Friday, March 31, 2023

அதுக்கு முக்கிய காரணமே இவர் தான் கேமரா மேனிடம் பெருமையாக சொன்ன அஜித்யார் அந்த நடிகர் தெரியுமா?

தொடர்புடைய கதைகள்

ஆர்யாவின் ‘காதர்பாஷா எந்திர முத்துராமலிங்கம்’ படத்தின் டீசர்

'கொம்பன்' மற்றும் 'விருமண்' போன்ற கிராமிய ஆக்‌ஷன் என்டர்டெயின்னர்களுக்கு பெயர் பெற்ற...

ருத்ரன் படத்தின் சிங்கிள் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

ராகவா லாரன்ஸின் ருத்ரன் படத்தின் அடுத்த சிங்கிள் பாடலான உன்னோடு வாழ்த்துக்காக...

ரேசர் படத்தின் ட்ரைலர் இதோ !

வரவிருக்கும் தமிழ் திரைப்படமான ரேசரின் தயாரிப்பாளர்கள் திங்களன்று படத்தின் டிரெய்லரை வெளியிட்டனர்....

தீரா காதல் படத்திலிருந்து வெளியான முதல் சாங் இதோ !

செவ்வாயன்று தீரா காதல் படத்தின் தயாரிப்பாளர்கள் உசுரன்கூடில் என்ற முதல் தனிப்பாடலை...

மார்க் ஆண்டனி படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

விஷால்-ஆதிக் ரவிச்சந்திரன் நடிப்பில் உருவாகி வரும் மார்க் ஆண்டனி படத்தின் இறுதிக்கட்ட...

“துணிவு” திரைப்படத்தை தொடர்ந்து அஜித், தற்போது “ஏகே 62” திரைப்படத்திற்காக தயாராகி வருகிறார்.முதலில் இத்திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் விக்னேஷ் சிவன், “ஏகே 62” புராஜெக்ட்டில் இருந்து வெளியேறிவிட்டார்.

இதனை தொடர்ந்து மகிழ் திருமேனி, இத்திரைப்படத்தை இயக்கவுள்ளதாக செய்திகள் வருகின்றன. எனினும் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக இதுவரை அறிவிக்கவில்லை. எனினும் “ஏகே 62” திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்குவது ஓரளவு உறுதியாகியுள்ளது.

அஜித்தை அவரது ரசிகர்கள் “தல” என்று அழைப்பது வழக்கம். எனினும் சில வருடங்களுக்கு முன்பு தன்னை “தல” என்று அழைக்காதீர்கள் என அஜித் தெரிவித்திருந்தார். எனினும் ரசிகர்கள் இன்றும் அவரை “தல” என்றே அழைத்து வருகின்றனர்.

அஜித் நடிப்பில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளிவந்த “தீனா” திரைப்படத்தில் இருந்துதான் “தல” என்ற வார்த்தை அஜித்தோடு ஒட்டிக்கொண்டது. அதில் “வத்திக்குச்சி பத்திக்காதுடா” என்ற பாடலில் மகாநதி ஷங்கர், “தல இருக்கும்போது வால் ஆடக்கூடாது. நீ ஆடு தல” என்று அஜித்தை பார்த்துக் கூறுவார்.

இதனை தொடர்ந்து கடந்த பொங்கல் தினத்தன்று வெளியான “துணிவு” திரைப்படத்தில் மகாநதி ஷங்கர் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அப்போது படப்பிடிப்பில் அஜித்திடம், “21 வருடங்கள் கழித்து நாம் திரும்பவும் பார்த்திருக்கிறோமே சார்” என கூறினாராம். அதற்கு அஜித், “21 வருஷம் ஆகிடுச்சா அதுக்குள்ள” என கூறியிருக்கிறார்.மேலும் அஜித், “துணிவு” படத்தின் கேமரா மேனை அழைத்து, “இவர்தான் என்னை முதன் முதலில் தல என்று கூப்பிட்டார்” என “தீனா” படத்தில் நடந்தவற்றை ஞாபகம் வைத்து கூறினாராம். இந்த சம்பவத்தை சமீபத்திய விருது வழங்கும் விழா ஒன்றில் பகிர்ந்துகொண்ட மகாநதி ஷங்கர், “அவர் இன்னும் அந்த சம்பவத்தை மறக்கவில்லை” என்று மிகவும் மகிழ்ச்சியுடன் கூறியது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய கதைகள்