்யாவின் ரஜினி படத்தின் டிரைலரை தயாரிப்பாளர்கள் வியாழக்கிழமை வெளியிட்டனர். வெங்கடேஷ்...

நடிகை ஷாலினி அஜித்குமார் கடந்த ஆண்டு தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கைத் திறந்தார், நடிகை தொடர்ந்து தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில், ஷாலினி நான்கு பேர் கொண்ட குடும்பத்தின் புகைப்படத்தைப் பகிர்ந்துகொண்டு, “குழந்தைகளுடன் இருப்பதன் மூலம் ஆன்மா குணமாகும்” என்று தலைப்பிட்டார். புதிய இடுகையில் ஷாலினியும் அஜித்குமாரும் தங்கள் இரண்டு குழந்தைகளுடன் பரந்த பசுமையான மைதானத்தில் உள்ளனர்.

‘துணிவு’ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ‘ஏகே 62’ படத்தில் நடிக்கவுள்ளார் அஜித். இந்தப்படத்திற்கான அறிவிப்பை ரசிகர்கள் எப்போது வெளியிடுவார்கள் என வழி மேல் விழி வைத்து காத்திருக்கின்றனர் ரசிகர்கள். ‘ஏகே 62’ படத்தின் இயக்குனர் மகிழ் என்பது கன்பார்ம் ஆகிவிட்டாலும் அதற்கான அறிவிப்பை வெளியிடாமல் உள்ளனர் படக்குழுவினர்.

கடந்த ஜனவரி மாதம் அஜித் நடிப்பில் ‘துணிவு’ படம் வெளியானது. நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய், அஜித் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆனது. இதனால் திரையரங்கே திருவிழாக்கோலம் பூண்டது. ‘வாரிசு’ படம் முழுக்க முழுக்க பேமிலி செண்டிமென்ட் கொண்ட கதையம்சமாகவும், ‘துணிவு’ படம் ஆக்ஷன் ஜானரிலும் உருவானது. வங்கி கொள்ளையை மையமாக வைத்து இந்தப்படம் உருவாகியிருந்தது.

கடந்த பொங்கல் வெளியீடாக ரிலீசான இதில் மூன்றாவது முறையாக அஜித், போனி கபூர், எச். வினோத் கூட்டணி இணைந்தது. மேலும் இந்தப்படத்திற்காக சால்ட் அன்ட் பெப்பர் ஹேர்ஸ்டைல், காதில் கடுக்கன் என வேறலெவலில் லுக்கில் அஜித் இருந்தனர். ‘துணிவு’ படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘ஏகே 62; படத்தில் நடிக்கவுள்ளார் அஜித்.

‘துணிவு’ பட ரிலீசுக்கு முன்பாகவே ‘ஏகே 62’ படம் குறித்த அறிவிப்பு வெளியானது. லைகா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்தப்படம் உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென இந்தப்படத்திலிருந்து விக்கி விலகுவதாக தகவல்கள் வெளியானது. இதனை உறுதி செய்யும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்திலிருந்து அஜித்தின் புகைப்படத்தை நீக்கினார் விக்னேஷ் சிவன்.

‘ஏகே 62’ படத்திலிருந்து விக்கி விலகியதை தொடர்ந்து மகிழ் திருமேனி இந்தப்படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது. தடையற தாக்க, தடம், கலகத்தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழுடன் கூட்டணி அமைத்துள்ளார் அஜித். இதனால் இந்தப்படம் ஆக்ஷன் ஜானரில் வேறலெவலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘ஏகே 62’ பட அறிவிப்பிற்காக ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கும் நிலையில் உதயநிதி ஸ்டாலின் இந்தப்படம் குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். இதில் மகிழ் திருமேனி இந்தப்படத்தை இயக்கவுள்ளதை உறுதி செய்துள்ளார். எல்லோரையும் இந்தப்படம் வெற்றியடைய தானும் விரும்புவதாக தெரிவித்துள்ளார். ‘ஏகே 62’ படத்தை மகிழ் இயக்குவது உறுதியாகியுள்ளதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

விக்னேஷ் சிவனின் விஷயத்தில் நடந்ததைப்போல இம்முறை நடந்துவிடக்கூடாது என கவனமாக இருந்து வருகின்றார் அஜித். அதன் காரணமாக ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்து வருகின்றார். இதையடுத்து இயக்குனர் மகிழ் திருமேனிக்கு அஜித் பல கண்டிஷன்களை விதித்துள்ளார். பொதுவாக மகிழ் திருமேனி ஒரு படத்தை இயக்க அதிக காலம் எடுத்துக்கொள்வார் என்ற குற்றச்சாட்டு இருந்து வருவதால் அஜித்படத்தை ஐந்தே மாதத்திற்குள் முடித்துவிட்டு இந்தாண்டு படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என கண்டிஷன் போட்டுள்ளாராம். ஏனென்றால் இப்படத்தை முடித்த கையோடு அஜித் வேர்ல்ட் டூர் செல்ல இருப்பதால் இந்த கண்டிஷனை அஜித் போட்டுள்ளதாக பேசப்பட்டு வருகின்றது. இதைத்தவிர அஜித் மேலும் சில கண்டிஷன்களையும் மகிழ் திருமேனிக்கு போட்டுள்ளார். அனைத்து கண்டிஷன்களுக்கும் மகிழ் திருமேனி ஓகே கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

அஜீத் கடைசியாக தமிழ் திரைப்படமான ‘துனிவு’ படத்தில் நடித்தார், அவர் இப்போது இயக்குனர் மகிழ் திருமேனியுடன் தனது அடுத்த படமான ‘AK 62’க்கான தனது வேலையை விரைவில் தொடங்கவுள்ளார். முன்னதாக, விக்னேஷ் சிவன் தற்காலிகமாக ‘ஏகே 62’ என்ற தலைப்பை இயக்குவார் என்று கூறப்பட்டது, ஆனால் பின்னர் அவர் அஜித்தை ஒரு புதிய படத்திற்காக இயக்குவார் என்றும், வரவிருக்கும் திட்டமான ‘ஏகே 62’ மகிழ் திருமேனி இயக்குவார் என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த படத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்க உள்ளதாகவும், இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்திய கதைகள்