28.3 C
Chennai
Thursday, March 23, 2023

அஜித் கண்கலங்கி நின்றார் !! அவருக்கு அப்படி நடந்திருக்கக் கூடாது !மெய் சிலிர்த்து போன பிரபலம்

Date:

தொடர்புடைய கதைகள்

இணையத்தில் வைரலாகும் லியோ படத்தின் மேக்கிங் வீடியோ இதோ...

விஜய் நடிக்கும் லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருவதாக முன்னதாக...

அபர்ணா பாலமுரளி உடன் ரஜினி உள்ள புகைப்படம் இணையத்தில்...

ரஜினிகாந்த் இந்தியத் திரையுலகின் மிகப்பெரிய பெயர்களில் ஒருவர். மாஸ் ஹீரோ அவரது...

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் புதிய படத்தை...

எஸ்.எஸ்.ராஜமௌலியும் மகேஷ் பாபுவும் விரைவில் இணைந்து பணியாற்றவுள்ளனர். 2023-ம் ஆண்டின் இறுதியில்...

வெங்கட் பிரபுவுடன் இணையும் சிவகார்த்திகேயனின் புதிய படத்தை பற்றிய...

சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபுவுடன் ஒரு நேர்த்தியான ஆக்‌ஷன் என்டர்டெய்னரில் இணையவிருப்பதால், சிவகார்த்திகேயனின்...

சலார் படத்தை ஆங்கிலத்திலும் டப் செய்யப்பட படக்குழு முடிவு...

பிரபாஸ் நடித்த சாலார் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும்,...

ஏகே 62 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், அஜித் புதிய முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ மற்றும் ‘துணிவு’ ஆகிய மூன்று படங்களில் தொடர்ந்து எச்.வினோத்துடன் அஜீத் இணைந்து நடித்தார், இவை அனைத்தும் போனி கபூர் தயாரித்தவை.

நடிகர் அஜித்தும் அவரது மனைவி ஷாலினியும் தனது வீட்டு வாசலில் இரண்டரை மணி நேரம் காத்திருந்ததாக தயாரிப்பாளர் தாணு தெரிவித்திருப்பது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.சினிமாவில் யாருடைய துணையும் இல்லாமல் நுழைந்தவர் அஜித்குமார். அமராவதி படத்தில் கதாநாயகனாக அறிமுகமான அஜித் ஆரம்பத்தில் பெரும் சோதனைகளை சந்தித்தவர். இருப்பினும் சுதாரித்துக்கொண்ட அவர் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக்கொண்டார்.

90களில் களமிறங்கிய அஜித் இப்போது கோலிவுட்டின் டாப் 5 ஹீரோக்களில் ஒருவர். தனது கேரியரின் ஆரம்பகாலத்தில் ஆசை, காதல் மன்னன், காதல் கோட்டை, வாலி என பல ஜானர்களில் நடித்தவர். குறிப்பாக தான் வளர்ந்துவரும் நேரத்திலேயே வாலி படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்து அசத்தினார். அதுவரை யாரும் செய்யாத ரிஸ்க் என்று பலரும் கூறுகின்றனர். தொடர்ந்து தோல்விகள், வெற்றிகள் என மாறி மாறி கொடுத்த அஜித் சமீபத்தில் துணிவு படத்தில் நடித்தார். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது.

நடிகர்கள் அனைவரும் தங்களை வெளிப்படுத்திக்கொள்ளவே முயல்வார்கள். அதுதான் அவசியமும்கூட என்ற விதியும் இருந்தது. அஜித்தும் ஆரம்பத்தில் பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுப்பது, நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது என வழக்கமான நடிகர்கள் போலவே இருந்தார். ஆனால் அவருக்கு நடந்த சில விரும்பத்தகாத நிகழ்வுகளால் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதோ, பேட்டிகள் கொடுப்பதோ, படத்தின் ப்ரோமோஷனில் பங்கெடுப்பதோ இல்லை. அவரது இந்த ஃபார்முலா அஜித்தின் ரசிகர்களால் கொண்டாடப்பட்டாலும் சிலரால் விமர்சிக்கவும்படுகிறது. ஆனால் தனது வேலை நடிப்பது மட்டும்தான் என்பதில் தெளிவாக இருக்கிறார் அஜித். அதேசமயம் ஏதேனும் ஒரு துக்கம் நிகழ்ந்தால் அதில் பெரும்பாலும் பங்கெடுத்துக்கொள்கிறார் அஜித்.

இந்நிலையில் தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளர்களில் ஒருவரான கலைப்புலி எஸ்.தாணு அஜித் குறித்து சொல்லியிருக்கும் விஷயத்தை அவரது ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர். அஜித் குறித்து பேசிய தாணு, ‘எனது மனைவி சிங்கப்பூரில் உயிரிழந்துவிட்டார். அவரது உடலை தமிழ்நாட்டுக்கு கொண்டுவருவதற்கு நீண்ட நேரம் ஆனது. அந்த சமயத்தில் எனது வீட்டுக்கு வந்த அஜித்தும், ஷாலினியும் வாசலிலேயே இரண்டரை மணி நேரம் காத்திருந்தார்கள்’ என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருக்கிறார். இதனை தெரிந்துகொண்ட அஜித் ரசிகர்கள் எந்தெந்த விஷயத்தில் கலந்துகொள்ள வேண்டும் என அஜித்திற்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது என சமூக வலைதளங்களில் கூறிவருகின்றனர்.

கலைப்புலி தாணு பிரபலமான தயாரிப்பாளர் ஆவார். இவர்தான் ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை முதல்முதலாக வழங்கியவர். ரஜினி, கமல், விஜய் என பல முன்னணி ஹீரோக்களின் படங்களை தயாரித்தவர். இவர் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் வாடிவாசல் படத்தை தயாரிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இவர் தயாரித்த அசுரன் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

எனவே இதுவரை இல்லாத வகையில் ‘ஏகே 62’ படத்தின் தலைப்பை வெளியிட திட்டமிட்டுள்ளனர். விஜய்யின் ‘லியோ’ படத்தின் தலைப்பு அறிவிப்பு வீடியோவான ‘ப்ளடி ஸ்வீட்’ பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதால், அதேபோன்ற வீடியோவும் வேலையில் இருப்பதாக கூறப்படுகிறது. மகிழ் திருமேனி மற்றும் அவரது உதவி இயக்குனர்கள் இதற்காக கடுமையாக உழைத்து வருவதாகவும், அடுத்த வாரத்தில் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய கதைகள்