Wednesday, March 27, 2024 3:03 pm

வெற்றி நடித்த Memories படத்தின் முழு விமர்சனம் இதோ !

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

எழுதி இயக்கியவர்கள் – சியாம் முரளி எம் மற்றும் பிரவீன் முருகன்நடிகர்கள் – வெற்றி, ஹரீஷ் பெராடி, ரமேஷ் திலக், ஆர்என்ஆர் மனோகர், சலில் தாஸ், ஸ்ரீகுமார் யுவி, பார்வதி அருண், தயானா ஹமீத்
உரையாடல் – அஜயன் பாலாஒளிப்பதிவாளர் – கிரண் நுபிடல்எடிட்டர் – சான் லோகேஷ்கதை சுருக்கம் – காதல், மர்மம் மற்றும் குற்றங்கள் நிறைந்த ஒரு சுவாரஸ்யமான த்ரில்லர்.

வெற்றி-நடித்த மெமரிஸ் படம் தணிக்கை முறைகளை கடந்து யு/ஏ தணிக்கை செய்யப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர்கள் புதன்கிழமை அறிவித்தனர். இப்படம் மார்ச் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

8 தோட்டாக்கள், ஜீவி, வனம் உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்து, நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து வரும் நடிகர், வெற்றி.இவர் ஹீரோவாக நடித்துள்ள “மெமரீஸ்” எனும் திரைப்படம் சைக்காலஜி-த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளது. ஷ்யாம் என்ற மலையாள இயக்குநர் இப்படத்தினை டைரக்டு செய்துள்ளார். கவாஸ்கர் அவினாஷின் இசையில் படம் உருவாகியுள்ளது. நடிகர் ரமேஷ் திலக் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மெமரீஸ் படத்தின் முழு விமர்சனத்தை படிக்க தயாரா?

கதையின் கரு:மெமரீஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தனக்கு தெரிந்த நபர் ஒருவரின் வாழ்வில் மெமரீஸினால் ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்து கொள்ள வருகிறார், ஹீரோ. வெங்கி என்பவரின் வாழ்வில்தான் அந்த சம்பவம் என கூறுகிறார். ஃப்ளேஷ் பேக்கில் கதை நகர்கிறது.

ஒரு பாழடைந்த வீட்டில், தலையில் அடிபட்ட நிலையில் கண் விழிக்கிறார் ஹீரோ வெற்றி. சட்டையெல்லாம் ரத்தக்கறை, தான் யார் என்பதே அவருக்கு நினைவில்லை. இவரை அடைத்து வைத்திருப்பவன் மூலம் தான் இரட்டை கொலை வழக்கில் தேடப்படும் கொலையாளி என்பதை தெரிந்து காெள்கிறார். இதனால், தன்னை அடைத்து வைத்திருக்கும் நபரிடம், “நான் யார், என்னை ஏன் அடைத்து வைத்திருக்கிறீர்கள்..” கேள்வியாய் கேட்கிறார். இதற்கு பதிலாக, “நீ யார் என்பதை 17 மணிநேரத்திற்கள் நீ கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் அப்படி கண்டுபிடித்த பிறகு நீ உயிருடன் இருக்க மாட்டாய்” என ட்விஸ்ட் வைக்கிறார், அந்த மர்ம நபர். அடர்ந்த காட்டிற்குள் தான் யார் என்பதை தேடி அலையும் ஹீரோவை, போலீஸ் துரத்துகிறது, அவர்களிடமிருந்து தப்பிக்கும் ஹீரோவை துப்பாக்கி முனையில் பிடிக்கும் ஆர்.என்.ஆர் மனோகர் “என் மனைவியை மட்டும்தானே கொல்ல சொன்னேன்…என் மகளை என்ன செய்தாய்?” என கேட்கிறார்.

ஹீரோவை சுற்றி என்னதான் நடக்கிறது? உண்மையிலேயே அந்த கொலைகளை செய்தது அவர்தானா? அவரை துரத்தும் நபர்களுக்கும் ஹீரோவுக்கும் என்ன தொடர்பு? போன்ற அடுக்கடுக்கான கேள்விகளை நோக்கி நகர்கிறது திரைக்கதை.

