Monday, April 15, 2024 10:57 pm

அஜித் கூறிய அந்த ஒரு வார்த்தை ! AK 62 படத்துக்கு பக்காவா ஸ்கெட்ச் போடும் மகிழ்திருமேனி !

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இந்த ஆண்டு இறுதியில் ‘AK 62’ முடித்த பிறகு, அஜித் தனது உலக பைக் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார், அது “பரஸ்பர மரியாதைக்காக சவாரி” என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த சுற்றுப்பயணம் அனைத்து கண்டங்கள் மற்றும் உலகின் முக்கிய நகரங்களை உள்ளடக்கும் என்றும், முடிக்க சுமார் 18 மாதங்கள் ஆகும் என்றும் கூறப்படுகிறது.

“துணிவு” திரைப்படத்தை தொடர்ந்து அஜித்குமாரின் 62 ஆவது திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்தன.விக்னேஷ் சிவன் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் கூட “ஏகே 62” என்று தனது பயோவில் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் சில காரணங்களால் “ஏகே 62” புராஜக்ட்டில் இருந்து விக்னேஷ் சிவன் விலகிவிட்டார். குறிப்பிட்ட காலத்திற்குள் ஸ்கிரிப்ட் பணிகளை முடிக்கவில்லை எனவும், விக்னேஷ் சிவன் கூறிய கதை அவ்வளவாக அஜித்தை ஈர்க்கவில்லை எனவும் சில பேச்சுக்கள் அடிபட்டன. எனினும் விக்னேஷ் சிவன் தனது டிவிட்டர் பக்கத்தின் பயோவில் இருந்து “ஏகே 62” என்ற தலைப்பை நீக்கிவிட்டார்.

இதனை தொடர்ந்து மகிழ் திருமேனி “ஏகே 62” திரைப்படத்தை இயக்கவுள்ளதாக தெரியவருகிறது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என கூறப்பட்டது. எனினும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த எந்த தகவலும் இதுவரை வெளிவரவில்லை.

அதே போல் இத்திரைப்படத்தை மகிழ் திருமேனிதான் இயக்கவுள்ளார் என்பது ஓரளவு உறுதிப்படுத்தப்பட்ட தகவலாகவே இருந்தாலும், இத்திரைப்படத்தை தயாரிக்கவுள்ள லைகா நிறுவனம் அதிகாரபூர்வமாக இதுவரை அறிவிக்கவில்லை.

இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு, சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது “ஏகே 62” திரைப்படத்தை குறித்த ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.

அதாவது “ஏகே 62” திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் முதல் வாரம் தொடங்கும் என கூறப்படுகிறதாம். மேலும் இத்திரைப்படத்திற்கான தாமதத்திற்கு காரணம் என்னவென்றால், இத்திரைப்படம் பேன் இந்தியா படமாக வெளிவரவுள்ளதால், கிட்டத்தட்ட இந்திய மொழிகளுக்கு பொதுவாக உள்ள ஒரு பெயரை டைட்டிலாக வைக்க வேண்டும் என அஜித் விருப்பப்படுகிறாராம்.

அதே போல், அஜித்குமார் இத்திரைப்படத்தின் முழு ஸ்கிரிப்ட்டையும் எழுதி கொண்டு வரச்சொல்லியிருக்கிறாராம். ஆதலால் மகிழ் திருமேனி ஒரு நட்சத்திர ஹோட்டலில் அறை எடுத்து ஸ்டோரி போர்டு தயார் செய்துகொண்டிருக்கிறாராம்.

இந்த காரணங்களினால்தான் “ஏகே 62” திரைப்படம் தாமதமாகிறதாம். மேலும் ஒரே கட்டத்தில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதையும் முடித்துவிட வேண்டும் என படக்குழுவினர் திட்டமிட்டு வருவதாகவும் செய்யாறு பாலு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மெகா பிளாக்பஸ்டர் ‘துனிவு’ படத்தை வழங்கிய அஜித்குமார், ‘ஏகே 62’ படத்திற்கான ஸ்கிரிப்டை இறுதி செய்வதிலும், குடும்பத்துடன் விடுமுறை எடுப்பதிலும், பைக்கில் தனது உலகச் சுற்றுப்பயணத்தின் இரண்டாம் கட்டத்தைத் திட்டமிடுவதிலும் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்