29.4 C
Chennai
Sunday, March 26, 2023

ரியல் சூப்பர் ஸ்டார் அஜித் தான் புகழ்ந்து தள்ளிய பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர்!!

Date:

தொடர்புடைய கதைகள்

சமந்தா நடித்த ‘சாகுந்தலம்’ படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்...

நாட்டின் மிகப்பெரிய கதாநாயகிகளில் ஒருவரான சமந்தா, அதிக ரசிகர்களைக் கொண்டவர். அவர்...

பத்து தல படத்தின் ‘ரவுடி’ வீடியோ பாடல்...

சிலம்பரசன் நடித்த 'பாத்து தலை' படம் மார்ச் 30 ஆம் தேதி...

தனது தந்தை இறந்த துக்கத்தில் அஜித் செய்த அந்த...

அஜித்குமாரின் தந்தை இன்று காலமானதையடுத்து, அவரது உடல் பெசன்ட் நகர் மயானத்தில்...

வரலக்ஷ்மி ஆரவ் நடிக்கும் படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்...

அவரது சமீபத்திய குற்ற நாடகம் கொண்டரால் பாவம் வெற்றிக்குப் பிறகு, வரலட்சுமி...

தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் போர் காட்சி வீடியோ...

இயக்குனர் அருண் மாதேஸ்வரனுடன் இணைந்து தனுஷ் தனது அடுத்த படத்திற்கு 'கேப்டன்...

ரன்பீர் கபூர் தனது மகள் ராஹா கபூருக்கு வழங்கிய முதல் பரிசு மற்றும் அது தனக்கு பிடித்த எண் 8 உடன் எவ்வாறு தொடர்புபட்டது என்பதை ரன்பீர் வெளிப்படுத்தினார். கடந்த ஆண்டு நவம்பர் 6 ஆம் தேதி ராஹா பிறந்த பிறகு, ராஹாவின் முதல் புகைப்படத்தை யார் கிளிக் செய்தார் என்பது பற்றியும் ரன்பீர் கூறினார்.

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்த அஜித் இன்று கோடிக் கணக்கான ரசிகர்களின் தலயாக உள்ளார். இதுவரை 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அஜித், வசூலிலும் மன்னனாக வலம் வருகிறார். உழைப்பால் உயர்ந்த நிலைக்கு வந்துள்ள நடிகர் அஜித், சினிமா கனவில் சென்னைக்கு வரும் பல இளைஞர்களின் ரோல் மாடலாக உள்ளார்.

நடிகர் அஜித்தின் உதவும் மனம் குறித்து சினிமா பிரபலங்கள் பலரும் புகழ்ந்து பேசியுள்ளனர். வெளிக்காட்டிக்கொள்ளாமல் ஏராளமான ஏழை எளியோருக்கு உதவி வருகிறார் அஜித். சினிமாத் துறையினரிடமும் நல்ல நட்பை கொண்டுள்ள அஜித் தான் உண்டு தன் வேலை உண்டு என இருந்து வருகிறார். இந்நிலையில் பாலிவுட் நடிகரான ரன்பீர் கபூர் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் அஜித்து தான் கூறியுள்ளார்.

இந்தி சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் ரன்பீர் கபூர். இவர் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் அஜித் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதாவது அஜித் ஒரு சிறந்த மனிதர். அவர் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள மாட்டார், திரைப்படங்களில் மட்டும்தான் அவரை பார்க்க முடியும் என்றும் அவருடைய போட்டோக்களை கூட அதிகமாக பார்க்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

சோஷியல் மீடியா இந்த அளவுக்கு பரந்து விரிந்திருக்கும் நிலையில் இப்படி ஒரு எளிமையான மனிதரை பார்ப்பது ரொம்பவே கஷ்டம் என்றும் அஜித்தை பார்ப்பது தனக்கு ஆச்சரியமாக உள்ளது என்றும் புகழாரம் சூட்டியுள்ளார் ரன்பீர் கபூர். மேலும் நடிகர் அஜித்துதான் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்றும் கூறியுள்ளார் ரன்பீர் கபூர். ரன்பீர் கபூர் அஜித் குறித்து இப்படி புகழ்ந்து பேசியிருப்பதை அவருடைய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அதேநேரத்தில் ரன்பீர் கபூரின் இந்த பேட்டி ரஜினி மற்றும் விஜய் ரசிகர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ரஜினிகாந்துதான் காலம் காலமாக சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்டு வருகிறார். வாரிசு பட ரிலீஸின் போது, நடிகர் விஜய்தான் சூப்பர் ஸ்டார் என அப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு, நடிகர் சரத்குமார் மற்றும் பத்திரிகையாளர் பிஸ்மி ஆகியோர் கூறியிருந்தனர். இதனால் கடுப்பான ரஜினி ரசிகர்கள் அவர்களை வச்சு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரன்பீர் கபூர், தனக்கு மிகவும் பிடித்த எண் எப்படி இருக்கிறது என்பதைப் பற்றி அடிக்கடி பேசியுள்ளார், மேலும் கடந்த ஆண்டு ஒரு நேர்காணலில் அந்த எண்ணின் முக்கியத்துவத்தைப் பற்றித் திறந்தார், நடிகர்-அம்மா நீது கபூரின் பிறந்தநாள் எட்டாம் தேதி என்பதால் அந்த எண்ணுடன் ‘கனெக்ட்’ செய்ததாகக் கூறினார் ( ஜூலை) மற்றும் ‘இது ஒரு முடிவிலி போல் தெரிகிறது’. தற்போது, மகள் ராஹாவுக்கான தனது முதல் பரிசிலும் 8 என்ற எண் இருப்பதாக ரன்பீர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய கதைகள்