28.9 C
Chennai
Monday, March 20, 2023
Homeசினிமாஅதிரடியாக அடுத்த படத்தின் ஹீரோ மற்றும் கதையை அறிமுகப்படுத்திய இயக்குனர் மோகன் ஜி.!

அதிரடியாக அடுத்த படத்தின் ஹீரோ மற்றும் கதையை அறிமுகப்படுத்திய இயக்குனர் மோகன் ஜி.!

Date:

தொடர்புடைய கதைகள்

சூர்யா ரூ.70 கோடிக்கு புதிய சொகுசு வீட்டை வாங்கிய...

சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி சூப்பர்ஸ்டார்களில் ஒருவர், அவர் தனது நடிப்புத்...

அந்த அளவுக்கு சொல்லியும் பிரம்மாண்ட இயக்குனருக்கு நோ சொல்லி...

அஜித்தின் புதிய படம் குறித்து பெரும் பரபரப்பு நிலவி வருகிறது, மேலும்...

‘சொர்கவாசல்’ படத்தில் ஆர்.ஜே.பாலாஜி படத்தில் இணைந்த செல்வராகவன்!

ஆர்ஜே பாலாஜி கடைசியாக 'ரன் பேபி ரன்' திரைப்படத்தில் நடித்தார், இது...

ரஜினி மகள் வீட்டில் கொள்ளை பெரும் பரபரப்பு !...

பழம்பெரும் நடிகர் ரஜினிகாந்தின் மகளும், திரைப்பட தயாரிப்பாளருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனது...

மியூசிக் அகாடமி பாம்பே ஜெயஸ்ரீக்கு ‘சங்கீத கலாநிதி’ விருதை...

இந்த ஆண்டுக்கான சங்கீத கலாநிதி மற்றும் பிற விருதுகளை மியூசிக் அகாடமி...

தமிழ் சினிமாவில் சமூகத்திற்கு நல்ல கருத்தினை கூறும் திரைப்படங்களை தொடர்ந்து இயக்கி வருபவர் தான் பிரபல இயக்குனர் மோகன் ஜி. இவருடைய இயக்கத்தில் செல்வராகவன் நடிப்பில் சமீபத்தில் பகாசூரன் திரைப்படம் வெளியான நிலையில் இந்த படம் கலவை விமர்சனத்தை பெற்றது இருந்தாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்றதாக கூறப்படுகிறது.

இவ்வாறு இந்த படத்தினை தொடர்ந்து தன்னுடைய அடுத்த படம் குறித்த தகவலை மோகன் ஜி வெளியிட்டு இருக்கும் நிலையில் அந்த படத்தின் ஹீரோவையும் தன்னுடைய சமூக வலைதளத்தின் மூலம் தெரிவித்துள்ளார். அந்த தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பழைய வண்ணாரப்பேட்டை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர்தான் மோகன் ஜி.

இந்த திரைப்படத்தினை தொடர்ந்து திரௌபதி என்ற திரைப்படத்தினை இயக்கியிருந்தார். இந்த படம் இவருக்கு மிகப்பெரிய ஒரு இமேஜை தந்தது. சமூகத்திற்கு நல்ல கருத்தினை கூறும் வகையில் அமைந்த நிலையில் இதனை அடுத்து ருத்ர தாண்டவம் மற்றும் பகாசூரன் போன்ற திரைப்படங்களை தந்து சமூகத்தில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறார் மேலும் இந்த இரண்டு படங்களும் வசூலையும் குவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு பகாசூரன் திரைப்படம் கலவை விமர்சனத்தை பற்றி நிலையில் தற்போது தன்னுடைய அடுத்த பட பணிகளை தொடங்கியுள்ளார் இயக்குனர் மோகன் ஜி. அதாவது இது குறித்து இவர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கூறி இருப்பதாவது, இவர் யார் என்று தெரிகிறதா.? காசி கங்கா ஆரத்தியின் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம்.. எல்லா கடவுளையும் வணங்குபவர் ரிச்சர்ட் ரிஷி சார்.. நீங்களா ஏதாவது கிளப்பி விடாதீங்க.. அப்புறம் ஒரு முக்கியமான செய்தி, என்னோட அடுத்த படத்தின் கதாநாயகன் ரிச்சர்ட் சார் தான்.. அறிவிப்பு விரைவில்.. என தெரிவித்துள்ளார்.

நடிகர் ரிச்சர்ட் இதற்கு முன்பு பல திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில் முக்கியமாக இவர் அஜித் மனைவி ஷாலினியின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மோகன் ஜியின் அடுத்த பட நடிகர் ரிச்சர்ட் என தெரியவந்துள்ள நிலையில் மேலும் இந்த படம் காசி கங்கை கதைக்களத்தை மையமாக வைத்து உருவாக இருக்கிறது.

சமீபத்திய கதைகள்