Saturday, April 1, 2023

தீர்ந்தது குழப்பம் AK 62 படத்தின் முக்கிய அப்டேட்டை கூறிய உதயநிதி !!

தொடர்புடைய கதைகள்

பெய்ஜிங் சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவிற்கு சிறுவன் சாமுவேல் தேர்வு

அறிமுக இயக்குனர் சாது பர்லிங்டன் இயக்கிய குழந்தைகளுக்கான திரைப்படமான சிறுவன் சாமுவேல்,...

யாருமே எதிர்பாக்காத 4 இளம் இயக்குனர்களை டிக் செய்த அஜித் !அடுத்தடுத்து 2 படம்!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான அஜித்குமார், தனது தந்தை பி சுப்பிரமணியத்தின்...

ஆர்யாவின் ‘காதர்பாஷா எந்திர முத்துராமலிங்கம்’ படத்தின் டீசர்

'கொம்பன்' மற்றும் 'விருமண்' போன்ற கிராமிய ஆக்‌ஷன் என்டர்டெயின்னர்களுக்கு பெயர் பெற்ற...

ருத்ரன் படத்தின் சிங்கிள் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

ராகவா லாரன்ஸின் ருத்ரன் படத்தின் அடுத்த சிங்கிள் பாடலான உன்னோடு வாழ்த்துக்காக...

ரேசர் படத்தின் ட்ரைலர் இதோ !

வரவிருக்கும் தமிழ் திரைப்படமான ரேசரின் தயாரிப்பாளர்கள் திங்களன்று படத்தின் டிரெய்லரை வெளியிட்டனர்....

ஏகே 62 நட்சத்திர நடிகர்கள் பற்றி அதிகம் எதுவும் வெளியிடப்படவில்லை என்றாலும், பிரபல நடிகர்கள் அருண் விஜய் மற்றும் அருள்நிதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க அணுகியதாக வதந்திகள் தெரிவிக்கின்றன. அப்படியானால், இந்த திட்டம் 2015-ல் வெளியான பிளாக்பஸ்டர் யென்னை அறிந்தால் பிறகு அஜித் மற்றும் அருண் மீண்டும் இணைவதை குறிக்கலாம். படத்தின் கதாநாயகி யார் என்பதை தயாரிப்பாளர்கள் இன்னும் முடிவு செய்யவில்லை.

ஒரு பக்கம் விஜய்யின் ‘லியோ’ படப்பிடிப்பு துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கடந்த பொங்கலுக்கு விஜய், அஜித்தின் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆனது. இதனையடுத்து இருவரும் தங்களின் அடுத்த படங்களில் நடிப்பார்கள். அந்த படங்களும் தீபாவளியில் மோதும் என கூறப்பட்டது. ஆனால் விஜய் படம் துவங்கி முழு வீச்சில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் நிலையில் அஜித்தின் படம் குறித்தி மூச்சே விடாமல் இருக்கின்றனர் படக்குழுவினர்.

அஜித்தின் ‘துணிவு’ பட ரிலீசுக்கு முன்பே ‘ஏகே 62’ அறிவிப்பை லைகா நிறுவனம் அறிவித்தது. முதன்முறையாக லைகா மாதிரியான ஒரு பெரிய நிறுவனத்திற்கு அஜித் படம் கொடுத்தது ரசிகர்கள் மத்தியில் மிகபெரிய எதிர்பார்ப்பை கிளப்பியது. மேலும் விக்னேஷ் சிவன் இந்தப்படத்தை இயக்குவதாக கூறப்பட்டது. விக்கியின் மேக்கிங் ஸ்டைலுக்கும், அஜித்துக்கும் ஒத்து வருமா என பலரும் சந்தேகித்தாலும், இவர்களின் காம்போ எப்படி இருக்கும் என்பதை பார்க்க அனைவரும் ஆர்வமாக இருந்தனர்.

இந்நிலையில் தான திடீரென ‘ஏகே 62’ படத்திலிருந்து விக்னேஷ் சிவன் விலகியதாக தகவல்கள் வெளியாகின. அதாவது இந்தப்படத்திற்கு விக்கி தயார் செய்த கதை அஜித்துக்கும், தயாரிப்பு தரப்புக்கும் பிடிக்கவில்லை என கூறப்பட்டது. இதனால் அவர் இந்த்ப்படத்திலிருந்து விலகியுள்ளார். விக்னேஷ் சிவன் ‘ஏகே 62’ படத்திலிருந்து விலகியுள்ளது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

அவரை தொடர்ந்து பல இயக்குனர் இந்தப்படத்தை இயக்குவதாக பேசப்பட்டாலும் இறுதியில் மகிழ் திருமேனி ‘ஏகே 62’ படத்தை இயக்கவுள்ளதாக உறுதியான தகவல்கள் வெளியாகின. ஆனால் இதனை படக்குழுவினர் தற்போது வரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் இருக்கின்றனர். தடையற தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட ஆக்ஷன் படங்களை இயக்கிய மகிழ் திருமேனியுடன் அஜித் இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் உச்சக்கட்ட எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது.

இதனையடுத்து இந்தப்படத்தில் நடிக்கவுள்ள வில்லன்கள் குறித்து பல தகவல்கள் இணையத்தில் கசிந்து வருகிறது. ஆரம்பத்தில் அருண் விஜய் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. அவரை தொடர்ந்து அருள் நிதியிடமும் பேச்சுவார்த்தை நடந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இவர்களை தொடர்ந்து ஆர்யா ‘ஏகே 62’ படத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே மகிழுடன் ‘மீகாமன்’ மற்றும் அஜித்துடன் ;ஆரம்பம்’ படங்களில் பணியாற்றியுள்ளார்.


இவ்வாறு ‘ஏகே 62’ படம் குறித்து பல தகவல்கள் இணையத்தில் கசிந்து வரும் நிலையில் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி இந்தப்படத்தில் நடிக்கவுள்ளதாக சோஷியல் மீடியாவில் செய்திகள் பரவி வருகின்றன. அவரது பெரியில் இருக்கும் ட்விட்டர் கணக்கிலிருந்து இந்த செய்தி வெளியாக தொகுப்பாளினி திவ்யதர்ஷினியும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆனால் இந்த ட்விட்டர் கணக்கு போலியானது என்றும் கூறப்படுகிறது. சைத்ரா ரெட்டி ஏற்கனவே அஜித்தின் ‘வலிமை’ படத்திலும் நடித்து குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கன்னைநம்பாதே படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உதயநிதி அஜித் அடுத்த இயக்குனர் மகிழ்திருமேனி தான் என்று அதிகாரப்பூர்வமாக அவர் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது இதோ உங்கள் பார்வைக்கு

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான அஜீத் குமார் தனது சமீபத்திய வெளியீடான வலிமையின் வணிக ரீதியான வெற்றியால் தற்போது உச்சத்தில் இருக்கிறார். ஸ்டைலிஷ் நடிகர் தற்போது தமிழ் சினிமாவில் தனது 62வது படப்பிடிப்பை தொடங்க உள்ளார். திறமையான திரைப்பட தயாரிப்பாளரான மகிழ் துருமேனியால் இயக்கப்படும் இந்த திட்டத்திற்கு தற்காலிகமாக ஏகே 62 என்று பெயரிடப்பட்டுள்ளது. சமீபத்திய புதுப்பிப்புகளின்படி, ஏகே 62 இப்போது அதிகாரப்பூர்வமாக பூஜை விழாவுடன் தொடங்கப்பட்டது, இது சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

சமீபத்திய கதைகள்