28.3 C
Chennai
Thursday, March 23, 2023

அஜித் அனுப்பிய ஈமெயிலில் ஆடிப்போன மகிழ் திருமேனி!மோதி பார்க்க ரெடியான லைகா !

Date:

தொடர்புடைய கதைகள்

அபர்ணா பாலமுரளி உடன் ரஜினி உள்ள புகைப்படம் இணையத்தில்...

ரஜினிகாந்த் இந்தியத் திரையுலகின் மிகப்பெரிய பெயர்களில் ஒருவர். மாஸ் ஹீரோ அவரது...

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் புதிய படத்தை...

எஸ்.எஸ்.ராஜமௌலியும் மகேஷ் பாபுவும் விரைவில் இணைந்து பணியாற்றவுள்ளனர். 2023-ம் ஆண்டின் இறுதியில்...

வெங்கட் பிரபுவுடன் இணையும் சிவகார்த்திகேயனின் புதிய படத்தை பற்றிய...

சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபுவுடன் ஒரு நேர்த்தியான ஆக்‌ஷன் என்டர்டெய்னரில் இணையவிருப்பதால், சிவகார்த்திகேயனின்...

சலார் படத்தை ஆங்கிலத்திலும் டப் செய்யப்பட படக்குழு முடிவு...

பிரபாஸ் நடித்த சாலார் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும்,...

கேப்டன் மில்லர் படத்தை பற்றிய லேட்டஸ்ட் ஹாட் அப்டேட்...

சமீபத்திய தகவல்களின்படி, கேப்டன் மில்லரின் கிளைமாக்ஸ் படப்பிடிப்பு குற்றாலத்தில் சுமார் 1000...

ஏகே 62 நட்சத்திர நடிகர்கள் பற்றி அதிகம் எதுவும் வெளியிடப்படவில்லை என்றாலும், பிரபல நடிகர்கள் அருண் விஜய் மற்றும் அருள்நிதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க அணுகியதாக வதந்திகள் தெரிவிக்கின்றன. அப்படியானால், இந்த திட்டம் 2015-ல் வெளியான பிளாக்பஸ்டர் யென்னை அறிந்தால் பிறகு அஜித் மற்றும் அருண் மீண்டும் இணைவதை குறிக்கலாம். படத்தின் கதாநாயகி யார் என்பதை தயாரிப்பாளர்கள் இன்னும் முடிவு செய்யவில்லை.

பொங்கல் ஸ்பெஷலாக வெளியான அஜித்தின் துணிவு திரைப்படம் 300 கோடிகளுக்கும் மேல் வசூலித்தது.இதனைத் தொடர்ந்து அஜித் நடிக்கவுள்ள அவரது 62வது படத்தை லைகா தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்கவுள்ளதாக கடந்த சில தினங்களாக செய்திகள் வெளியாகி வருகின்றன.ஏகே 62 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பே இன்னும் வெளியாகாத நிலையில், அதன் ரிலீஸ் தேதியை அஜித் முடிவு செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

அஜித் நடிப்பில் அ வினோத் இயக்கிய துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. பாக்ஸ் ஆபிஸில் 300 கோடிக்கும் மேல் வசூலித்து மாஸ் காட்டிய துணிவு, அஜித்தின் மார்க்கெட்டை ரீ-ஓபன் செய்துள்ளது. இதனால், அடுத்து நடிக்கவிருக்கும் ஏகே 62 படத்திற்காக அல்டிமேட்டாக ரெடியாகி வருகிறார் அஜித். லைகா தயாரிக்கவுள்ள இந்தப் படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால், அவர் அதிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

அவருக்குப் பதிலாக மகிழ் திருமேனி ஏகே 62 படத்தை இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனாலும், இதுகுறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. வலிமை படத்தில் ஃபேமிலி செண்டிமென்ட் வேண்டும் என வினோத்திடம் அஜித் தான் கண்டீஷன் போட்டிருந்தாராம். ஆனால், அது சக்சஸ் ஆகவில்லை என்பதால், துணிவு படம் முழுக்க ஆக்‌ஷன் ட்ரீட்டாக கொடுத்து அஜித்துக்கு எனர்ஜி கொடுத்தார் வினோத். தற்போது அதே பார்முளாவில் தான் ஏகே 62 படமும் இருக்க வேண்டும் என மகிழ் திருமேனிக்கு ஆர்டர் போட்டுள்ளாராம் அஜித்.

அதேபோல், விஜய்யின் லியோ படத்துடன் ஏகே 62-வையும் களமிறக்க வேண்டும் என்பதிலும் அஜித் உறுதியாக இருக்கிறாராம். பொங்கல் ரேஸில் விஜய்யின் வாரிசு படத்துடன் மோதிய துணிவு, அஜித்தே எதிர்பார்க்காத ஹிட்டை கொடுத்தது. அதே வைப்ரேஷனில் லியோவுக்கு எதிராக ஏகே 62 ரிலீஸானால் சிறப்பான சம்பவமாக இருக்கும் என அஜித் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். இதற்கு லைகாவும் முடிந்த வரை முயற்சி செய்துவிடலாம் என ஓக்கே கூறியுள்ளதாம்.

ஏகே 62 ஸ்பை திரில்லர் ஜானரில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. கதை, திரைக்கதை ரெடியாகிவிட்டாலும், அஜித்தின் கண்டீஷன் தான் மகிழ் திருமேனியை யோசிக்க வைத்துள்ளதாம். எப்போதுமே பார்த்து பார்த்து தனது படங்களை இயக்கும் மகிழ் திருமேனி, அவசர கதியில் ஏகே 62-வை முடிக்க முடியுமா என அவரது டீமுடன் ஆலோசித்து வருகிறாராம். இந்தப் படத்தில் அஜித்துடன் அருண் விஜய், அதர்வா, பிக் பாஸ் கவின், ஜான் கெக்கென் ஆகியோரும் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல் ஒளிப்பதிவாளராக நீரவ்ஷா, இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் கமிட் ஆகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான அஜீத் குமார் தனது சமீபத்திய வெளியீடான வலிமையின் வணிக ரீதியான வெற்றியால் தற்போது உச்சத்தில் இருக்கிறார். ஸ்டைலிஷ் நடிகர் தற்போது தமிழ் சினிமாவில் தனது 62வது படப்பிடிப்பை தொடங்க உள்ளார். திறமையான திரைப்பட தயாரிப்பாளரான மகிழ் துருமேனியால் இயக்கப்படும் இந்த திட்டத்திற்கு தற்காலிகமாக ஏகே 62 என்று பெயரிடப்பட்டுள்ளது. சமீபத்திய புதுப்பிப்புகளின்படி, ஏகே 62 இப்போது அதிகாரப்பூர்வமாக பூஜை விழாவுடன் தொடங்கப்பட்டது, இது சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

சமீபத்திய கதைகள்