28.3 C
Chennai
Wednesday, March 22, 2023

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் கூப்பிடும் படத்தில் நடிக்க மறுத்த அஜித் !! பலரும் அறியாத உண்மை தகவல் !

Date:

தொடர்புடைய கதைகள்

விஜய் டிவி அசத்தப் போவது யாரு புகழ் கோவை...

தொலைக்காட்சி பிரபலமும், நகைச்சுவை நடிகரும், மிமிக்ரி கலைஞருமான கோவை குணா இன்று...

RC15 படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்...

இயக்குனர் ஷங்கர் தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2 மற்றும் ராம் சரணின்...

இயக்குனர் கல்யாண் இயக்கும் படத்தை பற்றிய லேட்டஸ்ட்...

குலேபகாவலி மற்றும் ஜாக்பாட் போன்ற நகைச்சுவைப் படங்களுக்கு பெயர் பெற்ற திரைப்படத்...

சூர்யா 42 படத்தின் டைட்டிலை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்...

சூர்யா சிறுத்தை சிவாவுடன் தற்காலிகமாக சூர்யா 42 என்று பெயரிடப்பட்டுள்ள படத்திற்கு...

கவுண்டவுனை ஆரம்பித்த அஜித் !! ரசிகர்கள் எதிர்பார்த்த ...

ஜனவரியில் வெளியான துணிவு நல்ல வரவேற்பைப் பெற்றதில் இருந்து, அஜித் விடுமுறையில்...

கமல்ஹாசன் தற்போது ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார், மேலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டாம் பாகத்திற்கான வேலைகள் வேகமாக நடந்து வருகின்றன. இயக்குனர் ஷங்கருடன் கமல்ஹாசன் மீண்டும் இணைவதை இப்படம் குறிக்கிறது, மேலும் பிளாக்பஸ்டர் இரட்டையர் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது, லேட்டஸ்ட் அப்டேட் என்னவெனில், ‘இந்தியன் 2’ படத்துக்காக கமல்ஹாசன் பிரமாண்டமான ஆக்ஷன் காட்சியை எடுக்கிறார். ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு கல்பாக்கத்தில் உள்ள சத்ராஸ் டச்சு கோட்டையில் நடந்து வருகிறது, மேலும் கமல்ஹாசனை சந்திக்க ரசிகர்கள் அதிக அளவில் கூடுவதை சமீபத்திய வீடியோவில் பார்த்தோம். பழம்பெரும் நடிகர் இப்போது சமீபத்திய படத்தில் ‘இந்தியன் 2’ இன் ஸ்டண்ட் குழுவுடன் கலந்துரையாடுவதைக் கண்டார், மேலும் அனுபவம் வாய்ந்த நடிகர் டச்சு கோட்டையில் ஒரு பெரிய அதிரடி காட்சிக்காக படப்பிடிப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.

பிரம்மாண்டத்திற்கு பேர் போனவர் இயக்குனர் சங்கர். தமிழில் முன்னனி நடிகர்களாக இருக்கும் கமல், ரஜினி, விஜய், அர்ஜூன் போன்ற பல நடிகர்களுடன் பணியாற்றிய சங்கர் இதுவரைக்கும் அஜித்துடன் சேர்ந்து மட்டும் படம் பண்ணவே இல்லை. அவர்களுக்குள் ஏதாவது பிரச்சினையா? அல்லது அஜித் மறுத்து வந்தாரா? என்ற பல கேள்விகள் முன்வைக்கப்பட்ட நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரபல பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு ஏன் இதுவரைக்கும் அவர்கள் சேர வில்லை என்பதன் காரணத்தை கூறியிருக்கிறார்.

பிரசாந்த் இரட்டை வேடங்களில் நடித்து மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்த திரைப்படம் ‘ஜீன்ஸ்’. அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி என்றாலும் பிரசாந்தின் கெரியரையே மாற்றிய படமாக அமைந்தது. ஆனால் அந்தப் படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் நடிகர் அஜித். அஜித்திடமும் கதையை சொன்ன சங்கர் அஜித்திற்கும் கதை பிடித்துப் போக கண்டிப்பாக பண்ணலாம் என்று கூறியிருக்கிறார்.

ஆனால் சங்கரை பொறுத்தவரைக்கும் அவர் படங்களில் நடிக்க முழு கால்ஷீட்டையும் அவர் படத்திற்காக கொடுத்தாக வேண்டும். அந்த விஷயத்தில் தான் அஜித் மிஸ் பண்ணிட்டாரு. அப்போது ஏற்கெனவே இரண்டு படங்களில் கமிட் ஆகியிருந்த அஜித்தை அந்தப் படங்களை எல்லாம் கேன்சல் செய்து விட்டு வாருங்கள் என்று சங்கர் சொன்னாராம். ஆனால் அவர்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும் என சொன்னதன் பேரில் அஜித் இந்தப் படத்தில் இருந்து விலக நேர்ந்ததாம்.

சரி அந்தப் படம் தான் அப்படி ஆகிப் போச்சு என்று ‘முதல்வன்’ படத்தின் கதையை அஜித்தை மனதில் வைத்தேதான் எழுதியிருந்தாராம். அதையும் அஜித்திடம் சொல்லியிருக்கிறார். அதைக் கேட்ட அஜித் இந்த மாதிரி அரசியல் சார்ந்த படங்கள், சமூகம் சார்ந்த படங்களில் நடிக்க இன்னும் எனக்கு தகுதி போதாது என்று சொல்லிவிட்டாராம்.

அடுத்ததாக சிவாஜி படத்தையும் அஜித்தை மனதில் வைத்து தான் எழுதியிருந்தாராம். அதுவும் நடக்க வில்லையாம். ஒரு கட்டத்தில் அஜித்திற்கே இப்படி ஆகிப்போச்சே? என சங்கரிடம் நாம சேர்ந்து பண்ணலாம் என்று சொன்னாராம். அப்போது சங்கரிடம் இருந்த கதை ‘எந்திரன்’. அந்தப் படம் எந்த அளவுக்கு பிரம்மாண்டமாக இருந்தது என அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

இதையும் அஜித்திடம் சொல்லியிருக்கிறார். அதைக் கேட்ட அஜித் இத்தனை பிரம்மாண்டமான படத்தில் நடிக்க விருப்பம் இல்லை எனவும் ஒரு வேளை படம் சரியாக ஓடவில்லை என்றால் தயாரிப்பாளர்கள் படும் அவஸ்தையை தன்னால் பார்க்க முடியாது எனவும் கூறினாராம்.

அவ்ளோதான் அதிலிருந்து இன்று வரை அஜித்தும் சங்கரும் இணையவே இல்லை. ஒரு வேளை வாய்ப்பு இருந்தால் அஜித்தின் அடுத்தப் படமான ஏகே63 படத்தில் சங்கர் இணையலாம் என்று செய்யாறு பாலு கூறினார்.

‘இந்தியன் 2’ படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர், படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.

சமீபத்திய கதைகள்