29.4 C
Chennai
Sunday, March 26, 2023

சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் கூட்டணி.. மாஸாக வரும் அஜித்தின் AK63

Date:

தொடர்புடைய கதைகள்

‘லியோ’ படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'லியோ' படத்தின் நீண்ட ஷெட்யூல்...

சமந்தா நடித்த ‘சாகுந்தலம்’ படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்...

நாட்டின் மிகப்பெரிய கதாநாயகிகளில் ஒருவரான சமந்தா, அதிக ரசிகர்களைக் கொண்டவர். அவர்...

பத்து தல படத்தின் ‘ரவுடி’ வீடியோ பாடல்...

சிலம்பரசன் நடித்த 'பாத்து தலை' படம் மார்ச் 30 ஆம் தேதி...

தனது தந்தை இறந்த துக்கத்தில் அஜித் செய்த அந்த...

அஜித்குமாரின் தந்தை இன்று காலமானதையடுத்து, அவரது உடல் பெசன்ட் நகர் மயானத்தில்...

வரலக்ஷ்மி ஆரவ் நடிக்கும் படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்...

அவரது சமீபத்திய குற்ற நாடகம் கொண்டரால் பாவம் வெற்றிக்குப் பிறகு, வரலட்சுமி...

தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவர் தமிழ் நடிகர் அஜித்குமார். அவர் தனது திரைப்படத்தின் மீது பெரும் ரசிகர்களைக் கொண்டுள்ளார். அவரது சூப்பர்ஹிட் படங்களில் விஸ்வாசம், பில்லா, மற்றும் வீரம் உள்ளிட்டவை அடங்கும். அவர் முக்கியமாக சிறிய மற்றும் துணை வேடங்களில் நட்சத்திரமாக உயர்ந்தாலும், இன்று, நடிகர் ஒரு சூப்பர் ஸ்டார். S. P. பாலசுப்ரமணியத்தின் பரிந்துரைக்குப் பிறகு 1993 இல் தெலுங்கு காதல் நாடகமான பிரேம புஸ்தகம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அவருக்கு பெரிய இடைவெளி கிடைத்தது.

நடிகர் அஜித் துணிவு திரைப்படத்தை அடுத்து யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகவே உள்ளது.அதன்படி லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் முதலில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது.

அதனை அடுத்து விக்னேஷ் சிவன் சொன்ன கதை பிடிக்காததால் இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இதற்கான அறிவிப்பு இந்த மாதத்தின் இரண்டாம் வாரத்தில் வெளியாகும் என்றும் தகவல் கசிந்திருந்தது.

அத்தோடு அஜித்திற்கு மகிழ்திருமேனி இரண்டு கதைகள் சொன்னதாகவும் இந்த இரண்டு கதையில் எந்தக் கதையை அஜித் தேர்வு செய்வார் என்ற கருத்தும் பரவி வந்தது. அதாவது மகிழ்திருமேனி அஜித்திற்கு கதை சொல்ல முதல் விஜய்க்கு ஒரு கதை சொன்னாராம். அந்தக் கதை விஜய் தரப்பும் ஓகே சொல்லியிருந்தாராம்.

அதே போல ஆர்யாவிடமும் ஒரு கதை சொல்லியிருந்தாராம். ஆர்யாவுக்கும் அந்தக் கதை பிடித்திருந்ததாம். பின்னர் இந்த இரண்டு கதைகளையும் விஜய் மற்றும் ஆர்யா தரப்பினரின் சம்மதத்துடன் தான் அஜித்திடம் சொன்னாராம். அதில் ஆர்யாவுக்கு சொன்ன கதை லைகா நிறுவன சுபாஸ்கரனுக்கு பிடித்துப் போனதால் ஆர்யாவுக்கு சொன்ன கதையில் தான் அஜித் நடிக்கவுள்ளாராம்.

மேலும் இப்படத்திற்கான ஏற்பாடுகள் யாவும் நடைபெற்று வருகின்றதாம். இப்படத்தில் வில்லனாக நடிக்க முதலில் அருண்விஜய் மற்றும் அருள்நிதி ஆகியோரிடம் பேச்சு வார்த்தை நடத்தியதாக கூறப்பட்டது. இந்த நிலையில் ஏகே 62 படத்தில் வில்லனாக நடிக்க ஆர்யாவிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.

இது ஒரு புறம் இருக்க படக்குழுவுக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளாராம் அஜித். ஏகே 62 படத்தில் நடிக்கும் நடிகர்களைத் தேர்வு செய்ய முதல் அவர்கள்வேற ஏதாவது படத்தில் கமிட்டாகி நடித்து வருகின்றார்களா என்பதைத் தெரிந்து கொண்டு அவர்களைத் தேர்ந்தெடுங்கள் என்று கூறியுள்ளாராம். இதனால் படக்குழுவும் தீவிரமான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனராம் என்றும் நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது அஜித்தின் அடுத்தப் படத்திற்கான அப்டேட்டும் வெளியாகியுள்ளது. அதாவது AK63 படத்தை இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தளபதி விஜய்க்கு துப்பாக்கி, சர்கார், கத்தி என வெற்றிப் படங்களை ஏ ஆர் முருகதாஸ் கொடுத்துள்ளார்.

மேலும் அஜித்தின் திரைப்பயணத்தில் மிகவும் திருப்புமுனையாக அமைந்த தீனா படத்தின் மூலம்தான் ஏ ஆர் முருகதாஸ் இயக்குனராக அறிமுகமானார். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இதே கூட்டணியில் AK63 படம் உருவாக உள்ளது.

மேலும் இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். மேலும் தீனா படத்தைப்போல் ஒரு மாசான படத்திற்காக அஜித் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

இயக்குனர் மகிழ் திருமேனியுடன் அஜித்குமார் தனது அடுத்த படத்தில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் சென்னையில் பூஜையுடன் இப்படம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

சமீபத்திய கதைகள்