Sunday, June 30, 2024 12:04 pm

அஜித் நோ சொல்லி, சூர்யாவுக்கு ஹிட் அடித்த மொத்த படங்களின் முழு ரிப்போர்ட் இதோ !!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அஜீத் கடைசியாக வெளிவந்த ‘துனிவு’ மற்றும் அதிரடி நாடகம் நடிகரின் அதிக வசூல் செய்த படமாக மாறியது. அஜித்தின் அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது, மேலும் படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இப்போது, சமீபத்திய அறிக்கை ‘ஏகே 62’ மேலும் ஒரு திருப்பம் சேர்க்கப்பட்டுள்ளது என்று கூறுகிறது. அஜித்தின் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என முன்னதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் படத்தின் வளர்ச்சியில் இயக்குனர் அவர்களை ஈர்க்கத் தவறியதால் தயாரிப்பாளர்களும் அஜித்தும் மனம் மாறினர். ‘அஜித் 62’ படத்தின் இயக்குநராக விக்னேஷ் சிவனுக்குப் பதிலாக மகிழ் திருமேனி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது, மேலும் இந்த ஆச்சரியம் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

நேருக்கு நேர்: ராஜாவின் பார்வையிலே படத்திற்கு பிறகு விஜய்யும் அஜித்தும் அடுத்ததாக நேருக்கு நேர் படத்தில் நடிப்பதாக இருந்தது. அதற்கான சில காட்சிகளும் படமாக்கப்பட்டது. ஆனால் கடைசியில் அந்த படத்தின் இயக்குனர் வசந்த் அஜித்தை நடத்திய விதம் சரியில்லாததால் படத்தில் இருந்து விலகினார்.

இவர் ஏற்கனவே அஜித்தின் ஆசை படத்தையும் இயக்கியவர். ஆசை படத்திலும் வசந்த் அஜித்தை மரியாதை இல்லாமல் நடத்தினார். அதன் தொடர்ச்சியாக நேருக்கு நேர் படத்திலும் மறுபடியும் தன்னுடைய வேலையை காட்டியதால் கோபத்தில் அஜித் அந்த படத்தையே தூக்கி எறிந்து விட்டாராம். அதன் பிறகு நேருக்கு நேர் படத்தில் அஜித் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் சூர்யா நடித்தார். இந்த வாய்ப்பை சூர்யா சரியாக பயன்படுத்தி தன்னுடைய சினிமா கெரியரை உச்சத்துக்கு செல்ல வழி வகுத்தார்.

நான் கடவுள்: 2009 ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாக இருந்த படம் தான் நான் கடவுள். அஜித்தை வைத்து இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எல்லாம் ரிலீஸ் ஆகி ட்ரெண்டானது. இந்த படத்தில் நடிப்பதற்காகவே அஜித் பாலாவுக்கு 150 நாள் கால்சீட் கொடுத்திருந்தார். ஆனால் பாலாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த படத்தில் இருந்து அஜித் விலகி விட்டார். அதன் பிறகு தான் இந்த படத்தில் அஜித்துக்கு பதில் ஆர்யா நடித்தார்.

காங்கேயன்: வரலாறு படத்தின் வெற்றிக்குப் பிறகு மறுபடியும் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் அஜித் நடிக்க இருந்த படம் காங்கேயன். இந்த படத்தில் அஜித் 4 கேரக்டரில் நடிக்க இருந்தார். இந்த படத்தின் மிரட்டலான போஸ்டலும் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்தது. ஆனால் படம் துவங்கிய ஒரு சில நாட்களிலேயே அஜித் இதில் இருந்து விலகி விட்டார். ஒருவேளை இதன் ஷூட்டிங் நடந்திருந்தால் நிச்சயம் படம் சூப்பர் ஹிட் ஆகி இருக்கும். அஜித்துக்கும் மிகப்பெரிய படமாக அமைந்திருக்கும் .

ஏறுமுகம்: அஜித்தின் ஆஸ்தான இயக்குனரான சரண் இயக்கத்தில் வெளியான காதல் மன்னன், அமர்களம் போன்ற படங்களுக்குப் பிறகு 3-வது முறையாக ஏறுமுகம் என்ற படத்தில் இணைந்தனர். இந்த படத்தின் படப்பிடிப்பு 40 சதவீதம் நிறைவடைந்த நிலையில், திடீரென்று அஜித் படத்தின் கதை பிடிக்கவில்லை என்று விலகிவிட்டார். பிறகு இதே படத்தின் கதையில் தான் விக்ரம் நடித்து ஜெமினி என்ற படம் ரிலீஸ் ஆகி, சூப்பர் ஹிட் ஆனது.

நியூ: 2000 ஆம்ஆண்டுகளில் அஜித், ஜோதிகா இணைந்து நடிக்கும் படத்தை எஸ்ஜே சூர்யா இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. இந்த படத்தின் வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எல்லாம் இணையத்தில் வெளியானது. இந்த படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, எஸ்ஜே சூர்யா அஜித்தின் நடிப்பில் ஏகப்பட்ட கரெக்சன் சொல்லி இருக்கிறார்.

‘நீங்களே நன்றாக நடிக்கிறீர்கள். இந்த படத்தில் நீங்களே நடித்துக் கொள்ளுங்கள்’ என்று அஜித் எஸ்ஜே சூர்யாவிடம் சொல்லிவிட்டு படத்தில் இருந்து விலகி விட்டாராம். இதன்பின் 2004 ஆம் ஆண்டு எஸ்ஜே சூர்யாவும் சிம்ரனும் இணைந்து நடித்து நியூ படம் வெளியானது. இந்த படத்திற்கு ஏகப்பட்ட சர்ச்சைகள் கிளம்பியதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அஜித் ஒரு சில காரணங்களினால் இந்த 5 படங்களிலும் நடிக்க முடியாமல் போனது. ஆனால் நேருக்கு நேர் படத்தில் அஜித் தவறவிட்ட வாய்ப்பை லட்டு மாதிரி சூர்யா பயன்படுத்திக் கொண்டார்.

‘துனிவு’ நட்சத்திரம் தனது உலகச் சுற்றுப்பயணத்தின் முதல் கட்டத்தில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் சவாரி செய்து முடித்திருந்தார். கடந்த ஆண்டு தனது நண்பர்களுடன் லடாக்கிற்கு அவர் மேற்கொண்ட பயணத்தின் படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலானது. ஆகஸ்ட் 2013 இல், அஜித் தனது BMW பைக்கில் புனேவில் இருந்து சென்னைக்கு பயணம் செய்ததாக கூறப்படுகிறது. நடிகர் தனது பயணத்தை முடிக்க 19 மணி நேரம் எடுத்துக்கொண்டார், அந்த நேரத்தில் அவர் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பயணத்தை மேற்கொண்டார். அதன் பிறகு அஜித்குமார் பலமுறை பைக் ட்ரிப் சென்றுள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்