நடிகை ஹன்சிகா, இயக்குனர் இகோருடன் த்ரில்லர் படமொன்றில் இணையவுள்ளதாக முன்னர் செய்தி வெளியிட்டிருந்தோம். தற்போது, ஆரி அர்ஜுனனும் முக்கிய வேடத்தில் நடிக்கும் படத்தின் தயாரிப்பாளர்கள் படத்தின் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். ‘களப காதலன்’ புகழ் இகோர் இயக்கும் த்ரில்லர் படத்துக்கு ‘நாயகன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாத தொடக்கத்தில் படப்பிடிப்பு துவங்கி சென்னை, பொள்ளாச்சி மற்றும் மதுரையில் படமாக்கப்பட்டது. இப்படம் பெண்களை மையப்படுத்திய திரில்லர் என்றும், ஹன்சிகா புதிய பரிமாணத்தில் தோன்றுவார் என்றும் கூறப்படுகிறது. ஹன்சிகாவைத் தவிர, ஆரி அர்ஜுனன், ஜனனி துர்கா மற்றும் சௌமிகா ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் ஆரி அர்ஜுனன் வில்லனாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.
இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, மணி ஒளிப்பதிவு செய்துள்ளார்.