Tuesday, April 16, 2024 11:18 am

தளபதி போட்டியாக ஆட்டத்தை ஆரம்பிக்கும் அஜித்.. 5 முன்னணி தயாரிப்பாளர்களுடன் ரகசிய பேச்சவார்த்தை !

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அஜீத் குமார் தனது அடுத்த படமான ‘ஏகே 62’ படத்திற்காக ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. படத்தின் நடிகர்கள் தேர்வு குறித்து வதந்திகள் பரவி வருகின்றன. வரவிருக்கும் இந்த படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனி, அருண் விஜய்க்கு பதிலாக ஆர்யாவை முக்கிய வில்லன் கதாபாத்திரத்திற்கு அணுகுவது குறித்து பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

நடிகர் அஜித்குமாரின் நடிப்பில் அடுத்ததாக ஏகே 62 திரைப்படம் உருவாக இருக்கும் நிலையில் இந்த படம் குறித்த கிசுகிசுப்புகள் தொடர்ந்து சமூக வலைதளங்களின் மூலம் தினமும் வெளியாகி வருகிறது. அதாவது அஜித் நடிப்பில் துணிவு திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில் இதனை அடுத்து இந்த திரைப்படத்தில் விக்னேஷ் சிவன் உடன் கைகோர்ப்பதாக கூறப்பட்டது.

அதன் பிறகு விக்னேஷ் சிவன் எழுதிய கதை சொல்லும் அளவிற்கு இல்லை என்பதால் லைக்கா நிறுவனம் மற்றும் அஜித் இணைந்து விக்னேஷ் சிவனை இந்த படத்தில் இருந்து நீக்கினார். இப்படிப்பட்ட நிலையில் அடுத்ததாக மகிழ் திருமேனி இந்த திரைப்படத்தினை இயக்குகிறார் எனவும் படக்குழுவினர் சென்னை புறநகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலின் முன் தயாரிப்பு வேலைகளில் முப்புரமாக ஈடுபட்டு வருகிறார் எனவும் கூறப்படுகிறது.

எனவே தற்பொழுது ஏகே 62 திரைப்படத்தில் முக்கிய வில்லனாக அருண் விஜய் நடிக்க இருப்பதாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாக தகவல் வெளியானது. இதற்கு முன்பு அஜித்துக்கு வில்லனாக அருண் விஜய் என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி நடைபெற்ற நிலையில் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

மேலும் அருண் விஜய் இயக்குனர் பாலாவுடன் வணங்கான் திரைப்படத்தில் கைக்கோர்த்துள்ளார். அதாவது பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வணங்கான் படம் உருவான நிலையில் பிறகு இந்த படத்திலிருந்து சூர்யா வெளியேறினார் எனவே சூர்யாவிற்கு பதிலாக அருண் விஜய் ஒப்பந்தமாகியுள்ளார் இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் 9ஆம் தேதி தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

எனவே இந்த காரணத்தினால் ஏகே 62 திரைப்படத்தில் அருண் விஜய் விலகினாராம். மேலும் மகிழ் திருமேனி நடிகர் ஆர்யாவை அணுகியுள்ளார் இதற்கு முன்பு ஆரம்பம் படத்தில் ஆர்யாவும், அஜித்தும் இணைந்து நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக ஆரியாவிடம் கேட்ட நிலையில் தற்போது பா. ரஞ்சித்துடன் இணைந்து சார்ப்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாவது பக்கத்தில் நடிக்க இருக்கும் நிலையில் எந்த அளவிற்கு சாத்தியம் என தெரியவில்லை. எனவே ஏகே 62 படத்தில் யார் வில்லனாக நடிப்பார் என தெரியாமல் இருந்து வரும் நிலையில் விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

அதை தொடர்ந்து தற்போது அஜித்தும் இந்த நிறுவனத்திற்காக நடிக்க இருப்பது மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இது மட்டுமல்லாமல் அஜித் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் சேர்வது பற்றியும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. ரஜினியை வைத்து ஜெயிலர் திரைப்படத்தை தயாரித்து வரும் சன் பிக்சர்ஸ் அடுத்ததாக அஜித்துடன் இணைய முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறது.

இதைத்தொடர்ந்து அஜித், தயாநிதி அழகிரி தயாரிக்க இருக்கும் படத்திலும் நடிக்க இருக்கிறாராம். ஏற்கனவே இவர்களின் கூட்டணியில் மங்காத்தா திரைப்படம் வெளிவந்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. வெங்கட் பிரபு இயக்கியிருந்த அந்த திரைப்படத்தில் அஜித் ஆன்ட்டி ஹீரோவாக நடித்திருந்தார்.

அஜித்துக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய அந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக இருக்கிறது. இது குறித்து ஏற்கனவே அஜித் மற்றும் தயாநிதி அழகிரி இருவரும் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கின்றனர். அப்போது அவர்கள் குடும்பத்துடன் இணைந்து இருந்த புகைப்படம் கூட வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அதற்கான வேலைகளும் தற்போது சுறுசுறுப்பாக ஆரம்பிக்கப்பட இருக்கிறது.


அந்த வகையில் அஜித் அடுத்தடுத்து ஐந்து திரைப்படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளார். வலிமை திரைப்படம் நீண்ட வருடங்கள் இழுத்துவிட்டபடியால் அவர் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளாராம். அதனால் அஜித்தின் ஆட்டம் ஆரம்பித்துள்ளது என்று கோலிவுட்டில் பேசி வருகின்றனர். இது அவருடைய ரசிகர்களுக்கும் இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது.


இதுவரை, அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பாளராகவும், துனிவுவில் பணிபுரிந்த ஒளிப்பதிவாளர் நிரவ் ஷாவும் இந்த திட்டத்திற்காக இணைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் படத்தின் நாயகியாக காஜல் அகர்வால் இருப்பார் என்று உள்நாட்டில் இருந்து சில ஊக அறிக்கைகள் கூறுகின்றன. அடுத்த வாரத்தில் படத்தை அறிவிக்க மகிழ் திருமேனி படக்குழுவினர் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், தலைப்பை விதிவிலக்காக வெளியிட இருப்பதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

சமீபத்திய கதைகள்