Tuesday, April 16, 2024 11:31 am

லியோவை ஓவர் டேக் செய்ய மகிழ் திருமேனி போட்ட பிளான்!! எதிர்பார்ப்பை மிரள வைக்கும் ஏகே 62

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அஜித் தனது 62 வது படத்திற்காக இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் கைகோர்க்கவிருந்தார், ஆனால் திட்டங்கள் மாறி, மகிழ் திருமேனி இப்போது படத்தை இயக்க தயாராகிவிட்டார். அஜித்தின் 62வது படத்திற்கு தற்காலிகமாக ‘ஏகே 62’ அல்லது ‘அஜித் 62’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் முஹுரத் பூஜை கடந்த திங்கட்கிழமை (பிப் 21) சென்னையில் நடந்ததாக கூறப்படுகிறது, மேலும் படத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட சரியான நேரத்திற்காக தயாரிப்பாளர்கள் காத்திருக்கிறார்கள். முஹுரத் பூஜையில் அஜித் கலந்து கொள்ளவில்லை, அங்கு இயக்குனர் மற்றும் சில படக்குழுவினர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

விஜய் தற்போது லியோ திரைப்படத்தில் ஆர்வமுடன் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த திரைப்படத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகின்றனர். இதுவே எதிர்பார்ப்பை கிளப்பிய நிலையில் படப்பிடிப்பு தளத்திலிருந்து அவ்வப்போது வெளியாகும் போட்டோக்களும் ரசிகர்களை குஷிபடுத்திக் கொண்டிருக்கிறது.

இப்படி மீடியாவின் ஒட்டுமொத்த கவனத்தையும் தன் பக்கம் திருப்பி இருக்கும் லோகேஷ் இந்த படத்தின் மூலம் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இது ஒரு புறம் இருந்தாலும் அஜித்தின் ஏகே 62 திரைப்படத்திற்கும் பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால் அந்த திரைப்படம் குறித்த அறிவிப்பு எதுவும் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை.

சினிமா ரசிகர்கள் தான் அவ்வப்போது இந்த திரைப்படம் குறித்த ஏதாவது ஒரு தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் ஏகே 62 திரைப்படத்தை மகிழ் திருமேனி தான் இயக்கப் போகிறார் என்பது உறுதியாகி இருக்கிறது. ஆனால் பட குழுவின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன என்பது பற்றியும் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது பற்றியும் எந்த செய்தியும் வெளிவரவில்லை.

இதனாலேயே அஜித் ரசிகர்கள் மிகப்பெரும் குழப்பத்தில் இருக்கின்றனர். ஆனால் இதற்கு முக்கிய காரணம் ஏகே 62 திரைப்படத்தை லியோவை மிஞ்சும் அளவுக்கு கொண்டு போக வேண்டும் என்பதுதான் தயாரிப்பாளரின் திட்டமாம். அதற்காகவே ஸ்பெஷலான ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிடுவதற்கு அவர் பிளான் செய்திருக்கிறார்.

ஏனென்றால் சமீபத்தில் லியோ படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகி பட்டையை கிளப்பி இருந்தது. தற்போது அதையே ஓவர் டேக் செய்யும் அளவுக்கு ஒரு விஷயத்தை செய்ய லைக்கா நிறுவனம் முடிவெடுத்திருக்கிறது. ஆனால் அஜித் ப்ரோமோ வீடியோ வெளியிட்டால் ரொம்பவும் தாமதம் ஆகிவிடும். அதனால் படத்தின் பெயரை மட்டும் அறிவித்துவிட்டு நேரடியாக படப்பிடிப்பை ஆரம்பித்து விடலாம் என்று கூறியிருக்கிறார்.

இப்படி தயாரிப்பாளர் ஒரு பிளான் போட்டிருக்கும் நிலையில் அஜித் அதை வேறு மாதிரி கூறியிருப்பது பட குழுவில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இருந்தாலும் அஜித்தின் முடிவுப்படி விரைவில் படத்தின் பெயரை படு மாஸாக அறிவித்துவிட்டு ஷூட்டிங்கை ஆரம்பிக்க இருக்கின்றனர். இதுதான் தற்போது திரையுலகின் சூடான செய்தியாக பேசப்பட்டு வருகிறது.

அதுபோல் அஜித் 62 படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் திரில்லர் படமாக இருக்கும் என்றும் தற்போது தகவல் வெளியாகியுள்ளன இந்த செய்தியை அறிந்த அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.’அஜித் 62′ படத்தின் தயாரிப்பாளர்கள் படத்தின் தலைப்புக்கான 3 விருப்பங்களை பூட்டியுள்ளனர், மேலும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு படத்தின் தலைப்பும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகும் ‘ஏகே 62’ படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கும் என்றும், படத்தின் ரிலீஸ் தேதி படத்தின் முன்னேற்றத்தைப் பொறுத்தே அமையும் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்