Saturday, February 24, 2024 8:46 pm

ரோலெக்ஸை மிஞ்சும் ரேஞ்சுக்கு செம்ம மாஸான வில்லனாக அஜித்தை நடிக்க வைக்க பிளான் இயக்குனர் ! செவி சாய்ப்பரா அஜித் !

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் நாட்டு நாட்டு பாடலுக்காக RRR திரைப்படம் திங்களன்று ஆஸ்கார் விருதை வென்ற பிறகு ராம் சரண் கிளவுட் ஒன்பதில் இருக்கிறார். அது மட்டுமின்றி, ஆஸ்கார் விருதை வென்ற இந்திய தயாரிப்பு நிறுவனத்தின் முதல் பாடல் என்ற வரலாறும் படைத்தது. இதற்கிடையில், தயாரிப்பாளர் தில் ராஜு, சமீபத்தில் ஒரு பேட்டியில், RC15 தயாரிப்பாளர்கள் ராம் சரண் பிறந்தநாளில் படத்தின் போஸ்டர் மற்றும் தலைப்பை வெளியிடுவார்கள் என்று கூறினார். இந்த படத்திற்காக சேனானி, சேனாபதி, CEO மற்றும் சோல்ஜர் ஆகிய நான்கு தலைப்புகளை தயாரிப்பாளர்கள் பரிசீலித்து வருவதாக தெலுங்கு தெரிவித்துள்ளது.


மகிழ் திருமேனி இயக்கும் ஏகே 62 படத்தில் நடிக்க தயாராகி வரும் அஜித்துக்கு, பிரம்மாண்ட இயக்குனரின் படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாம்.


நடிகர் அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்ததை அடுத்து ஏகே 62 படத்தில் நடிக்க தற்போது வெறித்தனமாக தயாராகி வருகிறார் அஜித். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய உள்ளாராம். தற்போது ஏகே 62 படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம்.


இதனிடையே நடிகர் அஜித்தை ஷங்கர் இயக்கத்தில் தற்போது பிரம்மாண்டமாக தயாராகி வரும் ஆர்.சி.15 படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக ஒரு தகவல் கோலிவுட்டில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. ஆர்.சி.15 படத்தில் ராம்சரண் நாயகனாக நடிக்கிறார். இதில் எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, கியாரா அத்வானி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் நிலையில், தற்போது அஜித்தை என்ன கேரக்டரில் நடிக்க அணுகியுள்ளார்கள் என்கிற தகவலும் வெளிவந்துள்ளது.


அதன்படி ஆர்.சி.15 படத்தில் அஜித்தை செம்ம மாஸ் ஆன வில்லனாக நடிக்க வைக்க ஷங்கர் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. விக்ரம் படத்தில் இடம்பெற்ற ரோலெக்ஸ் கதாபாத்திரம் போல் அஜித்திற்கும் செம்ம பவர்புல்லான ஒரு ரோலை தயார் செய்து வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதற்கு அஜித் ஓகே சொல்வாரா என்பது தான் சந்தேகமாக உள்ளது.


ஏனெனில் தற்போது ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கும் அஜித், வில்லனாக நடிக்க சம்மதிப்பது கடினம் தான் என்பதே கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது. மறுபுறம் வாலி, மங்காத்தா போன்ற திரைப்படங்களில் நடிகர் அஜித் வில்லன் கேரக்டரில் மிரட்டி இருந்ததால், இதிலும் அவர் நடிக்க சம்மதிக்க வாய்ப்பு இருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது. ஷங்கரின் அழைப்பை ஏற்று ஆர்.சி 15-ல் நடிக்க ஓகே சொல்வாரா ஏகே என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

RC15 க்கான சில குறிப்பிடத்தக்க ஃப்ளாஷ்பேக் காட்சிகளை படமாக்க ரூ.10 கோடி மதிப்பிலான செட் சமீபத்தில் கட்டப்பட்டது. எஸ் ஷங்கர் இயக்கத்தில் எஸ் தமன் இசையமைத்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. அவரது வேலையைப் பொறுத்தவரை, ராம் சரண் அடுத்ததாக இயக்குனர் புச்சி பாபு சனாவுடன் ஒரு விளையாட்டு நாடகத்தில் ஒத்துழைக்கவுள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்