Wednesday, April 17, 2024 9:06 pm

விஷாலை தொடரும் விபத்துகள்.. மருத்துவமனையில் ஒருவர் அனுமதி மார்க் அன்டனி பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நடிகர் விஷால் நடித்துவரும் மார்க் ஆண்டனி படத்தின் படப்படிப்பு தளத்தில் இரண்டாவது முறையாக விபத்து நடந்திருப்பது அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.செல்லமே படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் விஷால். தயாரிப்பாளரின் குடும்பத்திலிருந்து சினிமாவுக்கு வந்தாலும் தனக்கென திறமையை வளர்த்துக்கொண்டதால் சினிமாவில் தனித்து ஜொலிக்கிறார் விஷால்.

செல்லமே படம் ஹிட்டானதை அடுத்து தொடர்ந்து படங்களில் நடித்த விஷாலுக்கு சண்டக்கோழி படம் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது. அந்தப் படத்தில் விஜய்தான் முதலில் நடிக்கவிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் படத்தில் விஷாலின் நடிப்பை பார்த்த பலரும் மிகப்பெரிய கமர்ஷியல் ஹீரொவோக வலம் வருவார் என ஆரூடம் கூறப்பட்டது. அதேபோல் அவர் நடித்த தாமிரபரணி, திமிரு உள்ளிட்ட படங்களும் ஹிட்டடித்தன.

ஆனால் இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை சில படங்கள் ஹிட்டாவதும் சில படங்கள் தோல்வியடைவதும் என அவரது கிராஃப் ஏறி, இறங்கி சென்றது. ஒருகட்டத்தில் ஹிட் படத்துக்கே தடுமாற ஆரம்பித்தார் விஷால். தற்போது அவரிடம் சென்று உங்களின் கடைசி ஹிட் படம் என்னவென்று கேட்டால் அவரே யோசித்து பதில் சொல்லும் அளவுக்கு அவர் ஹிட் படம் கொடுத்து பல வருடங்கள் ஆகிவிட்டன என ரசிகர்கள் கமெண்ட் செய்துவருகின்றனர். சமீபத்தில் நடித்த லத்தி படமும் ஹிட்டாகாததால் விஷால் இப்போது தடுமாறிக்கொண்டிருக்கிறார்.

இந்தச் சூழலில் அவர் ஆதிக் ரவிச்சதிரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி என்ற படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தில் அவருடன் எஸ்.ஜே.சூர்யா, ரிது வர்மா, சுனில் உள்ளிட்டோர் நடித்துவருகின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். மார்க் ஆண்டனி படமாவது தனக்கு ஹிட் படமாக அமைய வேண்டும் என பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறார் விஷால். இது அவருக்கு 33ஆவது படமாகும்.

மேலும் மார்க் ஆண்டனி படமானது பான் இந்தியா படமாக உருவாகிவருவது குறிப்பிடத்தக்கது. இதன் படப்பிடிப்பு சென்னைக்கு அருகே ஈவிபி பிலிம் சிட்டியில் செட் போட்டு விறுவிறுப்பாக நடந்துவருகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பாக செட்டில் இருந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து செட் மீது மோதி நிற்காமல் சென்றது. நல்வாய்ப்பாக செட்டில் இருந்த 100 பேரும் விபத்தை சந்திக்காமல் தப்பினர்.

இந்நிலையில் மார்க் ஆண்டனி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் மீண்டும் ஒரு விபத்து ஏற்பட்டுள்ளது. அதே ஈவிபி பிலிம் சிட்டியில் ஷூட்டிங் நடைபெற்ற சூழலில் செட்டில் இருந்த லைட் கம்பம் ஒன்று லைட்மேனின் தலையில் விழுந்தது. இதில் அவர் காயம் அடைந்தார். இதனையடுத்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

சில நாள்களுக்கு முன்பு நடந்த விபத்தின் பேச்சே இன்னும் அடங்காத சூழலில் மீண்டும் அதே படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக கோலிவுட்டினர் கூறுகின்றனர். மேலும், ஒரு விபத்து நடந்த பிறகு அது தொடராமல் இருப்பதற்கு படக்குழுவினரும், தயாரிப்பு தரப்பும் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டாமா? அங்கு என்னதான் நடந்துகொண்டிருக்கிறது என கேள்வி எழுப்பும் அவர்கள், சினிமாக்காரர்களுக்கு ஒன்று என்றால் நான் கேள்வி கேட்பேன் என கூறும் விஷால் இதற்கெல்லாம் என்ன பதில் சொல்லப்போகிறார் எனவும் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்