Saturday, April 13, 2024 5:27 pm

அடிதூள்! அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி! வெளியானது AK 62 படத்தின் நியூ அப்டேட்!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அஜீத் குமார் தனது அடுத்த படமான ‘ஏகே 62’ படத்திற்காக ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. படத்தின் நடிகர்கள் தேர்வு குறித்து வதந்திகள் பரவி வருகின்றன. வரவிருக்கும் இந்த படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனி, அருண் விஜய்க்கு பதிலாக ஆர்யாவை முக்கிய வில்லன் கதாபாத்திரத்திற்கு அணுகுவது குறித்து பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

இது உண்மையாகிவிட்டால், 2014 ஆம் ஆண்டு ‘மீகாமன்’ என்ற ஆக்‌ஷன் கலந்த த்ரில்லரில் இதற்கு முன்பு இணைந்து பணியாற்றிய இருவரும் மீண்டும் இணைவதாக இருக்கும். மேலும் அவர்களது டைனமிக் கெமிஸ்ட்ரி பார்வையாளர்களால் நன்கு பாராட்டப்பட்டது. மேலும் ஆர்யா மற்றும் அஜித் இருவரும் ஏற்கனவே ஆரம்பம் படத்தில் இணைந்து நடித்துள்ளனர், மீண்டும் இணைவதை திரையில் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்க உள்ள ஏகே 62வது திரைப்படத்தின் கதை முன்னதாக ஆர்யாவுக்கு சொன்ன கதை என தகவல்கள் வெளியாகி உள்ளன.போனி கபூர் தயாரிப்பில் தொடர்ந்து 3 படங்களில் நடித்து வந்த நடிகர் அஜித், அடுத்ததாக லைகா தயாரிப்பில் ஏகே 62 படத்தில் நடிக்க உள்ளார்.

இயக்குநர் விக்னேஷ் சிவன் அந்த படத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட நிலையில், மகிழ் திருமேனி தான் இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.பிப்ரவரி முதல் வாரத்தில் லியோ படத்தின் அப்டேட் வெளியாகி அந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், அஜித்தின் ஏகே 62 படத்தின் அறிவிப்பு மார்ச் 2வது வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்னமும் படத்தில் நடிக்க நடிகர்கள் செட் ஆகாமல் படப்பிடிப்பு தொடங்குவதே தள்ளிப் போய்க் கொண்டிருப்பதாக கூறுகின்றனர்.

2010ம் ஆண்டு வெளியான முன் தினம் பார்த்தேனே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மகிழ் திருமேனி. அதன் பிறகு தடையற தாக்க படத்தை அருண் விஜய்யை வைத்து இயக்கினார். 2014ம் ஆண்டு ஆர்யா, ஹன்சிகா நடிப்பில் மீகாமன் படம் வெளியானது. 2019ல் மீண்டும் அருண் விஜய்யை வைத்து தடம் படத்தை கொடுத்தார். கடந்த ஆண்டு உதயநிதி ஸ்டாலின் நடித்த கலகத் தலைவன் படத்தை இயக்கி உள்ள மகிழ் திருமேனி அடுத்ததாக அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்க உள்ளார்.

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் இதுவரை 5 படங்கள் வெளியான நிலையில், அருண் விஜய் டபுள் ஆக்‌ஷனில் நடித்த தடம் படம் மட்டுமே ஹிட் அடித்தது. மற்ற அனைத்து படங்களும் படு சொதப்பலாக மாறிய நிலையில், விக்னேஷ் சிவனை விட அஜித்தின் படத்தை மகிழ் திருமேனி சிறப்பாக இயக்குவார் என லைகா தரப்பு மகிழ் திருமேனியை டிக் அடித்திருக்கிறது.

தடம் படம் ஹிட் அடித்ததுமே நடிகர் விஜய்க்கு மகிழ் திருமேனி ஒரு கதை சொல்லி இருந்தார். அந்த கதை பிடித்துப் போனதாகவும் விரைவில் படம் பண்ணுவோம் என விஜய் சொன்னதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், விஜய் – மகிழ் திருமேனி காம்போ இணைவதற்குள் அஜித் – மகிழ் திருமேனி கூட்டணி இணைந்துள்ளது.

உடனடியாக விஜய்க்கு சொன்ன கதையில் தான் அஜித் நடிக்கப் போகிறாரா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. விஜய்க்கு சொன்ன கதையையும் அஜித்துக்கு மகிழ் திருமேனி சொல்லி இருக்கிறாராம். ஆனால், ஏகே 62 படத்தின் கதை விஜய்க்கு சொன்ன கதை இல்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.

மீகாமன் படத்திற்கு பிறகு மீண்டும் ஆர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்க மகிழ் திருமேனி உருவாக்கி வைத்திருந்த கதையில் தான் தற்போது அஜித் நடிக்கப் போவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. ஆனால், இது குறித்தோ அஜித் 62 படத்தை இயக்கப் போவது குறித்தோ மகிழ் திருமேனி இன்னமும் வாய் திறக்கவே இல்லை.

அருண் விஜய் அஜித்துக்கு வில்லனாக நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வணங்கான் படத்திற்காக அருண் விஜய் பிசியாகி விட்டாராம். இந்நிலையில், ஆர்யாவை வில்லனாக போடலாமா என்கிற ஆலோசனையில் மகிழ் திருமேனி இருப்பதாகவும் கூறுகின்றனர். ஆர்யாவுக்காக உருவாக்கப்பட்ட கதையில் ஆர்யாவே வில்லனாக நடிக்க வேண்டிய சூழல் உருவாகி விட்டதே என்றும் பேச்சுக்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் 62 படத்தின் ப்ரோமோ ரெடி ஆகி தயார் நிலையில் உள்ளதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது ஆகவே நாளை வெளியாகுமா என அஜித் ரசிகர்கள் ஏங்கி வருகின்றனர் .

“பரஸ்பர மரியாதைக்கான சவாரி” என்று குறிப்பிடப்படும் பைக் சுற்றுப்பயணம் செல்லப்போவதாக அஜித்குமார் அறிவித்துள்ளார். நடிகரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ட்விட்டரில் செய்தியை உறுதிப்படுத்தினார், மேலும் தல வெற்றியைப் பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சியடைய முடியாது. இதற்கிடையில், ஆர்யா தனது சூப்பர்ஹிட் படமான ‘சர்பட்ட பரம்பரை’ படத்தின் தொடர்ச்சி குறித்த தனது உற்சாகத்தை ட்விட்டரில் பகிர்ந்து கொண்டார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்