மெமரீஸ் படத்தில் ஹீராேவிற்கு மட்டுமல்ல, அவரை சுற்றி வரும் கதாப்பாத்திரங்களுக்கும் டபுள் ரோல்தான். மெமரி எரேசிங் மற்றும் மெமரி இன்ஸர்டிங் எனும் ஒரே கான்சப்டை வைத்து ஒரு நல்ல படத்தை கொடுக்க இயக்குநர் எடுத்த முயற்சிக்கு பாராட்டுகள். ஆனால், அவரின் முயற்சி தோல்வியிலேயே முடிந்துள்ளது. இப்போது வெளிவரும் பல டைம்-ட்ராவல், சைக்காலஜி த்ரில்லர் படங்களில் கதைக்குள் கதை வைப்பது இயல்பான விஷயம்தான். ஆனால், அப்படி படத்திற்குள்ளே சொருகப்படும் கதைகளுக்கும் ஒரு எல்லை உண்டு. இப்படத்தில் அந்த எல்லையை மீறி உள்ளனர். முதலில் ஏதோவொரு இயல்பான இளைஞராக காட்டப்படும் ஹீரோ வெற்றி, பிறகு தனது நினைவுகளை இழந்து விட்டு கொலைகாரனா? நல்லவனா? என்று தெரியாமல் விழி பிதுங்கும் மனிதனாக நல்ல நடிப்பை வெளிப்படுத்துகிறார். அதன் பிறகு வைக்கப்படும் ட்விஸ்ட் யாரும் எதிர்பாராததுதான். ஆனால் அதையடுத்து “சர்ப்ரைஸ் ட்விஸ்ட்” எனும் பெயரில் எதையோ வைத்து, முடிக்க தெரியாத ஒரு நல்ல கதையை ஏனாே தானோ என முடித்துள்ளனர். இதை சிக்கலான கதை என கூறுவதை விட, மிகவும் குழப்பமான கதை என கூறுவதே லாஜிக்காக இருக்கும்.படத்தின் நாயகன் வெற்றி, தனக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தை சிறப்பாக செதுக்கி கொடுத்திறருக்கிறார். இருந்தாலும், காதல் காட்சிகளிலும், சைக்கோ வில்லன் காட்சிகளிலும் தனது இயல்பான நடிப்பை விடுத்து வேறு ஏதோ செய்ய முயற்சித்து தோல்வியுற்றிருக்கிறார். ரமேஷ் திலக், நண்பன்-காவல் அதிகாரி கதாப்பாத்திரத்தில் பொருந்தி இருக்கிறார். நாயகியாக களம் இறங்கியுள்ள பார்வதிக்கு பெரிதாக நடிக்க வேண்டிய வேலை இல்லாமல் போய் விடுகிறது. மனோதத்துவ மருத்துவராக வரும் ஹரிஷ் பேரடியின் மலையாளம் வாசம் வீசும் தமிழ் வார்த்தைகளின் உச்சரிப்பு ஆங்காங்கே முகம் சுளிக்க வைக்கிறது.

ட்ரைலரை பார்த்துவிட்டு, “ஆஹா ஓஹோ” என நினைத்து கொண்டு படத்தை பார்க்கும் ரசிகர்களின் முகத்தில் ‘சப்’பென அறைந்து விடுகிறது, திரைக்கதை. காட்டிற்குள் நாயகன் ஓடும் காட்சிகளை இன்னும் கொஞ்சம் கத்தரித்து இருக்கலாம். நல்ல ஒன்-லைன் ஸ்டோரியை இரண்டாம் பாதிக்கு மேல் சொதப்பி வைத்திருக்கின்றனர். படம் முடிந்து எப்போது வெளியே ஓடுவோம் என்ற எண்ணத்துடனேயே இடைவேளைக்கு அடுத்த பாதியை பார்த்ததாக” சொல்லும் விமர்சனங்களை பார்க்கமுடிந்தது.

படத்தின் க்ளைமேக்ஸ் பொறுமைசாலியின் பொருமையும் ரொம்பவே சாேதிக்கின்றது. முதல் பாதியில் இருந்த வேகமும் விவேகமும் அடுத்த பாதியில் இல்லை. இருக்கை நுனிக்கு வரவைக்காத சைக்கோ-த்ரில்லர் என்றாலும் இருக்கையில் இருந்து எழுந்து ஓட செய்யாத கதையாகத்தான் இருக்கிறது மெமரீஸ்.

மெமரீஸ் குழப்புகிறது சியாம் பிரவீன் இயக்கும் இப்படத்தில் விருது பெற்ற எழுத்தாளர் அஜயன் பாலா வசனம் எழுதுகிறார். மெமரிஸ் படத்தில் பார்வதி அருண் கதாநாயகியாக நடித்துள்ளார் மற்றும் ஹரிஷ் பேரடி மற்றும் ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கவாஸ்கர் அவினாஷ் இசையமைக்க, சான் லோகேஷ் எடிட்டிங் செய்ய, மெமரிஸ் ஆர்மோ மற்றும் கிரண் நுபிடல் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த சம்பவத்தை நினைவுகூர முடியாமல், ஞாபக மறதியால் அவதிப்படும் கொலைக் குற்றவாளியாக வெற்றி நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. அவர் தனது இக்கட்டான சூழ்நிலையில் இருந்து எப்படி வெளியேறுகிறார் என்பது மீதி நினைவுகளை உருவாக்குகிறது, இது தமிழ்நாடு-கேரளா பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது, மேலும் ஷிஜு தமீன்ஸால் ஆதரிக்கப்படுகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்