Friday, April 26, 2024 2:08 am

அடப்பாவமே ஆஸ்கர் விருதுக்காக கோடிகணக்கில் செலவு செய்தாரா எஸ். ராஜமவுலி? ரசிகர்கள் அதிர்ச்சி

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ஆஸ்கார் விருது விழாவில் இந்தியாவுக்கு இது ஒரு பெரிய நாள். மூன்று பரிந்துரைகளில், சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான நாட்டு நாடு மற்றும் சிறந்த ஆவணக் குறும்படத்திற்கான தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் உட்பட இரண்டு விருதுகளை இந்தியா வென்றது. விருது பெற்ற ஆர்ஆர்ஆர் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி மற்றும் ஆவணப்படத்தின் தயாரிப்பாளர்கள் கார்த்திகி கோன்சால்வ்ஸ் மற்றும் குணீத் மோங்கா ஆகியோருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

ஆஸ்கர் விருது பெறுவதற்காக ஆர்.ஆர்.ஆர். பட இயக்குநர் ராஜமவுலி ரூ. 80 கோடி செலவு செய்திருப்பதாக இயக்குநர் தம்மாரெட்டி பரத்வாஜா கூறியுள்ளார்.

எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரம், ஜூனியர் என்.டி.ஆர்., ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்டார் நடித்த ஆர்.ஆர்.ஆர். படத்தில் வந்த நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.அத்தோடு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான விருது நாட்டு நாட்டுவுக்கு கிடைத்திருக்கிறது.

சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருது பெற்ற முதல் இந்திய பட பாடல் என்கிற பெருமையை பெற்றிருக்கிறது நாட்டு நாட்டு. இவ்வாறுஇருக்கையில் இயக்குநர் தம்மாரெட்டி பரத்வாஜா கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. ஆஸ்கர் விருது பெற ராஜமவுலி ரூ. 80 கோடி செலவு செய்திருக்கிறார். ரூ. 600 கோடி செலவில் படம் எடுத்து அதை ஆஸ்கருக்காக விளம்பரம் செய்ய ரூ. 80 கோடி செலவு செய்திருக்கிறார்கள்.அத்தோடு ஆஸ்கர் விளம்பர செலவில் மட்டுமே 8 முதல் 10 படங்களை எடுக்கலாம் என்றார்.

ஆர்.ஆர். ஆர். படம் பற்றி செய்தியாளர்களிடம் தம்மாரெட்டி கூறியதை கேட்ட இயக்குநர் ராகவேந்திர ராவ் ட்விட்டரில் தெரிவித்திருப்பதாவது, உலக அரங்கில் முதல் முறையாக கிடைத்திருக்கும் வெற்றியை நினைத்து தெலுங்கு சினிமா, நடிகர்கள், இயக்குநர்கள் பெருமைப்பட வேண்டும். அத்தோடு ஆர்.ஆர்.ஆர். குழு ரூ. 80 கோடி செலவு செய்ததற்கான ஆதாரம் உங்களிடம் இருக்கிறதா?. நம்மிடம் இருந்து பணம் பெற்றதற்காக உலக பிரபலமான இயக்குநர்களான ஜேம்ஸ் காமரூன், ஸ்பீல்பர்க் ஆகியோர் ஆர்.ஆர்.ஆர். படத்தை பாராட்டினார்கள் என நினைக்கிறீர்களா என கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்தோடு திறமைக்காக தான் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது கொடுத்திருக்கிறார்கள். அதை பார்த்து பொறாமையில் பேசுகிறார் தம்மாரெட்டி. அதை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. வயித்தெரிச்சல் இருக்கத் தானே செய்யும். தம்மாரெட்டியை பொருட்படுத்த வேண்டாம் என்கிறார்கள் தெலுங்கு சினிமா ரசிகர்கள்.

ரூ. 80 அல்ல ரூ. 83 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. கோல்டன் குளோப் மற்றும் ஆஸ்கர் விருது விளம்பரங்களுக்காக ரூ. 83 கோடி செலவு செய்திருக்கிறார்கள். அதில் பெரும் தொகையை ராஜமவுலி தான் கொடுத்திருக்கிறார். அவரின் வங்கிக் கணக்கில் இருந்து தான் பணம் சென்றிருக்கிறது. ஜப்பான் மற்றும் ரஷ்யாவில் ஆர்.ஆர்.ஆர். படம் செய்த வசூலில் இருந்து சிறு தொகையை விளம்பரத்திற்காக எடுத்தார்கள் என அண்மையில் தகவல் வெளியானது. ஆனால் அது உறுதி செய்யப்படாத தகவல் ஆகும்.

இதற்கிடையில், நாட்டு நாட்டு குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர், “ஆஸ்கார் விருதை வென்ற முதல் இந்திய மற்றும் ஆசிய பாடல் என்ற சாதனையை நாட்டு நாடு படைத்துள்ளது. இந்த அபார சாதனைக்காக எம்.எம்.கீரவாணி காரு, சந்திரபோஸ், ராகுல் சிப்ளிகஞ்ச் & கால பைரவா, எஸ்.எஸ்.ராஜமௌலி, ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் மற்றும் ஒட்டுமொத்த ஆர்.ஆர்.ஆர் குழுவிற்கும் வாழ்த்துகள்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்