Thursday, March 30, 2023

AK62 படத்துல இதெல்லாம் இருக்கக் கூடாது.. அஜித் போட்ட அதிரடி கண்டிஷன்

Date:

தொடர்புடைய கதைகள்

அஜீத்துக்காக 10 வருடமாக கதை எழுதி காத்திருக்கும் ...

AK62 மே மாதம் முதல் அதன் வழக்கமான படப்பிடிப்பைத் தொடங்கும். இந்த...

கைது வாரண்ட்டை தள்ளுபடி செய்யக்கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் யாஷிகா...

யாஷிகா ஆனந்த் இறுதியாக மார்ச் 27 அன்று தனது 2021 விபத்து...

உண்மையிலேயே லாங் பைக் ரைடுகளை மிஸ் பண்ணுகிறேன் கவுதம்...

நடிகர் கௌதம் கார்த்திக் தனது ‘பாத்து தலை’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார்,...

ஒட்டுமொத்த இந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தில் ...

இந்த ஆண்டின் தொடக்கத்தில் துனிவு படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற...

சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ...

இந்த ஆண்டு திரைக்கு வரவிருக்கும் சுவாரஸ்யமான படங்களில் ஒன்றாக மாறி வரும்...

அஜித்தின் அடுத்த படத்தை தயாரிப்பதில் நீண்ட நாட்களாக நிலவி வந்த குழப்பம் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது. இயக்குனர் மகிழ் திருமேனி AK62 படத்தை இயக்கவுள்ளார், மேலும் இந்த திட்டத்தின் பூஜை நேற்று லைகா புரொடக்ஷன்ஸ் அலுவலகத்தில் குறைந்த அளவிலான பங்கேற்பாளர்களுடன் நடந்தது. ஏகே62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் வெளியிடப்படாத காரணங்களால் படத்தயாரிப்பாளர் திட்டத்தில் இருந்து விலகினார்.

அஜித்தின் 62-வது திரைப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கவுள்ளதாகவும், படத்தை லைக்கா தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால், இன்னும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

இதனால் எப்போது ak62 படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். இதற்கிடையில், அஜித்திடம் இயக்குனர் மகிழ் திருமேனி கூறிய கதை எந்த மாதிரி கதைகள் என்பது குறித்த ஒரு தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

அது என்னவென்றால், மகிழ் திருமேனி அஜித்திடம் 2 கதைகள் கூறியுள்ளாராம். அதில் 1 கதை குடும்ப சென்டிமென்ட் கதை எனவும். ஆனால், அதிலே கொஞ்சம் கொஞ்சம் ஆக்சன் காட்சிகள் இருக்கும் எனவும், ஒரு நல்ல கமர்ஷியல் படமாக இருக்கும் எனவும் ஒரு கதையை கூறியுள்ளார்.

மற்றோரு கதை ஸ்பை த்ரில்லர் கதை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது, மேலும் மகிழ் திருமேனி கூறிய இந்த இரண்டு கதைகளுமே அஜித்திற்கு மிகவும் பிடித்துவிட்டதாகவும் சினிமா வட்டாரத்தில் கிசு கிசுக்கப்படுகிறது. இதில் எந்த கதை ak62 படமாக உருவாக போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இது ஒருபுறமிருக்க தல அஜித் அஜித் 62 படத்தின் ஆரம்பத்திலேயே மகிழ்திருமேனிக்கு சில கண்டிஷன்கள் வைத்ததாக ஒரு தகவல் தற்போது கிடைத்துள்ளது. கடந்த சில வருடங்களாகவே அஜித் தொடர்ந்து போலீஸ் கதைகளில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார் என்பது தெரிந்த ஒன்றுதான்.

இன்னும் சொல்ல வேண்டும் என்றால் ஒரு படம் விட்டு ஒரு படம் போலீஸ் கதையில்தான் நடிக்கிறார். அந்த வகையில் அஜித் 62 படமும் ஒரு மிரட்டலான போலீஸ் கதையில் உருவாகி உள்ளது. ஆனால் இந்த கதையின் ஆரம்பத்திலேயே அஜித் மகிழ்திருமேனியிடம் சில முக்கியமான விஷயங்களை இந்த படத்தில் சேர்க்கக்கூடாது என கூறியுள்ளார்.

அது என்னவென்றால், மொத்த போலீஸ் செய்யும் இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் வைப்பதோ, அல்லது தனி நபர் தாக்குதல் இல்லை அரசியல் சர்ச்சைக்குரிய வசனங்களை இந்த படத்தில் சுத்தமாக இருக்க கூடாது என கூறிவிட்டாராம் அஜித். யாரையும் தேவையில்லாமல் சீண்டி பகைத்துக் கொள்ளக்கூடாது என்பது தல அஜித் கடைபிடிக்கும் பழக்கங்களில் ஒன்று.

அது தேவையில்லாமல் தன்னுடைய சினிமா கேரியரை கெடுத்துவிடும் என்பதால் அஜித் தொடர்ந்து தன்னுடைய படங்களில் இந்த மாதிரி விஷயங்களை ஆரம்பத்திலேயே இயக்குனர்களிடம் தவிர்க்கச் சொல்லி விடுவாராம்.

இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது மார்ச் முதல் வாரத்தில் இப்படம் குறித்த முழு அளவிலான அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிடவுள்ளது. ஆனால் தற்போது அஜித்துடன் வேதாளம் மற்றும் விவேகம் படங்களில் பணியாற்றிய இசையமைப்பாளர் அனிருத் மீண்டும் நடிகருடன் இணையவிருப்பது உறுதியாகியுள்ளது. அஜித்துடன் பில்லா, நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் சமீபத்திய துணிவு ஆகிய படங்களில் ஒத்துழைத்த ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, AK62 படத்திலும் பணியாற்றவுள்ளார்.

படத்தின் நடிகர்கள் மற்றும் வகை பற்றிய தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. மார்ச் மாதத்தில் திட்டத்தின் தலைப்பு அறிவிப்புடன் அவை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மகிழ் திருமேனி கடைசியாக உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான படம் ‘கலக தலைவன்’. தீய கார்ப்பரேட்டுகளுக்கு எதிராகப் போரிடும் ஒரு விழிப்புணர்வின் பயணத்தைத் தொடரும் திரில்லர்.

சமீபத்திய கதைகள்