Wednesday, March 27, 2024 2:02 pm

வரலக்ஷ்மி நடித்த கொன்றால் பாவம் படத்தின் விமர்சனம் இதோ !!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

திரைப்படத் தயாரிப்பாளர் தயாள் பத்மநாபன் தனது புகழ்பெற்ற கன்னடத் திரைப்படமான ஆ கரால ராத்திரி (2018) திரைப்படத்தை தமிழுக்குக் கொண்டரல் பாவம் என்ற பெயரில் கொண்டு வருகிறார், மேலும் வரலட்சுமி சரத்குமார் மற்றும் சந்தோஷ் பிரதாப் நடித்துள்ள படம் மார்ச் 10, 2023 அன்று திரையரங்குகளில் திரையிடத் தயாராக உள்ளது. இதற்கான முன்னோட்டக் காட்சி இப்படம் சமீபத்தில் தமிழ் திரையுலகில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பார்வையாளர்களுக்காக நடத்தப்பட்டது மற்றும் படத்தின் ஆரம்பகால விமர்சனங்கள் ஏற்கனவே ஒரு நேர்மறையான தொடக்கத்தை சுட்டிக்காட்டுகின்றன.

தயாள் பத்மநாபன் இயக்கியுள்ள கொன்றால் பாவம் படத்தில் வரலட்சுமி சரத்குமார், சந்தோஷ் பிரதாப், சார்லி, ஈஸ்வரி ராவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படம் ஏற்கனவே கன்னட மொழியில் வெளிவந்து அந்த மாநிலத்தின் தேசிய விருதையும் வென்றுள்ளது. மேலும் தெலுங்கிலும் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது தமிழில் வெளியாகியுள்ளது. அனைத்து மொழிகளிலும் தயாள் பத்மநாபனே இந்த படத்தை இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் டைகர் தங்கதுரை, மனோபாலா, எஸ்ஆர் சீனிவாசன், சுப்ரமணியம் சிவா, மீசை ராஜேந்திரன், ஆகியோர் நடித்துள்ளனர். வரும் மார்ச் 10ம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் பத்திரிகையாளர்களுக்கு இந்த படத்தின் சிறப்பு காட்சி போடப்பட்டது.

1985 காலகட்டங்களில் தர்மபுரியில் நடக்கும் கதையாக திரைக்கதை அமைந்துள்ளது. சார்லி மற்றும் ஈஸ்வரி ராவின் மகளாக உள்ளார். குடும்ப வறுமையின் காரணமாக வரலட்சுமிக்கு நீண்ட நாட்களாக திருமணம் நடைபெறாமல் உள்ளது, மேலும் கடன் பிரச்சனை காரணமாக குடும்பம் மிகவும் வறுமையில் உள்ளது. இந்த சமயத்தில் சந்தோஷ் பிரதாப் வழிப்போக்கனாக ஒரு நாள் இவர்கள் வீட்டில் தங்குகிறார், அப்போது அவரிடம் நிறைய நகை, பணம் இருப்பது இவர்களுக்கு தெரிய வருகிறது. வரலட்சுமி அவரை கொன்று அவரிடம் இருந்து பணம், நகையை பெற்றுக்கொண்டு வாழ நினைக்கிறார். இறுதியில் என்ன ஆனது என்பதே கொன்றால் பாவம் படத்தில் கதை.

கொன்றால் பாவம் படத்தை ஒவ்வொரு கதாபாத்திரங்களும் தான் எடுத்து செல்கின்றனர். நடிகர்களின் பெர்பார்ம்மன்ஸ் கதைக்கு கூடுதல் பலம் கொடுக்கிறது. பெரிதாக பாடல் காட்சிகள் இல்லாத, கிளைக் கதைகள் இல்லாத இந்த கதையில் அந்தந்த கதாபாத்திரங்களை உயிர் கொடுக்கின்றன. முழு படமும் ஒரு வீட்டை சுற்றியே நடைபெறுமாறு உள்ள நிலையில் ஒவ்வொரு வரும் போட்டி போட்டுக் கொண்டு எதார்த்தமாகவும் நடித்துள்ளனர். குடிகார தந்தையாக சார்லி வழக்கம் போல நடிப்பில் அசத்தியுள்ளார். காலா படத்தில்

மனைவியாக நடித்த பிறகு ஈஸ்வரி ராவிற்கு இது ஒரு நல்ல கதாபாத்திரம், அதை உணர்ந்து தனது முழு நடிப்பு திறனையும் வெளிப்படுத்தியுள்ளார்.ஒரு பக்கம் வில்லியாக அசத்தி கொண்டிருக்கும் வரலட்சுமி இந்த படத்தில் ஒரு இளம் பெண்ணாக அசத்தியுள்ளார். அச்சு அசலாக ஒரு கிராமத்து பெண்ணாக கண்முன் நிற்கிறார். மறுபுறம் சந்தோஷ் பிரதாப் ஒரு மிடுக்கான இளைஞனாக மின்னுகிறார். பல இடங்களில் தனது நடிப்பின் மூலம் கைத்தட்டல்களையும் பெறுகிறார். இவர்களை தவிர டைகர் தங்கதுரை, மனோபாலா, சென்றாயன் என ஒரு காட்சியில் வந்தாலும் மனதில் பதிகின்றனர். படம் ஆரம்பத்தில் மெதுவாக நகர்ந்தாலும் அடுத்தடுத்து என்ன ஆகப் போகிறது என்று பரபரப்பு நமக்குள் எழுகிறது. ஆசை மற்றும் பேராசை அதிகமானால் மனிதன் என்னவெல்லாம் செய்கிறான் என்பதை இப்படத்தின் மூலம் உணர்த்துகிறார் இயக்குனர் தயால் பத்மநாபன். ஒரு மனிதனுக்கு பேராசை வந்து விட்டால் அவன் எந்த எல்லைக்கும் செல்வான் என்பதை அழகான திரைக்கதையின் மூலம் எடுத்து சொல்லி இருக்கிறார். படம் முழுக்க வசனங்களும் நன்றாக இருந்தது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி சிறப்பு. சாம் சிஎஸ்-ன் பின்னணி இசை படத்திற்கு ஏற்றார் போல் சிறப்பாக இருந்தது. கொன்றால் பாவம் தின்னா போச்சு.

அம்மு அபிராமி: “ஒரு படத்தின் மாணிக்கம்..முதல் பிரேமில் இருந்து கடைசி பிரேம் வரை உங்கள் கவனத்தை ஈர்க்கிறது. ஒவ்வொரு பிரேமும் ஒரு ஓவியம் போல் இருக்கிறது, அதற்கான அனைத்து வரவுகளும் (ஒளிப்பதிவாளர்) செழியன் சார். சாம் சிஎஸ்-ன் இசை சிறப்பாக உள்ளது. ”

டி பிக்சர்ஸ் மற்றும் ஐன்ஃபேக் ஸ்டுடியோஸின் தயாரிப்பு முயற்சியான கொண்டரால் பாவம் இசைக்கு சாம் சிஎஸ், ஒளிப்பதிவுக்கு செசியன், ஜோ மகேந்திரன், வசனங்களுக்கு தயாள் பத்மநாபன் மற்றும் எடிட்டிற்கு ப்ரீத்தி மோகன்-பாபு ஆகியோர் உள்ளனர். இந்தப் படத்தின் ஆடியோ உரிமையை ட்ரெண்ட் மியூசிக் பெற்றுள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்